Stock News: பங்குச் சந்தையில் பச்சை விளக்கு - சென்செக்ஸ் 700+ புள்ளிகள் உயர்வு!
ஐடி மற்றும் வங்கி நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் பச்சை விளக்குடன் கூடிய பாசிட்டிவ் போக்கு நிலவுகிறது.
ஐடி மற்றும் வங்கி நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளர்கள் காட்டி வரும் ஆர்வத்தின் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் பச்சை விளக்குடன் கூடிய பாசிட்டிவ் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.2) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 242.95 புள்ளிகள் உயர்ந்து 78,750.36 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 69.25 புள்ளிகள் சரிந்து 23,812.15 ஆக இருந்தது.
வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஏற்றம் நிலவுவது, முதலீட்டாளர்கள் மத்தியில் உத்வேகத்தைக் கூட்டியுள்ளது.
இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 701.75 புள்ளிகள் (0.89%) உயர்ந்து 79,209.16 ஆகவும், நிஃப்டி 215.45 புள்ளிகள் (0.91%) உயர்ந்து 23,958.35 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
புத்தாண்டை முன்னிட்டு அமெரிக்க பங்குச் சந்தையில் விடுமுறை. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், சியோல் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தைகளில் வீழ்ச்சி நிலவுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவது மட்டுமின்றி, ஐடி மற்றும் வங்கி நிறுவன பங்குகள் மீது உள்நாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வத்தின் எதிரொலியாக இந்தியப் பங்குச் சந்தைகளில் ஏற்றம் நிலவி வருகிறது.
ஏற்றம் காணும் பங்குகள்:
பஜாஜ் ஃபைனான்ஸ்
மாருதி சுசுகி
எம் அண்ட் எம்
இன்ஃபோசிஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஹெச்சிஎல் டெக்னலாலஜிஸ்
அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்
டிசிஎஸ்
டைட்டன் கம்பெனி
நெஸ்லே இந்தியா
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்ப்.
எஸ்பிஐ
என்டிபிசி
சன் பார்மா இண்டஸ்ட்ரீஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 பைசா குறைந்து ரூ.85.75 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan