Stock News: பங்குச்சந்தை மந்தமான தொடக்கம் அனைத்துக் குறியீடுகளும் ‘ரெட்’
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:12 மணி நிலவரப்படி 85.03 புள்ளிகள் குறைந்து 81,139.12 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 64.20 புள்ளிகள் குறைந்து 24,789.85 புள்ளிகளாகவும் உள்ளன.
இந்திய பங்குச் சந்தையில் பெஞ்ச்மார்க் ஈக்விட்டி குறியீடுகள் திங்கட்கிழமையான இன்று (21-10-2024) மந்தமாகத் தொடங்கி உள்ளன. சென்செக்ஸ் சுமார் 85 புள்ளிகள் குறைந்தது. தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு சுமார் 64 புள்ளிகள் பின்னடைவு கண்டு தொடங்கியுள்ளது.
மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை 10:12 மணி நிலவரப்படி, 85.03 புள்ளிகள் குறைந்து 81,139.12 புள்ளிகளாகவும் தேசியப்பங்குச் சந்தையின் நிப்டி50 குறியீடு சுமார் 64.20 புள்ளிகள் குறைந்து 24,789.85 புள்ளிகளாகவும் உள்ளன.
நிப்டி பேங்க் குறியீடு இன்று சற்று முன் சற்றே உயர்ந்து காணப்படுகிறது. தேசியப் பங்குச் சந்தையின் ஐடி குறியீடு சுமார் 39 புள்ளிகளும் பிஎஸ்இ ஸ்மால் கேப் 197 புள்ளிகளும் குறைந்ந்தன.
காரணம்:
அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அதாவது FII முதலீட்டாளர்கள் இந்த மாதம் முழுதும் தொடர்ந்து பங்குகளை விற்று வருவதால் பங்குச் சந்தையில் சரிவு நிலை நீடித்து வருகிறது. மேலும் பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளமை அங்கு அதிக முதலீடுகளை ஈர்த்துள்ளது.
ஏற்றம் கண்டுவரும் பங்குகள்:
ஹெச்.டி.எஃப்.சி. வங்கி
மாஸகான் டாக்
டாடா கெமிக்கல்ஸ்
தேஜாஸ் நெட்வொர்க்ஸ்
இறக்கம் கண்ட பங்குகள்:
டாடா கன்ஸ்யூமர் புரோடக்ட்ஸ்
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.84.07 ஆக உள்ளது.