Swiggy IPO: நிறுவன முதலீட்டாளர்கள் இடமிருந்து 605 மில்லியன் டாலர்கள் திரட்டியது!
ஸ்விக்கியின் ஐபிஓ சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி திறக்கப்படும், மேலும் நிறுவனம் நவம்பர் 13 ஆம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிட எதிர்பார்க்கிறது.
Swiggy அதன் $1.35 பில்லியன் ஐபிஓவிற்கு முன்னதாக, ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.5,085 கோடி (கிட்டத்தட்ட $605 மில்லியன்) திரட்டியுள்ளது என்று BSE-யில் தாக்கல் செய்த தகவல் தெரிவிக்கிறது.
ஐபிஓவிற்கு முந்தைய நிதியானது 75க்கும் மேற்பட்ட முக்கிய ஆங்கர் முதலீட்டாளர்கள் இடமிருந்து திரட்டப்பட்டது. நிறுவன முதலீட்டாளர்களில் 19 மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களாகும், இதில் எஸ்பிஐ, ஐசிஐசிஐ புருடென்ஷியல், கோட்டக், நிப்பான் இந்தியா, மிரே அசட் மேனேஜ்மெண்ட் ஆகியவை அடங்கும். இந்த நிதிகள் மொத்த முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 13.03 கோடி பங்குகளில் 40.65% ஆகும்.
ஸ்விக்கியின் ஐபிஓ சில்லறை மற்றும் நிறுவன முதலீட்டாளர்களுக்கு நவம்பர் 6 ஆம் தேதி திறக்கப்படும், மேலும், நிறுவனம் நவம்பர் 13 ஆம் தேதி பங்குச்சந்தைகளில் பட்டியலிட எதிர்பார்க்கிறது.
ஐசிஐசிஐ புருடென்ஷியல் லைஃப் இன்சூரன்ஸ், ஹெச்டிஎஃப்சி லைஃப் இன்சூரன்ஸ் மற்றும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட உள்நாட்டு காப்பீட்டு நிறுவனங்களும் ஆங்கர் முதலீட்டு சுற்றில் பங்கேற்றன. நிறுவன முதலீட்டாளர்களுக்கான ஒதுக்கீட்டில் சுமார் 56% உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது. இது தவிர, உலகளாவிய பரஸ்பர நிதி முதலீட்டாளர்களில் ஆஸ்ட்ரோன் கேபிடல், ஃபிடிலிட்டி மற்றும் பிளாக்ராக் ஆகியவையும் அடங்கும்.
ஸ்விக்கியின் ஐபிஓ 11.54 கோடி பங்குகளின் புதிய வெளியீடு மற்றும் நிறுவனத்தில் இருக்கும் பங்குதாரர்களால் 17.51 கோடி ஈக்விட்டி பங்குகளை விற்பனை செய்வதற்கான வாய்ப்பையும் கொண்டதாகும். ஸ்விக்கியின் ஆரம்பகால ஆதரவாளர்களான ஆக்செல் மற்றும் எலிவேஷன் கேப்பிடல் ஆகியவை இந்தப் புதிய பங்கு வெளியீட்டின் மூலம் தங்கள் முதலீட்டில் 3,300% ஆதாயங்களைக் காண்பார்கள்.
அதன் மிகப் பெரிய பங்குதாரரான Prosus, 109 மில்லியன் பங்குகளை விற்பனைக்கு டெண்டர் செய்யும் மற்றும் அதன் முதலீட்டில் 197% ஆதாயத்தைக் காண வாய்ப்புள்ளது.