Stock News: பங்குச்சந்தை நிலவரம் - சென்செக்ஸ், நிப்டி புள்ளிகள் உயர்வு!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையன்று (16-05-2024) தொடக்கத்தில் உயர்வு கண்டன. சென்செக்ஸ் தொடக்க நிலவரப்படி 300 புள்ளிகள் அதிகரித்து பிறகு மெல்ல பின்னடைவு கண்டுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வியாழக்கிழமையன்று (16-05-2024) தொடக்கத்தில் உயர்வு கண்டன. சென்செக்ஸ் தொடக்க நிலவரப்படி 300 புள்ளிகள் அதிகரித்து பிறகு மெல்ல பின்னடைவு கண்டுள்ளது.
பி.எஸ்.இ. சென்செக்ஸ் குறியீடு சுமார் 306 புள்ளிகள் அதிகரித்து 73,293 ஆக உள்ளது. அதே போல், தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 90 புள்ளிகள் அதிகரித்து 22,290 புள்ளிகளாக இருந்தது.
இதோடு மட்டுமல்லாமல் நிப்டி பேங்க் குறியீடு சரிவுத் தொடக்கம் காண நிப்டி ஐடி குறியீடு 301 புள்ளிகள் அதிகரித்து 33,418 புள்ளிகளுடனும் மும்பைப் பங்குச் சந்தையின் பிஎஸ்இ ஸ்மால் கேப் குறியீடு 286 புள்ளிகள் அதிகரித்து, 46,831புள்ளிகளுடன் உள்ளது.

காரணங்கள்:
இன்றைய தினம் உலகப் பங்குச் சந்தையின் ஆரோக்கியமான முதலீட்டு நாளாக அமைந்திருப்பதாலும் ஆசியப் பங்குச் சந்தைகளின் உயர்வினாலும், மும்பைப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடுகள் நல்ல நிலையில் சென்று கொண்டிருப்பதாலும் இன்று புள்ளிகள் அதிகரித்துள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
டெக் மகீந்திரா
விப்ரோ
பார்தி ஏர்டெல்
இறக்கம் கண்ட பங்குகள்:
பவர் கிரிட்
மாருதி சுசுகி,
டாடா மோட்டார்ஸ்
எல் அண்ட் டி
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ. 83.47ஆக உள்ளது.