Stock News: சென்செக்ஸ் 350 புள்ளிகளும், நிஃப்டி 100 புள்ளிகளும் சரிவு!
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
இந்திய பங்குச்சந்தை இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச்சந்தை நிலவரம் (12/02/2024)
வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 289.31 புள்ளிகள் சரிந்து 71,300 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 104.60 புள்ளிகள் சரிந்து 21,676 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.

சரிவுக்கான காரணங்கள் என்ன?
சீனா, ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான், வியட்நாம் மற்றும் மலேசியா உள்ளிட்ட பெரும்பாலான பிராந்தியங்கள் விடுமுறைக்காக மூடப்பட்டுள்ளதால் ஆசிய பங்குச்சந்தை பின்னடைவை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலிப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்றம் கண்ட பங்குகள்:
சைடஸ் லைஃப்
அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்
எம்ஆர்எஃப்
விப்ரோ
இறக்கம் கண்ட பங்குகள்:
கோல் இந்தியா
ஹீரோ மோட்டோ கார்ப்
பிபிசிஎல்
ஓஎன்ஜிசி
இந்திய ரூபாயின் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்து 82.99 ஆக உள்ளது.