Stock News: தொடர்ந்து அதிர்ச்சி அளிக்கும் பங்குச் சந்தை - அனைத்துக் குறியீடுகளும் ‘ரெட்’
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 9:39 மணி நிலவரப்படி, 390 புள்ளிகள் குறைந்து 80,616.47 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 103 புள்ளிகள் குறைந்து 24,646.55 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் வெள்ளிக்கிழமையான இன்று (18-10-2024) சரிவு கண்டுள்ளன. சென்செக்ஸ் சுமார் 390 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 100 புள்ளிகள் சரிவு கண்டது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 9:39 மணி நிலவரப்படி, 390 புள்ளிகள் குறைந்து 80,616.47 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 103 புள்ளிகள் குறைந்து 24,646.55 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று சற்று முன் சற்றே உயர்ந்து காணப்படுகிறது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு சுமார் 432 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 636 புள்ளிகளும் சரிந்துள்ளன.
காரணம்:
அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதாவது FII முதலீட்டாளர்கள் இந்த மாதம் முழுதும் தொடர்ந்து பங்குகளை விற்று வருவதால் பங்குச் சந்தையில் சரிவு நிலை நீடித்து வருகிறது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஆக்சிஸ் வங்கி
பார்தி ஏர்டெல்
ஐடிசி
ஓ.என்.ஜி.சி.
ஹெச்.சி.எல் டெக்
இறக்கம் கண்ட பங்குகள்:
ஸ்ரீராம் பைனான்ஸ்
மாருதி சுசூகி
இன்ஃபோசிஸ்
மாருதி சுசூகி
பஜாஜ் ஆட்டோ
எம் அண்ட் எம்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.84.06 ஆக உள்ளது.