Stock News: தேர்தல் முடிவுகள் எதிரொலி - இந்தியப் பங்குச்சந்தைகளில் அனைத்துக் குறியீடுகளும் கடும் சரிவு!
மும்பைப் பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04-06-2024) கடும் சரிவு கண்டுள்ளன. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் சென்செக்ஸ் 2000 புள்ளிகள் சரிவடைந்துள்ளது. நிப்டி 600 புள்ளிகளுக்கும் மேல் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று சற்று முன் நிலவரப்படி, 1738 புள்ளிகள் அல்லது 2.27 சதவீதம் சரிவடைந்து 74730.27 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு 515.05 புள்ளிகள் சரிவு கண்டு 22748.75 புள்ளிகளாகவும் உள்ளன.
சென்செக்ஸ் தொடங்கி 15 நிமிடங்களிலேயே முதலீட்டாளர்களுக்கு 9 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போ நிப்டி பேங்க் குறியீடு மட்டும் 1,725 புள்ளிகளும் எந்த நிலையிலும் உயர்வுப்பாதையில் செல்லும் மும்பைப் பங்குச் சந்தையின் ஸ்மால் கேப் குறியீடு இன்று 1220 புள்ளிகளும் நிப்டி ஐடி குறியீடு 47 புள்ளிகளும் சரிவுடன் தொடங்கியுள்ளன.
காரணங்கள்:
தேர்தல் முடிவு குறித்த கருத்துக் கணிப்புகள் அளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குச் சாதகமாக அமைந்ததால் நன்றாக உயர்ந்த சந்தைகள் இன்று தேர்தல் முடிவுகள் பதற்றத்தினால் குறைந்துள்ளன.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஹெச்.யு.எல்.
இறக்கம் கண்ட பங்குகள்:
அதானி எண்டர்பிரைசஸ்
எஸ்பிஐ
அதானி போர்ட்ஸ்
எச்.டி.எஃப்.சி. பேங்க்
இந்திய ரூபாயின் மதிப்பு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பின்னடைவு கண்டு இன்று ரூ. 83.36 ஆக உள்ளது.