ADVERTISEMENT
ஊக்கம் அளிக்கும் எலன் மஸ்க் மேற்கோள்கள்...
உங்கள் கனவுகளை அடைய கடுமையாக உழைக்க, முன்னணி தொழிலதிபர் எலன் மஸ்கின் இந்த மேற்கோள்கள் உங்களுக்கு நிச்சயம் ஊக்கம் அளிக்கும்.

- ஒரு விஷயம் முக்கியமானதாக இருந்தால், நிலைமை உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் அதை செய்து முடியுங்கள்.
- காலையில் கண் விழித்ததும், எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நினைத்தால் அது பிரகாசமான நாள். இல்லை என்றால், இல்லை.
- நீங்கள் எப்படி செயல்பட்டிருக்கிறீர்கள் என்பதையும், அவற்றை மேலும் சிறப்பாக செய்வது எப்படி என்றும் தொடர்ந்து யோசிப்பதற்கான கருத்து கேட்டறியும் முறை முக்கியம் என நினைக்கிறேன்.
- ஹென்ரி போர்டு, நம்பகமான, செலவு குறைந்த கார்களை உருவாக்கிய போது, மக்கள் குதிரைகளில் என்ன பிரச்சனை என்று கேட்டனர். அவர் பெரிய ரிஸ்க் எடுத்தார். அதற்கு பலனும் கிடைத்தது.
- அது நிகழ்வதை பார்த்து பங்கெடுக்கலாம் அல்லது அதில் பங்கேற்கலாம்.
- அசாதாரணமானவர்களாக இருக்க தேர்வு செய்ய சாதாரண மனிதர்களுக்கு சாத்தியம் என்றே நினைக்கிறேன்.
- அந்த கூடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வரை, ஒரே கூடையில் எல்லா முட்டைகளையும் போட்டு வைப்பது சரி தான்.
- தொடர்ந்து விமர்சனங்களை நாடுங்கள். நீங்கள் செய்வது தொடர்பான ஆழமான விமர்சனம் என்பது தங்கத்திற்கு நிகரானது.
- நீங்கள் தீர்வு காணும் பிரச்சனையின் கடின தன்மைக்கு ஏற்ப அதற்கான ஊதியம் அமையும்.
- நான் ஒரு போதும் மனம் தளர்வதில்லை. அதற்கு நான் இறக்க வேண்டும் அல்லது முற்றிலும் செயலிழக்க வேண்டும்.
- விடாமுயற்சி மிகவும் முக்கியம். நீங்கள் கட்டாயப்படுத்தப்படவில்லை எனில் எதையும் கைவிடக்கூடாது.
- ஒரு நிறுவனத்தை உருவாக்க முயற்சிப்பது, பேக்கிங் செய்வது போன்றது. எல்லாப் பொருட்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
- மிகச்சிறந்த அறிவுரை என நான் கருதுவது, இன்னும் சிறப்பாக எப்படி செயல்பட முடியும் என்றும், உங்களை கேள்விக்குள்ளாகி கொள்வதையும் தொடர்ந்து மேற்கொள்ளவும்.
- கடினமாக உழையுங்கள், வாரத்திற்கு 80 முதல் 100 மணி நேரம் உழையுங்கள். இது வெற்றி சாத்தியத்தை அதிகமாக்கும்.
ஆங்கில கட்டுரையாளர்: ஹரிஷ் வாடே | தமிழில்: சைபர் சிம்மன்
(பொறுப்புத்துறப்பு: இது எங்கள் வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட யுவர்ஸ்டோரி கம்யூனிட்டி பதிவு. இந்த பதிவில் உள்ள புகைப்படம் மற்றும் உள்ளடக்கம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரியது. இங்கு இடம்பெறும் உள்ளடக்கம் ஏதேனும், உங்கள் காப்புரிமையை மீறுவது என கருதினால் எங்களுக்கு தெரிவிக்கவும்.)
ADVERTISEMENT
Advertise with usADVERTISEMENT
Advertise with usADVERTISEMENT
Advertise with usADVERTISEMENT
Advertise with us
