Stock News: மீண்டெழுந்த பங்குச் சந்தை - சென்செக்ஸ் 725+ புள்ளிகள் உயர்வு!
இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளின் எதிரொலியால், வங்கி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் எழுச்சி கண்டுள்ளன. இதன் விளைவாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்து, பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டெழுந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கைகளின் எதிரொலியால், வங்கி சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் எழுச்சி கண்டுள்ளன. இதன் விளைவாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்து, பங்குச் சந்தை வர்த்தகம் மீண்டெழுந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.28) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 382.53 புள்ளிகள் உயர்ந்து 75,748.70 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 55.90 புள்ளிகள் சரிந்து 22,885.05 ஆக இருந்தது.
நேற்றைய வர்த்தகத்தில் கடும் வீழ்ச்சி நிலை கொண்ட சூழலில், தற்போது பங்குச்சந்தை மீண்டிருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தை உருவாக்கியுள்ளது.
இன்று முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 726.44 புள்ளிகள் (0.96%) உயர்ந்து 76,092.61 ஆகவும், நிஃப்டி 169.45 புள்ளிகள் (0.74%) உயர்ந்து 22,998.60 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடனே நிலை கொண்டது. ஆசிய பங்குச் சந்தைகளை பொறுத்தவரையில், டோக்கியோ மற்றும் ஹாங்காக் பங்குச் சந்தைகளை சற்றே சாதகமான போக்கு நிலவுகிறது. சியோல் மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தை விடுமுறை ஆகும். சர்வதேச போக்குகளின் தாக்கத்தைத் தாண்டி, இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள வங்கி சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் சார்ந்த அறிவிப்புகள் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மீண்டெழுந்துள்ளது.
ஏற்றம் காணும் பங்குகள்:
ஆக்ஸிஸ் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
இன்ஃபோசிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
பாரதி ஏர்டெல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
நெஸ்லே இந்தியா
ஐடிசி
மாருதி சுசுகி
விப்ரோ
எல் அண்ட் டி
என்டிபிசி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா வீழ்ச்சி கண்டு ரூ.86.57 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan