Stock News: பங்குச் சந்தை சாதனை உயர்வுடன் தொடங்கி பின்னடைவு - காரணம் என்ன?
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழனன்று (4-04-2024) வர்த்தகத்தை அனைத்து கால உயர்வுடன் தொடங்கி பிறகு மீண்டும் குறையத் தொடங்கியது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழனன்று (4-04-2024) வர்த்தகத்தை அனைத்து கால உயர்வுடன் தொடங்கி பிறகு மீண்டும் குறையத் தொடங்கியது.
சென்செக்ஸ் 492.54 புள்ளிகள் அல்லது 0.67% அதிகரித்து 74.369.40 புள்ளிகளுடன் இருந்தது. அதே போல், நிப்டி குறியீடு 114.60 புள்ளிகள் அல்லது 0.64% உயர்வு கண்டு 22,579.30 புள்ளிகளுடன் உள்ளது.
ஆனால், இந்த உயர்வு நிலை சற்று முன் நிலவரப்படி, சற்றே சரிவு கண்டு தற்போது சென்செக்ஸ் 73,864 புள்ளிகளுடனும் நிப்டி 22,419 புள்ளிகளுடனும் உள்ளது.
இன்றைய வர்த்தக தொடக்க நிலவரங்களின் படி, பவர் இண்டெக்ஸ் 1% அதிகரிப்பு கண்டுள்ளது. நிப்டி பேங்க் குறியீடு 0.5% அதிகரிப்பு கண்டுள்ளது. நிப்டி எனர்ஜி துறைப் பங்குகள் 187.60 புள்ளிகள் அதிகரித்துள்ளன. நிப்டி ஐடி மற்றும் பிஎஸ்இ ஸ்மால் கேப் அதிகரிப்புடன் தொடங்கியுள்ளன.
ஏறி இறங்கியதற்கானக் காரணம்:
முதலில் பங்கு வர்த்தகத்தில் குறியீடுகளின் புள்ளிகள் ஏறியதற்குக் காரணம் ஹெச்.டி.எஃப்.சி. வங்கிப் பங்குகள் பெரிய அளவில் ஏற்றம் கண்டதால் நிகழ்ந்தது. இதோடு நிப்டி வங்கி, நிப்டி பைனான்சியல் சர்விசஸ் பங்களிப்பும் அதிகரித்ததற்குக் காரணமாக இருந்தது. ஆனால், எஃப்.எம்.சி.ஜி, ஆட்டோ, மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் பங்குகள் சரிவடைந்ததால் அது பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த குறியீடுகளையும் பிற்பாடு பாதித்துக் குறைவுக்கு இட்டுச் சென்றது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஹெச்.டி.எஃப்.சி.
கே.இ.சி. இண்டர்நேஷனல்
அவென்யூ சூப்பர் மார்க்கெட்
வர்தமான் டெக்ஸ்ட்
அதானி பவர்
என்.டி.பி.சி.
இறக்கம் கண்ட பங்குகள்:
ரிலையன்ஸ்
இன்பொசிஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 83.44 ஆக உள்ளது.