Motivational Quote | எழு, விழி, இலக்கை அடையும் வரை நிறுத்தாதே!
அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, தடுமாற்றமில்லா கவனம் ஆகியவை நமது தனிப்பட்ட வளர்ச்சியில் ஏற்படுத்தும் தாக்கத்துக்கு விவேகானந்தரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.
“ARISE, AWAKE, AND STOP NOT UNTIL THE GOAL IS REACHED”
சுவாமி விவேகானந்தரின் ஆழமான இந்த போதனைகளை ஆராய்ந்து, அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு மற்றும் தடுமாற்றமில்லா முழு கவனம் ஆகியவை உங்கள் ஆன்மிகப் பாதையை எவ்வாறு வடிவமைக்கும் என்பதை அறிய முற்படவும்.
“எழு, விழி, இலக்கை அடையும் வரை நிறுத்தாதே..!”
- சுவாமி விவேகானந்தரின் இந்த சக்திவாய்ந்த பொன்மொழி, இன்றுவரை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களை தட்டி எழுப்பி ஊக்கப்படுத்தி வருகின்றன.
சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள், உறுதிப்பாடு, கவனம் மற்றும் ஒருவரின் கனவுகளைப் பின்தொடர்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. இந்தக் கட்டுரையில் சுவாமி விவேகானந்தரின் இந்தச் சிந்தனை நமக்கு காட்டும் வழிகளை சற்றே அலசுவோம்.
விடா முயற்சி என்னும் ஆற்றல்
சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் விடாமுயற்சிக்கும், தளராத உறுதிக்குமான ஒரு பெரும் அறைகூவல். சவால்களுக்கு மேலாக உயர்ந்து, நமது கனவுகளைப் பின்தொடர்வதில் உறுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது. மனித ஆன்மாவுக்கு வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான அபரிமிதமான திறன் இருப்பதாகவும், அசைக்க முடியாத கவனம் மற்றும் அர்ப்பணிப்பு மூலம், எந்த தடையையும் நாம் கடக்க முடியும் என்கிறார் விவேகானந்தர்.
அவரது வாழ்க்கையே இந்த அடங்காத ஆன்மாவின் உருவகமாகும். 1863-ஆம் ஆண்டு இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்த இவர், தனது வாழ்நாளில் பல போராட்டங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்ததால், குடும்பம் பொருளாதாரச் சீரழிவை ஏற்படுத்திய போதிலும், விவேகானந்தர் சரியான கல்வியைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவர் தனது படிப்பில் விடாமுயற்சியுடன் இருந்தார். இறுதியில் தத்துவம் மற்றும் கலைகள் உட்பட பல துறைகளில் பட்டங்களைப் பெற்றார்.
அறிவொளி நாட்டம்
விவேகானந்தரின் மேற்கோள் தனிப்பட்ட முறையிலும் ஆன்மிக வழியிலும் அறிவொளியைத் தேட ஊக்குவிக்கிறது. சுய முன்னேற்றத்தையும் அறிவையும் பின்தொடர்வதில் அசைக்க முடியாத கவனம் செலுத்துவதே ஒருவரின் இலக்குகளை அடைவதற்கான திறவுகோல் என்று சுவாமி விவேகானந்தர் கருதுகிறார். அவர் ஒருமுறை கூறினார்:
“உங்கள் சொந்த இயல்பூக்கங்களுக்கு உண்மையாக இருப்பதே மதங்களில் பெரிய மதம். உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.”
விவேகானந்தரின் சுய அறிதலின் பயணம் அவரது ஆன்மிக வழிகாட்டியாக விளங்கிய மகா துறவி ராமகிருஷ்ணரின் கீழ் அவரது பயிற்சியுடன் தொடங்கியது. ராமகிருஷ்ணரின் வழிகாட்டுதலின் மூலம், விவேகானந்தர் வேதாந்தத்தின் போதனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார், இது சுய-உணர்தலின் முக்கியத்துவத்தையும் அனைத்து உயிரினங்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதன் முக்கியத்துவத்தையும் தத்துவத்தையும் வலியுறுத்துகிறது.
செய்தியைப் பரப்புதல்
இந்த மேற்கோள் ஒருவரின் அறிவையும் ஞானத்தையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தின் செய்தியையும், தன்னை உணரும் சக்தியையும் உலகம் முழுவதும் பரப்புவதில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். 1893ல் சிகாகோவில் உலக மதங்களின் பேச்சு மன்றத்தில் அவர் ஆற்றிய முக்கிய உரையானது மேற்கத்திய உலகிற்கு இந்திய தத்துவம் மற்றும் ஆன்மீகத்தை அறிமுகப்படுத்தியது. இது உலகளாவிய சிந்தனையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
சுவாமி விவேகானந்தரின் செல்வாக்கு அவரது காலத்திற்கும் மேலாக நீண்டது. அவரது போதனைகள் உலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை செய்த மகாத்மா காந்தி மற்றும் சுபாஷ் சந்திர போஸ் போன்ற முக்கிய தலைவர்கள் உட்பட எண்ணற்ற நபர்களை ஊக்கப்படுத்தியுள்ளன.
சுவாமி விவேகானந்தரின் மேற்கோள் குறித்து சுருக்கமாகக் கூறுவது என்னவெனில், விடாமுயற்சி, தன்னம்பிக்கை மற்றும் அறிவின் நாட்டம் ஆகிய சக்திகளின் கால - தேச வர்த்தமான வரம்புகளற்ற நினைவுப் பதிவாக உள்ளது.
அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, தடுமாற்றமில்லா கவனம் ஆகியவை நமது தனிப்பட்ட வளர்ச்சியிலும் ஆன்மிக வளர்ச்சியிலும் ஏற்படுத்தும் மாற்றத்தக்க தாக்கத்துக்கு விவேகானந்தரின் வாழ்க்கை ஓர் எடுத்துக்காட்டு.
இன்றைய வேகமான உலகில், நாம் எதிர்கொள்ளும் பல தடைகள் நம்மை ஆட்கொண்டு நம்மை மூழ்கடித்து விடும். இருப்பினும், இந்தச் சவால்களை முறியடிக்கும் ஆற்றல் நம்மிடம் இருப்பதையும், நம் கனவுகளை ஒருபோதும் கைவிடக் கூடாது என்பதையும் சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த ஆன்மீகத் தலைவரின் ஞானத்தைத் தழுவுவதன் மூலம், நமது சொந்த பாதைகளை உருவாக்கி, உலகில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தைரியத்தையும் உறுதியையும் நாம் பெற முடியும்.
மூலம்: Nucleus_AI | தமிழில்: ஜெய்
Motivational Quote | ‘மாற்றத்தின் தொடக்கம், நீங்களே!’ - காந்தியின் அற்புத சிந்தனை தரிசனம்!
Edited by Induja Raghunathan