மின்னணு சாதன ஏற்றுமதியில் தமிழ்நாடு அசத்தல்: தேசிய ஏற்றுமதியில் 30% பங்களிப்பு!
2023 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, 2024-ல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மின்னணுப் பொருட்கலில் 30% பங்களிப்பை தமிழ்நாடு செய்துள்ளது.
2023 நிதியாண்டில் இந்தியாவின் மிகப்பெரிய மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதி மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, 2024-ல் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மின்னணுப் பொருட்கலில் 30% பங்களிப்பை தமிழ்நாடு செய்துள்ளது.
2022-வரை மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் உத்தரப் பிரதேசமும் கர்நாடக மாநிலமும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆகவே, தமிழ்நாடு தாமதமாகவே இந்தத் துறையில் முன்னேறி இப்போது வீறு நடை போடுகிறது என்று தி இந்து (ஆங்கிலம்) நாளிதழ் செய்தி ஒன்று தெரிவிக்கிறது.
இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள மாநிலங்களில், தமிழ்நாட்டின் எண்ணிக்கை மட்டுமே தொடர்ந்து உயர்ந்து வருகிறது, மற்ற மாநிலங்களின் புள்ளிவிவரங்கள் குறைந்துவிட்டன அல்லது தேக்கமடைந்துள்ளன.
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் மின்னணுப் பொருட்கள் தறையின் பங்கு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது - பெரும்பாலும் தமிழ்நாட்டின் பங்களிப்பின் அதிகரிப்பு காரணமாகவே சமீபத்திய ஆண்டுகளில் ஒட்டுமொத்த ஏற்றுமதி அதிகரித்துள்ளது .
இந்த ஏற்றுமதி உயர்வுக்குக் காரணம் ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதியே. இது தற்போது இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் 40%- ஐ நெருங்குகிறது. கடந்த இரண்டு நிதியாண்டுகளில், இந்தியாவில் சுமார் 40% ஸ்மார்ட்போன்கள் தமிழ்நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தில் இருந்து மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன.
பெரும்பாலும் மொபைல் போன்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த ஏற்றுமதிகள் அமெரிக்காவிற்கும், அதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நெதர்லாந்துக்கும் செல்கின்றன.
ஏப்ரல் 2023 மற்றும் ஜனவரி 2024க்கு இடையில், தமிழ்நாடு 7.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2022ம் ஆண்டின் அளவை விட நான்கு மடங்கு அதிகமாகும்.
2024 நிதியாண்டில் தமிழகத்தின் ஏற்றுமதி உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவின் ஒருங்கிணைந்த ஏற்றுமதியை விட ($6.7 பில்லியன்) அதிகமாக உள்ளது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா இந்தத் துறை ஏற்றுமதியில் சமீப காலங்களில் தேக்க நிலை அடைந்துள்ளது என்கிறது தி இந்து செய்தி.
2024-ம் நிதியாண்டின் பிப்ரவரி மாதம் முடிய இந்தியாவின் ஏற்றுமதிகள் பொறியியல் பொருட்கள் ($98 பில்லியன்), அதைத் தொடர்ந்து பெட்ரோலிய பொருட்கள் ($78 பில்லியன்), ரத்தினங்கள் மற்றும் நகைகள் ($30 பில்லியன்), மற்றும் மின்னணு பொருட்கள் ($25 பில்லியன்) ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்காவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் மிகப்பெரிய சந்தைகளாகும். 2024-ம் ஆண்டு பிப்ரவரி வரை 8.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் எலக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றுமதியில் 35% ஐ அமெரிக்கா இறக்குமதி செய்தது, அதைத் தொடர்ந்து UAE 3 பில்லியன் டாலர் அதாவது, 12% இறக்குமதி செய்துள்ளது.
நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்தின் பங்கு தலா 5% ஆக உள்ளது. இந்தத் தரவுகளை ஒட்டுமொத்தமாகச் சேர்த்துப் பார்க்கும் போது 2023 மற்றும் 2024-ம் நிதியாண்டுகளில் தமிழ்நாடு, காஞ்சிபுரத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட் போன்களின் எண்ணிக்கை இந்திய ஏற்றுமதிச் சந்தையையே தீர்மானித்துள்ளது என்று தெரியவருகிறது.
தகவல் உதவி: தி இந்து | கட்டுரை தொகுப்பு: முத்துகுமார்