'வெற்றி தொட்டுவிடும் தொலைவில் தான் உள்ளது' என்பதை உணர்த்தும் பொன்மொழிகள்...
எந்த கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் முயற்சியை கைவிடாமல் இருக்க ஊக்கம் தரும் மேற்கோள்கள் உதவுகின்றன. உலகை மாற்றுவதற்கான ஆற்றல் நம் அனைவர் உள்ளுக்குள்ளும் இருக்கிறது.
நாம் எல்லோரும் வெற்றியை விரும்புகிறோம். சிலர் அதில் தீவிர பற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் அதற்கான பாதை எளிதானது அல்ல. அதில் தடைகளும், சவால்களும் நிறைந்திருக்கின்றன.
ஆனால் அதற்காக வெற்றியை அடைய முடியாது என்று பொருள் இல்லை. உங்கள் மீது நம்பிக்கை இருந்து, கனவை நினைவாக்கிக் கொள்ள கூடுதலாக உழைக்கும் விடாமுயற்சி இருந்தால் அதை அடைவது சாத்தியமே.
அதோடு, வெற்றிக்கான பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆற்றலும் உங்களுக்கு இருக்கிறது. எனவே வெற்றியை போலவே அதன் பாதையும் முக்கியம் தான்.
பெண்கள் தங்களுக்கான வாய்ப்புகளை பற்றிக்கொண்டு தங்கள் கனவை அடைய தூண்டுகோளாக அமையும் ஊக்கம் தரும் மேற்கோள்கள் இதோ:
“பார்த்துக்கொண்டிருக்கும் அனைத்து சிறுமிகளும் கவனிக்க, உங்கள் கனவுகளை அடைய முயற்சித்து வெற்றி கொள்வதற்கான, அனைத்து வாய்ப்புகளுக்கும் நீங்கள் தகுதி வாய்ந்தவர்கள் மற்றும் உரிமை உடையவர்கள் என்பதை ஒரு போதும் சந்தேகிக்க வேண்டாம்”- ஹிலாரி கிளிண்டன்
“ஆக்கபூர்வமான சிந்தனை, தடைகளை கடந்து, வலிகளை பொறுத்துக்கொண்டு, புதிய இலக்குகளை அடைவதற்கான மதிப்பு மிக்க கருவியாகும்”- ஆமி மோரின்
“ஒரு போதும் மனம் தளர வேண்டாம் ஏனெனில், சரியான இடம் மற்றும் காலத்தில் எல்லாம் மாறிவிடும்”- ஹரியட் பீச்சர் ஸ்டோ
“இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கிறது என பார்ப்பதைவிட எப்போதும், எவ்வளவு தொலைவு கடந்து வந்திருக்கிறீர்கள் என பாருங்கள். இந்த வேறுபாடு எத்தனை எளிதானது என்பது உங்களை வியப்பில் ஆழ்த்தும்”- ஹெய்டி ஜான்சன்
“இந்த உலகை மாற்ற நமக்கு மந்திர ஜாலம் தேவையில்லை. நமக்குத்தேவையான எல்லா ஆற்றலும் நமக்குள் இருக்கிறது. மேலும் சிறப்பாக கற்பனை செய்து கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறது” – ஜே.கே.ரவுளிங்
“வேகமான பாதையை மறந்து விடுங்கள். நீங்கள் பறக்க விரும்பினால், உங்களுக்கு ஈடுபாட்டை மேற்கொள்வதற்கான உறுதியை பின்பற்றுங்கள்” – ஓப்ரா வின்பிரே
“வெற்றியை உங்களுக்கு ஏற்ப வரையறை செய்து கொள்ளுங்கள், உங்கள் விதிகளுக்கு ஏற்ப அடையுங்கள். நீங்கள் பெருமைப்படும் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளுங்கள்”– ஆனி ஸ்வினி, வால்டிஸ்னி தலைவர்
“தினமும் உங்களுக்கு அச்சமூட்டும் ஒரு விஷயத்தை செய்யவும்” – எலினான் ரூஸ்வெல்ட்
“எப்போதும் நம்மால் சரியான முடிவை எடுக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் நாம் தவறு செய்யலாம். தோல்வியை புரிந்து கொள்வது வெற்றிக்கு எதிரானது அல்ல, வெற்றியின் ஒரு பகுதி”- ஆரியானா ஹபிங்க்டன்
“ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். உங்களால் முடிந்த அளவு வேகமாக முன்னேறிச் செல்லுங்கள்” – ரெபேகா வுட்ஸ்டாக்
நீங்கள் சவால்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள். வெற்றி பற்றி உங்கள் கருத்து என்ன? உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
தமிழில் : சைபர்சிம்மன்