Brands
YSTV
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Yourstory
search

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

Videos

ADVERTISEMENT
Advertise with us

‘Tamil Nadu Story’: கோவை மற்றும் மதுரையில் யுவர்ஸ்டோரி நடத்தும் தொழில் தலைவர்கள் கூடும் கருத்தரங்கம்!

‘Tamil Nadu Story’: கோவை மற்றும் மதுரையில் யுவர்ஸ்டோரி நடத்தும்  தொழில் தலைவர்கள் கூடும் கருத்தரங்கம்!

Friday January 25, 2019 , 2 min Read

நாட்டில் வணிக முதலீடுகளுக்கு மிகவும் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது என்பதனை சுலபமாகச் சொல்லிவிடலாம். சுற்றளவின் அடிப்படையில் நான்காவது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்கினாலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் பெற்றிருப்பதோ இரண்டாம் இடம்.

கடந்த சில தசாப்தங்களில், பல உற்சாகமான தொழில் முனைவோர்களின் வெற்றிக் கதைகள் யுவர்ஸ்டோரி ஆங்கிலம் மற்றும் தமிழில் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் சாதித்தோரின் வெற்றிப் பயணங்களை பகிர்ந்துள்ளோம். 

 Freshdesk முதல் Indix, Zoho என யுவர்ஸ்டோரி பெருமைப்படுத்திய வெற்றிக்கண்ட தொழில் முனைவோர்கள் எக்கச்சக்கம்.

தொழில்நுட்பம் மற்றும் தொழில் முனைவோருக்கான மாநாடுகளை முன்னின்று கொண்டு செல்வதிலும் யுவர்ஸ்டோரியே முன்னோடி. அந்த வகையில், தமிழகத்தைச் சேர்ந்த தொழில் தலைவர்கள் மற்றும், தொழில் முனைவர்களை ஒன்று சேர்க்கும் வகையிலும், பல தலைமுறைகளாக தொழிலில் வெற்றி கண்ட தொழிலதிபர்களையும் கெளரவிக்கும் வண்ணம், ‘Secret to Scaling up in 2020’ என்ற தலைப்பில் கோவை மற்றும் மதுரையில் கருத்தரங்கு நடத்த உள்ளது.

ஜனவரி 31ம் தேதி கோவை தாஜ் விவாந்தா மற்றும் மதுரை கோர்ட்யார்டு மாரியட் ஹோட்டலிலும் மாலை 6 முதல் 9 மணி வரை இந்த கருத்தரங்கு நடக்க உள்ளது.

‘Secret to Scaling up in 2020’ அதாவது ’2020க்குள் தொழிலை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான ரகசியம்’ என்ற தலைப்பை உள்ளார்ந்து ஆராய்ந்து கண்டறியும் நோக்கில் ஒரே மேடையில், முக்கிய வர்த்தகத் தலைவர்கள், முதலீட்டார்கள், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் வெற்றி தொழிலதிபர்களை ஒன்று சேர்த்து உங்கள் முன்னே கொண்டு வருகிறோம்.

இந்நிகழ்வில், தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கான வழிகள் என்பதில் தொடங்கி உங்களுக்கு இருக்கும் பல தொழில் சார்ந்த சந்தேகங்களை, கேள்விகளை விருந்தினர்களாக வருகை தரவுள்ள தமிழகத்தின் தொழில் முனைவு சூப்பர் ஸ்டார்களிடம் கேட்டறியலாம். 

இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்னகளாக டாக்டர்.ஏ.வேலுமணி; தைரோகேர் நிறுவனர், சிஇஓ, சிகே. குமாரவேல்; நேச்சுலர்ஸ் சலூன் நிறுவனர், சந்தோஷ் பாபு ஐஏஎஸ்; தமிழக ஐடி செயலாளர்; குப்புலஷ்மி கிருஷ்ணமூர்த்தி; சோஹோ பிராண்ட் தூதுவர்; ஷ்ரத்தா ஷர்மா; யுவர்ஸ்டோரி நிறுவனர், சுஹேல் சத்தார்; பேசிக்ஸ் ப்ராண்ட் நிறுவன இயக்குனர், சுஜித் குமார், மாற்றம் பவுண்டேஷன், மலர்விழி; ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி தலைவர்,ஹேமலதா அண்ணாமலை; ஆம்பியர் எலக்ட்ரிக்ஸ் நிறுவனர், சிவராஜா ராமநாதன்; நேடிவ் லீட், ரமேஷ்; தங்கமயில் ஜுவல்லரி நிறுவனர் மற்றும் பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர்.

விழாவின் தொடக்கமாய், ‘யுவர் ஸ்டோரி’ நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஷ்ரத்தா ஷர்மா, ‘வெற்றிகரமான சூழலுக்கான ரகசியம்’ குறித்து பங்கேற்பாளர்களுடன் பேசுகிறார். 

அடுத்து, சிறப்பு விருந்தினர்கள் அவர்கள் தொழிலில் முட்டி, மோதி, எழுந்து நின்ற எழுச்சிமிக்கக் கதையை பகிர்ந்துக் கொள்வார்கள்.

இதனைத் தொடர்ந்து, நடுநிலையாளராக யுவர் ஸ்டோரியின் நிறுவனர் ஷ்ரத்தா இருக்க, மற்ற சிறப்பு விருந்தினர்களுடன் ‘’Secret to Scaling up in 2020’ பற்றிய கலந்துரையாடல் நடைப்பெறும்.

இறுதியாக நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, கொங்கு மண்டலம் மற்றும் மதுரை சுற்றியுள்ள ஊர்களில் இருந்து தொழிலில் வெற்றி அடைந்த தொழிலதிபர்களை, கோவை மற்றும் மதுரையின் அந்தந்த விழா மேடையில் கெளரவிக்க உள்ளது யுவர்ஸ்டோரி.

நிகழ்ச்சி விவரம்:

தேதி : 31 ஜனவரி 2019 | இடம் : தாஜ் விவாந்தா, கோவை   

தேதி : 01 பிப்ரவரி 2019 | இடம் : கோர்ட்யார்ட் மேரியட், மதுரை

நேரம் : மாலை 6 மணி முதல் 9 மணி வரை


கோவை விழாவில் பங்குபெற விரும்புவோர் பதிவு செய்ய: https://zfrmz.com/nD2FAlYVTKVHaEQeNhzR

மதுரை விழாவில் பங்கபெற விரும்புவோர் பதிவு செய்ய: https://zfrmz.com/8JnvVyfMVqB9ZuyNZfDT

இந்த அற்புதமான நிகழ்வை நீங்கள் ஏன் மிஸ் பண்ணக்கூடாது? என்பதற்கு நிறைய காரணங்கள் உங்களுக்கு வழங்கியுள்ளோம் என நம்புகிறோம்.

மிஸ் பண்ணீராதீங்க... அப்பறம் வருத்தப்படுவீக!!!