இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்; ஆர்பிஐ வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
டிசம்பர் 2021ல் எடுத்த கணக்கெடுப்பின் படி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ஆர்பிஐ வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
டிசம்பர் 2021ல் எடுத்த கணக்கெடுப்பின் படி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிக ஏடிஎம்கள் உள்ளதாக ஆர்பிஐ வெளியிட்ட புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.
வங்கிகளில் மணிக்கணக்கில் காத்திருந்து பணம் பெறுவதையும், ஆயிரங்களில் பணம் தேவைப்படும் போது வாடிக்கையாளர்கள் சுலபமாகவும், உடனடியாகவும் பணம் எடுத்துக்கொள்ள உதவுகிறது. தற்போது ஏடிஎம்கள் பணம் எடுக்கும் இடமாக மட்டுமின்றி ஒரு மினி பேங்காகவே மாறிவிட்டது.
பணம் எடுப்பது மட்டுமல்லாமல், பணம் போடுவது, ஏடிஎம் அட்டைக்காக புதிய PIN நம்பர் உருவாக்குவது, ஏடிஎம் கார்டே இல்லாமல் பணம் எடுப்பது, பேலன்ஸ் பார்ப்பது போன்ற நிறைய வசதிகள் உள்ளன. நள்ளிரவில் கூட ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியும். 24/7 என்ற அளவில் ஏடிஎம்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி வேகமடைந்து புதிது, புதிதாக ஆன்லைன் பணப்பரிவர்த்தனை, QR Code ஸ்கேன், Gpay, Phone pay என பல்வேறு வகையான பணப்பரிவர்த்தனை ஆப்கள் கண்டறியப்பட்டாலும் ஏடிஎம்களின் தேவை மக்களிடம் எப்போதும் ஒரே மாதிரியாகவே இருக்கிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் கடந்த சில ஆண்டுகளாகவே ஏடிஎம் இயந்திரங்களின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்து வருகிறது.
2021ம் ஆண்டின் நிலவரப்படி,
நாடு முழுவதும் 2 லட்சத்து 13 லட்சம் ஏடிஎம் மெஷின்கள் உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இதில் 4 சதவீத ஏடிஎம்.கள் ஊரகம் மற்றும் வளர்ந்து வளரும் நகர்ப்புறங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்தியன் ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பின் படி 2 லட்சத்து 13 ஆயிரத்து 145 ஏடிஎம்.கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் அதிக ஏ.டி.எம்.களைக் கொண்ட முதல் மாநிலமாக உள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு முதலிடம், கேரளாவிற்கு 10வது இடம்:
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள டிசம்பர் 2021-ல் எடுத்த கணக்கெடுப்பின்படிகணக்கெடுப்பின் படி, இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக ஏ.டி.எம்.கள் உள்ளதாக தெரியவந்துள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் மொத்தம் 28,540 ஏடிஎம்கள் இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அம்மாநிலத்தில் 27,945 ஏடிஎம்கள் உள்ளன. மூன்றாவது இடத்தில் 23,460 ஏடிஎம்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
கர்நாடகா மாநிலம் 19 ஆயிரத்து 613 ஏடிஎம்.களுடன் 4வது இடத்தில் உள்ளது. மேற்குவங்கம் 13 ஆயிரத்து 565 ஏடிஎம்.களுடன் 5வது இடத்திலும், குஜராத் 12 ஆயிரத்து 699 ஏடிஎம்.களுடன் 6வது இடத்திலும் உள்ளது. 12 ஆயிரத்து 357 ஏடிஎம்.களைக் கொண்ட ஆந்திரா 7வது இடத்திலும், 11 ஆயிரத்து 910 ஏடிஎம்களுடன் தெலங்கானா 8வது இடத்திலும் உள்ளது. ராஜஸ்தான் 11, 296 ஏடிஎம்களுடன் 9வது இடத்திலும், கேரளா 11 ஆயிரத்து 054 ஏடிஎம்களுடன் 10 வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொகுப்பு: கனிமொழி