மறைந்திருக்கும் ஃப்ரீலான்சிங் வேலை வாய்ப்புகளை கண்டறியும் Sniff சேவை- 23 வயது இளைஞரின் உருவாக்கம்!
23 வயதே ஆன இளைஞர், ஃப்ரிலான்சர் வேலைத்தேடலை எளிதாக்கும் வகையில், சமூக ஊடக தனி குழுக்களில் மறைந்திருக்கும் வேலைகளை ஏஐ துணை கொண்டு தேடும் சேவையை உருவாக்கியுள்ளார்.
போட்டி மிகுந்த ஃப்ரிலான்சிங் பணி உலகில் பொருத்தமான வேலைகளை தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போல சிக்கலானது. அப்வொர்க், ஃப்ரிலான்சர் மற்றும் லிங்க்டுஇன் போன்ற மேடைகள் பிரபலமாக இருந்தாலும், சமூக ஊடகங்கள் மற்றும் தனி குழுக்களில் பதிவு செய்யப்படும் வேலைவாய்ப்புகளை இவை பட்டியலிடுவதில்லை. இந்த வேலைகள் மறைந்தே இருக்கின்றன. இந்த இடத்தில் தான் ஸ்னிப் (Sniff) அறிமுகமாகிறது.
ஃப்ரிலான்சராக ஏழு ஆண்டு அனுபவம் கொண்ட யாசீன் அம்மார் உருவாக்கியுள்ள இந்த ஏஐ சேவை, ஃப்ரிலான்சர்கள் வேலை தேடும் விதத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாக இருக்கிறது.
ஃபிரிலான்சர் டூ புதுமையாக்கம்: யாசீனின் பயணம்
23 வயதில் யாசீன் அப்வொர்க், லங்க்டுஇன் போன்ற மேடைகளில் ஏழு ஆண்டு அனுபவம் கொண்டிருக்கிறார். வெற்றிகரமான ஃப்ரிலான்சராக இருந்த போதிலும், பொருத்தமான வேலைவாய்ப்புகளை கண்டறிவதை சிக்கலாக உணர்ந்தார்.
மேலும், டெலிகிராம், டிஸ்கார்டு, வாட்ஸ் அப் தனிக்குழுக்களில் மறைந்திருக்கும் வேலைகளை தேடுவதும் கடினமாக இருந்தது. இதன் காரணமாக, ஏஐ துணை கொண்டு மறைந்திருக்கும் வேலைவாய்ப்புகளை தேடும் ஸ்னிப் சேவையை உருவாக்கினார்.
Sniff சேவை?
ஏஐ துணையோடு செயல்படுமம் ஸ்னிஃப் சேவை, சமூக ஊடக மேடைகள், தனிக்குழுக்களில் மறைந்திருக்கும் வேலைவாய்ப்புகளை தேட வழி செய்கிறது. வழக்கமான வேலைவாய்ப்புகளை பட்டியலிடும் தளங்கள் போல அல்லாமல், ஸ்னிஃப் டெலிகிராம், வாட்ஸ் அப் போன்ற சேனல்களில் தேடுகிறது.
இந்த மேடை, தினமும் 1000 வேலைவாய்ப்புகள் வரை பட்டியலிடுகிறது. தேவையற்ற வேலைகளை வடிகட்டி பொருத்தமான வாய்ப்புகளை சுட்டிக்காட்டுகிறது. சாட்ஜிபிடி போன்ற நட்பான இடைமுகத்துடன் இந்த மேடை செயல்படுகிறது. பிரிலான்சர்கள் பிராம்ட் வடிவில் வேலைகளை தேடலாம்.
ஸ்னிப் செயல்படும் விதம்
ஸ்னிப்பை பயன்படுத்துவது மிகவும் எளிது. கேள்வி வடிவில் பிராம்ட் அளிக்கலாம். பிரிலான்சர்கள் தங்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகள் பற்றி குறிப்பிட்டு உடனடியாக பதில்களை பெறலாம்.
உதாரணம்:
பிராம்ட்: "இ-காமர்ஸ் தளம் உருவாக்கும் வெப் டெவலப்பர் பணி தேவை”.
பதில்: " இ-காமர்ஸ் தளம் உருவாக்கும் வெப் டெவலப்பர் பணி கள் பலவற்றை கண்டறிந்துள்ளேன்”.
வேலை வாய்ப்புகள்:
பிராம்ட் : "புதிய சேவை அறிமுகத்திற்கான மார்க்கெட்டிங் ஆலோசகர் வேலை தேவை”.
பதில்: "புதிய சேவை அறிமுகத்தில் கவனம் செலுத்தும் சில மார்க்கெட்டிங் ஆலோசகர் பணிகளை கண்டறிந்துள்ளேன்”.
அதிகாரப்பூர்வமில்லாத பதிவுகளில் தேடுவதன் மூலம், ஃப்ரிலான்சர்கள் கண்ணில் பட வாய்ப்பில்லாத வேலை வாய்ப்புகளை ஸ்னிப் கண்டறிகிறது.
மறைந்திருக்கும் வேலைவாய்ப்புகள்
ஃப்ரிலான்சர்கள் சந்தை மிகவும் பெரிது. தற்போது 2 லட்சம் கோடி டாலர் என உள்ளது 2031ல் 5.63 லட்சம் கோடி டாலராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய மேடைகளில், தினமும் 5 லட்சம் வேலைகள் பட்டியலிடப்படுகின்றன. இருப்பினும், சமூக ஊடக குழுக்களில், ஒரு லட்சம் முதல் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் வேலைகள் பட்டியலிடப்படுகின்றன. இவை அறியப்படாத வாய்ப்புகள்.
ஸ்னிஃப் ஆரம்ப பயனாளிகளின் கருத்தும் நல்லவிதமாக உள்ளது. ஒரு சில தொழில்நுட்ப சிக்கலை மீறி, வேலைகளின் தரம் சிறப்பாக இருப்பதாக சொல்கின்றனர். தற்போதைய தரவுகளின் தரம் சீராக உள்ளது என ஒரு பயனாளி கூறுகிறார்.
ஸ்னிஃப் வர்த்தக மாதிரி: ஃப்ரிலான்சர்கள், ஏஜென்சிகள்
ஸ்னிப் இரண்டு வகையான மாதிர்கல் கொண்டுள்ளது: B2B - B2C.
B2B வழி
ஏஜென்சிகள் தங்களுக்கான கோரிக்கைகள் அமைத்து, பொருத்தமான வேலைவாய்ப்புகளை தவறவிடாமல் இருக்கலாம். முழு விவரங்களுடன் ஸ்னிப் வேலை தகவல்களை அனுப்பி வைக்கிறது.
B2C வழி
ஃப்ரிலான்சர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மேம்பட்ட தேடல் வசதியை பயன்படுத்தலாம். சாதாரணமாக தேடுபவர்கள் மற்றும் தீவிர தேடல் கொண்டவர்களுக்கு ஏற்றது.
மறைந்திருக்கும் வேலை வாய்ப்புகள்
நீங்கள் தனிநபர் அல்லது ஏஜென்சி என்றால், மறைந்திருக்கும் வேலைவாய்ப்புகளை தேடலாம். ஏஐ துணை கொண்டு தனி குழுக்களில் உள்ள வேலைவாய்ப்புகளை கண்டறியலாம்.
மேலும் விவரங்கள் அறிய:
இன்றைய வேகமான உலகில், செயல்திறன் மற்றும் துல்லியம் முக்கியமானது. ஸ்னிப் இந்த வகையில் வேலைத்தேடுபவர்களுக்கான புதிய தர நிர்ணயமாக வந்துள்ளது.
ஆங்கிலத்தில்: சானியா அகமது கான்
Edited by Induja Raghunathan