Stock News: பங்குச்சந்தையில் அதிரடி மாற்றம்; சென்செக்ஸ் 380 புள்ளிகள், நிஃப்டி 100 புள்ளிகள் உயர்வு!
இந்திய பங்குச்சந்தையானது இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தையானது இன்று புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (05/06/2023):
வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தையானது புதிய உச்சத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 389.41 புள்ளிகள் உயர்ந்து 62,929 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 102.25 புள்ளிகள் உயர்ந்து 18,636 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம்:
இந்திய பங்குச்சந்தையில் முக்கிய துறையான வங்கி மற்றும் ஆட்டோ பங்குகள் 0.5 சதவீதம் வரை உயர்ந்ததுள்ளது. ஜூன் 8 ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் கூட்டத்தின் முடிவுகளை முதலீட்டாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதும், ஆசிய பங்குச்சந்தைகள் அனைத்தும் பச்சை வண்ணத்தில் வர்த்தகமாகி வருவதும் இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
ஆக்சிஸ் பேங்க்
மஹிந்திரா & மஹிந்திரா
ஐசிஐசிஐ பேங்க்
பவர் கிரிட்
டாடா மோட்டார்ஸ்
சன் பார்மா
லார்சன் & டூப்ரோ
ஐடிசி
அல்ட்ராடெக் சிமெண்ட்
என்டிபிசி
இறக்கம் கண்ட பங்குகள்:
டெக் மஹிந்திரா
ஏசியன் பெயிண்ட்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
இண்டஸ்இண்ட் பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு: அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து 82.53 ஆக உள்ளது.