Stock News: பாய்ச்சலுக்குப் பின் வீழ்ச்சி - பங்குச் சந்தையில் தடுமாற்றம்!
ஒரே நாளில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரை உயர்ந்து பாய்ச்சல் காட்டிய மறுநாளே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை தடுமாற்றம் காணத் தொடங்கியுள்ளது.
ஒரே நாளில் சென்செக்ஸ் 1,500 புள்ளிகள் வரை உயர்ந்து பாய்ச்சல் காட்டிய மறுநாளே மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தை தடுமாற்றம் காணத் தொடங்கியுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.3) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 181.04 புள்ளிகள் சரிந்து 79,762.67 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 56.55 புள்ளிகள் சரிந்து 24,132.10 ஆக இருந்தது.
2025-ம் ஆண்டின் இரண்டாவது வர்த்தக வியாழக்கிழமை பங்குச் சந்தையில் வர்த்தகம் உச்சம் கண்டது. கடந்த டிசம்பர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 7.3% உயர்ந்து ரூ.1.77 லட்சம் கோடியை எட்டியது முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்தது. சென்செக்ஸ் 1,436 புள்ளிகள் (1.83%) உயர்ந்து 79,943-ல் நிலைகொண்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை. ஆனால், இம்மகிழ்ச்சி நீடிக்கவில்லை.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 590.64 புள்ளிகள் (0.74%) சரிந்து 79,353.07 ஆகவும், நிஃப்டி 158.30 புள்ளிகள் (0.65%) சரிந்து 24,030.35 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் பாதக நிலையுடன்தான் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் ஏற்றமும், ஷாங்காய் பங்குச் சந்தையில் இறக்கமும் நிலவுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வமும் சற்றே குறைந்திருப்பதும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் குழப்பமான மனநிலையும் இந்தியப் பங்குச் சந்தைகளில் சரிவு நிலவ காரணம்.
ஏற்றம் காணும் பங்குகள்:
டைடன் கம்பெனி
மாருதி சுசுகி
டாடா மோட்டார்ஸ்
ஜேஎஸ்டபியுள்யூ ஸ்டீல்
என்டிபிசி
ஆக்சிஸ் பேங்க்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
பஜாஜ் ஃபைனான்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹெசிஎல் டெக்னாலஜிஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
எம் அண்ட் எம்
பாரதி ஏர்டெல்
கோடக் மஹிந்திரா பேங்க்
இன்ஃபோசிஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 பைசா குறைந்து ரூ.85.78 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan