Stock News: சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை - 19,800-ஐ கடந்த நிஃப்டி!
இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்திய பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பங்குச்சந்தை நிலவரம் (22/11/2023)
நேற்றை போலவே இன்றும் இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 43,12 புள்ளிகள் உயர்ந்து 65,973 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 17 புள்ளிகள் உயர்ந்து 19,800 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?
ஆசிய மற்றும் அமெரிக்க பங்குச்சந்தை வர்த்தகம் சரிந்த போதும், இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ், பார்தி, ஹெச்டிஎஃப்சி ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வு பங்குச்சந்தை சற்றே உயர காரணமாக அமைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்:
பவர் கிரிட்
டைட்டன்
சன் பார்மா
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஏசியன் பெயிண்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
டெக் மஹிந்திரா
நெஸ்லே
ஐ.டி.சி.
இறக்கம் கண்ட பங்குகள்:
கோடக் மஹிந்திரா
ஐசிஐசிஐ பேங்க்
இண்டஸ்இண்ட் பேங்க்
ஜேஎஸ்டப்ள்யூ ஸ்டீல்
இந்திய ரூபாயின் மதிப்பு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து 83.28 ஆக உள்ளது.