Caratlane பெரும்பான்மை பங்குகளை வாங்கும் டாடா - ESOPs மூலம் கோடீஸ்வரர்கள் ஆகப்போகும் ஊழியர்கள்!
டாடா குழுமத்தின் டைட்டன் சமீபத்தில் கேரட்லேன் என்ற நகைக்கடை ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கப்போவதாக அறிவித்துள்ளது, இதனால் ஸ்டார்ட்அப் நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
டாடா குழுமத்தின் டைட்டன் சமீபத்தில்
என்ற நகை ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கப்போவதாக அறிவித்துள்ளது, இதனால் ஸ்டார்ட்அப் நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.முன்னணி நகைக்கடை நிறுவனமான கேரட்லெனின் ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. நிறுவனத்தில் உள்ள மொத்தம் 75 ஊழியர்களுக்கு தலா ரூ.340-380 கோடி வரை போனஸ் கிடைக்க உள்ளது. இவர்களுக்கு இஎஸ்பி பேஅவுட் (பணியாளர் பங்கு உரிமைத் திட்டம்) முறையின் கீழ் இந்த பெருந்தொகை கிடைக்கவுள்ளது.
கேரட்லேனை கையகப்படுத்தும் டாடா:
கேரட்லேனில் டைட்டன் 71.09 சதவீத பங்குகளை வைத்துள்ளது. மீதமுள்ள 27.18 சதவீத பங்குகளை ரூ.4,621 கோடிக்கு வாங்கவும் தயாராக உள்ளது.
ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டு, அக்டோபர் 31, 2023க்குள் கையகப்படுத்தல் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா குழும நிறுவனமான டைட்டன் கோ லிமிடெட் முதலில் ஜூலை 14, 2023 அன்று கேரட்லேன் நிறுவனத்தின் 62 சதவீத பங்குகளை ரூ.357.24 கோடிக்கு வாங்கியது. டாடா குழுமம் ஆன்லைன் நகை சந்தையில் பிரபலமான பிராண்டாக உள்ளது, தற்போது அதனை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக கேரட்லேன் நிறுவனத்தை வாங்குகிறது.
ஏனெனில், இந்நிறுவனம் வடிவமைப்பு, உற்பத்தி, தொழில்நுட்பம், இ-காமர்ஸ், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதில் வலுவான கட்டமைப்பை கொண்டுள்ளது.
இப்போது அது கேரட்லேன் நிறுவனத்தில் 71.09 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. மீதமுள்ள 27.18 சதவீத பங்குகளை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மிதுன் சம்ஷெட்டி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து வாங்க ரூ.4,621 கோடி செலுத்த நிறுவனம் தயாராக உள்ளது.
கேரட்லேன் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்:
கேரட் நிறுவனத்தில் சுமார் 1500 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் சில்லறை வணிகம் மற்றும் உற்பத்தித் துறைகளில் பணிபுரிகின்றனர். ஆனால், அவர்களுக்கு நிறுவனத்தில் பங்குகள் இல்லை. இருப்பினும், டைட்டன் அவர்களில் சிலருக்கு பெரும் போனஸ் மற்றும் உயர்வுகளை அறிவித்துள்ளது. இந்த 1500 பேரில், சுமார் 400 ஊழியர்கள் இந்த ஸ்டார்ட்அப்பின் கார்ப்பரேட் குழுவில் பங்குதாரர்களாக உள்ளனர்.
இவர்களில் 75 பேருக்கு ரூ.340-ரூ.380 கோடி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், அவர்கள் அனைவருக்கும் நிறுவனத்தில் 1.72 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளனர். ஆனால், இவற்றையும் விரைவில் டைட்டன் கையகப்படுத்து திட்டமிட்டுள்ளது.