Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

தமிழக அரசின் ரூ.5 லட்சம் ‘புத்தொழில் ஆதார மானிய நிதி’ பெற்ற 25 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எவை? முழு விவரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 25 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1.25 கோடி ரூபாய் புத்தொழில் ஆதார மானிய நிதி (TANSEED - Seed Grant fund) வழங்கி, தொழில் முனைவோர்களுக்கான 'வழிகாட்டி மென்பொருள்' தளத்தினை தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் ரூ.5 லட்சம் ‘புத்தொழில் ஆதார மானிய நிதி’ பெற்ற 25 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எவை? முழு விவரம்!

Tuesday January 03, 2023 , 4 min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களால் நடத்தப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகை குறித்த கையேட்டினை கடந்த வாரம் வெளியிட்டார்.

மேலும், 25 நிறுவனங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 1.25 கோடி ரூபாய் புத்தொழில் ஆதார மானிய நிதி (TANSEED - Seed Grant fund) வழங்கி, தொழில் முனைவோர்களுக்கான 'வழிகாட்டி மென்பொருள்' தளத்தினை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்டார்அப் நிறுவனங்களுக்கு சலுகை:

பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாகக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத் தொகுப்புக்கான அரசாணையில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள் அடங்கிய கையேட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

புத்தொழில் நிறுவனங்களுக்கு, டான்சீட் மானிய நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தலா ரூ.5 லட்சம் வீதம் 3 தவணைகளில் இது வழங்கப்படும். ஒரு நிதியாண்டில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களில் 25 சதவீதம் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்கள், 10 சதவீதம் ஊரக வாழ்வாதார மேம்பாட்டு நிறுவனங்களுக்கும் ஒதுக்கப்படும்.

மாநில அரசு உதவியுடன் இயங்கும் தொழில்வளர் காப்பகங்களில், பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உறுப்பினர் கட்டணம் மற்றும் ஓராண்டுக்கான வாடகைக் கட்டணம் ரூ.2 லட்சம் வரை கிடையாது.

மேலும், பெண்கள் நலன் சார்ந்த தயாரிப்புகள், சேவைகளை வழங்கும் பெம்டெக் நிறுவனங்கள் மற்றும் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு சிறப்பு தொழில் விரிவாக்க பயிற்சி, தமிழ் ஏஞ்சல் முதலீட்டாளர் தளம் வழியாக முதலீடு திரட்ட உதவிகள் என சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Stalin

நிலைத்த நீடித்த வளர்ச்சி, சுழற்சி பொருளாதாரம் சார்ந்து, வணிக ரீதியில் பயனளிக்கும் விதமான திட்டங்களுக்கு ‘பசுமை காலநிலை நிதி’ திட்டத்தின்கீழ் நிதி வழங்கப்படும். பசுமை தொழில்நுட்பத் தயாரிப்புகள், சேவைகளை அரசு கொள்முதல் செய்ய ஏதுவாக ‘அரசு கொள்முதல் உதவி மையமானது’ தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் சென்னை மற்றும் மதுரை அலுவலகங்களில் அமைக்கப்படும்.

ஆண்டுக்கு 20 பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஓராண்டு கால தொழில் விரைவாக்க பயிற்சி அளிக்கப்படும்.

தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானிய நிதி:

தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவுஅளிக்க, தகுதியான நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் மானிய நிதியாக ’தமிழ்நாடு புத்தொழில் ஆதார நிதி – TANSEED’ திட்டத்தின் கீழ் அரசு வழங்கி வருகிறது. இதுவரை நடைபெற்ற 3 பதிப்புகளில் 60 நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயனடைந்துள்ளன.

தற்போது, டான்சீட் 4-வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை மொத்தம் 1029 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.

Stalin
பல கட்டமாக நடைபெற்ற மதிப்பீட்டு பணிக்கு பின்பு முதற்கட்டமாக பசுமை தொழில் நுட்பம் சார்ந்து இயங்கும் 7 நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் 8 நிறுவனங்கள் மற்றும் பெண்களை நிறுவனர் அல்லது இணை நிறுவனர்களாகக் கொண்டிருக்கும் 10 நிறுவனங்கள் என மொத்தம் 25 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் தலா 5 லட்சம் ரூபாய் என மொத்தம் 1.25 கோடி ரூபாய் மானிய நிதியினை வழங்கினார்.

டான்சீட் மானியம் பெற்ற 25 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பட்டியல்

1.    Avris Environment Technologies LLP - பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்

2.    Base'P Sustainable foods LLP - பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்

3.    Greenviro Global Private Limited - பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்

4.    KovaiBSF - பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்

5.    Scrapify Ecotech Private Limited - பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்

6.    Suzhiyam Industrial Machines Private limited - பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்

7.    The Thenus - பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்

8.    AASVA Technologies India Private Limited - ஊரக வாழ்வாதார மேம்பாடு

9.    Beebane - ஊரக வாழ்வாதார மேம்பாடு

10. Bridge Healthcare Private Limited - ஊரக வாழ்வாதார மேம்பாடு

11. Farm Agro - ஊரக வாழ்வாதார மேம்பாடு

12. Global Coconut Farmers Producer Company Limited - ஊரக வாழ்வாதார மேம்பாடு

13. Harvtech - ஊரக வாழ்வாதார மேம்பாடு

14. Maheesha Foods And Beverages Private Limited - ஊரக வாழ்வாதார மேம்பாடு

15. Pullatta Agro Machinery Private Limited - ஊரக வாழ்வாதார மேம்பாடு

16. Vishnuthulsi International Private Limited - ஊரக வாழ்வாதார மேம்பாடு

17. Beez Innovation Labs Private Limited - பெண் நிறுவனர்

18. Clowakinnovations LLP - பெண் நிறுவனர்

19. Oneomics Private Limited - பெண் நிறுவனர்

20. Orcci Technologies LLP - பெண் நிறுவனர்

21. Pradco Private Limited - பெண் நிறுவனர்

22. PSchool Edutech Private Limited - பெண் நிறுவனர்

23. Quantic Tech Analysis private Limited - பெண் நிறுவனர்

24. Vyoma Systems Private limited - பெண் நிறுவனர்

25. Zvata Studios Private Limited - பெண் நிறுவனர்

வழிகாட்டி மென்பொருள் இணையதளம் தொடக்கம்:

ஸ்டார்அப் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிவித்து வருகிறது. இதுபற்றி முழு விவரங்களை அறிந்து கொள்ளவும், தொழில்முனைவோர்களுக்கு துறைசார் அறிவும், அனுபவமும், துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையும் வழங்கும் விதமாக ’Mentor TN’ என்ற வழிகாட்டி மென்பொருள் இணையதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

Stalin

புத்தொழில் முனைவோர்கள் தங்களது நிறுவனம் சார்ந்த தகவல்களை பதிவேற்றியதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் அவர்களது துறை சார்ந்த அறிவுரைஞர்கள் குறித்த தகவல்களை பெறும்வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.