Stock News: சென்செக்ஸ் சரிவு நிலை நீடிப்பு; ஸ்மால் கேப் 1000+ புள்ளிகள் குறைந்தது!
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை நிலவரப்படி, 233.65 புள்ளிகள் குறைந்து 78,441.53 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 105.75 புள்ளிகள் குறைந்து 23,777.70 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் புதன்கிழமையான இன்று (13-11-2024) சரிவுடன் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் சுமார் 234 புள்ளிகள் சரிந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 106 புள்ளிகள் குறைந்தது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை10.00 மணி நிலவரப்படி, 233.65 புள்ளிகள் குறைந்து 78,441.53 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 105.75 புள்ளிகள் குறைந்து 23,777.70 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று சற்றே உயர, நிப்டி ஐடி குறியீடு 191 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 1089.47 புள்ளிகளும் சரிவு கண்டன. மும்பைப் பங்குச் சந்தையின் மிட் கேப் குறியீடும் சரிவு கண்டுள்ளது.
காரணம்:
வளரும் சந்தைகள் என்ற நோக்கில் அலசும் போது டாலர் மதிப்பு உயர்வதும் அமெரிக்க 10 ஆண்டுப் பத்திரத்தில் முதலீடு செய்வது அதிக பலன்களையும் அளிப்பது இந்தியப் பங்குச் சந்தை மீது செலுத்தும் தாக்கம் கவலைக்குரியது என்கின்றனர் நிபுணர்கள். மேலும், இந்த ஆண்டு இந்தத் தேதியில் வருவாய் என்று பார்த்தால் அமெரிக்கப் பங்குச் சந்தை சிறப்பாக விளங்குகிறது. மாறாக இந்தியப் பங்குச் சந்தையின் YTD 10%-ற்கும் கீழ் உள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
பார்தி ஏர்டெல்
டைட்டன் கம்பெனி
இண்டஸ் இந்த் வங்கி
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
எஸ்பிஐ
இறக்கம் கண்ட பங்குகள்:
பாரத் எலெக்ட்ரானிக்ஸ்
ஹீரோ மோட்டோ கார்ப்பரேஷன்
எம் அண்ட் எம்
மாருதி சுசூகி
டாடா ஸ்டீல்
இந்திய ரூபாயின் மதிப்பு அனைத்து கால சரிவு:
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்றே சரிவடைந்து இன்று ரூ.84.40 ஆக உள்ளது.