‘TechSparks2020’ - இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் மாநாடு இந்த ஆண்டு மெய்நிகர் வடிவில்!
டெக்ஸ்பார்க்ஸ் 2020 அக்டோபர் மாதம் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை முதல் முறையாக மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது.
’TechSparks' இந்தியாவின் மிகப்பெரிய, உந்துதலளிக்கக்கூடிய, அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்டார்ட் அப் மாநாடாக விளங்குகிறது. 11 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்நிகழ்வு மிகப்பிரபலமான இந்திய பிராண்டுகள், செல்வாக்குள்ளவர்கள், தொழில்முனைவோர் ஆகியோரின் வளர்ச்சிக்கு உதவியுள்ளது.
இந்தியாவின் தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு சுற்றுச்சூழலை சிறப்பாக வடிவமைப்பதில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்நிகழ்வு முக்கியக் கருவியாக விளங்கியுள்ளது. அத்துடன் ஸ்டார்ட் அப்கள் 1 பில்லியன் டாலருக்கும் மேலாக நிதி திரட்டவும், ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும், 3,00,000-க்கும் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவும் உதவியுள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் டெக்ஸ்பார்க்ஸ் 2020 டிஜிட்டல் அனுபவத்துடன் மேற்கூறியவை மட்டுமல்லாது கூடுதல் அம்சங்களிலும் கவனம் செலுத்த உள்ளது.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு 'டெக்ஸ்பார்க்ஸ் 2020' முதல் முறையாக மெய்நிகர் வடிவில் நடைபெற உள்ளது. பங்கேற்பாளர்கள் நேரலை அமர்வுகள், மாஸ்டர்கிளாசஸ், பிராடக்ட் அறிமுகம், கொள்கை விவாதங்கள் போன்றவற்றில் பங்கேற்கலாம்; வெவ்வேறு துறை மற்றும் வெவ்வேறு பகுதிகளில் உள்ள தலைவர்களுடன் இணையலாம்; வீட்டில் இருந்தவாறே உலகம் முழுவதும் உள்ளவர்களுடன் ஒருங்கிணையலாம்.
TechSparks 2020 நிகழ்வில் தொழில்முனைவு சுற்றுச்சூழலில் முக்கியப் பங்கு வகிப்போர்களை யுவர்ஸ்டோரி ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம் வருங்கால தொழில்முனைவோர்களுக்கு உந்துதலளிக்கும் வகையில் கலந்துரையாடல்கள் திட்டமிடப்படும். மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அடுத்த தலைமுறையினருக்கு இந்த ஒருங்கிணைப்பு சக்தியளிக்கும்.
“ஒவ்வொரு ஆண்டும் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வு முன்பைக் காட்டிலும் பெரியளவிலும் பார்வையாளர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் சிறப்பாக ஏற்பாடு செய்வதில் தீவிரம் காட்டுகிறோம். இந்த ஆண்டு மெய்நிகர் வடிவில் நடைபெறுவதால் பலரை உள்ளடக்கிய நிகழ்வாக இருக்கும். பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய சுற்றுச்சூழலைச் சேர்ந்த தலைவர்கள் இணைந்துகொண்டு முன்னெப்போதும் இல்லாத வகையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்,” என்றார் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மா.
டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் இடம்பெறக்கூடிய முக்கிய அம்சங்கள் இதோ:
’ஆத்ம நிர்பார் பாரத்’ திட்டத்திற்கு சிறப்பு கவனம்
பிரதமர் நரேந்திர மோடியின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கு இணங்க தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதில் பங்களிக்கக்கூடிய இந்திய ஸ்டார்ட் அப்கள், யோசனைகள், புத்தாக்கங்கள், பிராண்டுகள் போன்றவை கொண்டாடப்படுவதற்கான தளம் டெக்ஸ்பார்க்ஸ் 2020 நிகழ்வில் வழங்கப்படும்.
இந்நிகழ்வில் புதிய போக்குகள், புத்தாக்கங்கள், முக்கியத் துறைகளில் வரவிருக்கும் வாய்ப்புகள் போன்றவை சிறப்பு கவனம் பெறும். டிஜிட்டல் மாற்றம், கல்வி தொழில்நுட்பம், நிதி தொழில்நுட்பம், விவசாய தொழில்நுப்டம், சுகாதார தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், SaaS போன்றவை இதில் அடங்கும்.
உலகளாவிய ஒருங்கிணைப்பு உருவாக்கப்படும்
டெக்ஸ்பார்க்ஸ் 2020 உலகளாவிய நிகழ்வு என்பதால் யூகே, அமெரிக்கா, இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி, இஸ்ரேல், சிங்கப்பூர், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் உள்ள பார்டனர்களிடமிருந்து சர்வதேச போக்குகள் தொகுத்து வழங்கப்படும்.
இதன் மூலம் இந்த நாடுகளில் உள்ள புத்தாக்க சுற்றுச்சூழல் முன்னிலைப்படுத்தப்படுவதுடன் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சியடைய விரும்பும் இந்திய ஸ்டார்ட் அப்கள் இவர்களுடன் இணைந்து செயல்படவும் வாய்ப்பளிக்கபடும்.
செல்வாக்குள்ளவர்களுடன் இணைப்பு
VC, இணைந்து செயல்படுவோர் (Collaborator) அல்லது வழிகாட்டிகளுடன் ஒருங்கிணைவது ஸ்டார்ட் அப்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். முன்னணி VC-க்கள், நிறுவனங்கள், செல்வாக்குள்ளவர்கள், கொள்கை உருவாக்குபவர்கள், கார்ப்பரேட் ஆக்சலரேட்டர்கள், வணிக தலைவர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் போன்றோரை ஸ்டார்ட் அப்கள் சந்திக்க உதவும் வகையில் டெக்ஸ்பார்க்ஸ் செல்வாக்குள்ளவர்களுடனான சந்திப்பு நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களது தேவைகளைப் புரிந்துகொண்டு ஸ்டார்ட் அப்கள் அடுத்த கட்டத்திற்கு வளர்ச்சியடைய முடியும்.
ஸ்டார்ட் அப்கள் செயல்படும் துறை, நிதி நிலை மற்றும் இதர அளவுகோல்களின் அடிப்படையில் VC மற்றும் ஸ்டார்ட் அப்களிடையே தனிப்பட்ட சந்திப்புகளை யுவர்ஸ்டோரி ஏற்பாடு செய்யும். புதுமையான மெய்நிகர் நெட்வொர்கிங் இடைமுகத்தைப் பயன்படுத்தி டெக்ஸ்பார்க்ஸ் முக்கிய முதலீட்டாளர்களையும் தொழில்முனைவர்களையும் ஒன்றிணைக்கும்.
டெக்30
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது போன்றே இந்த ஆண்டும் இந்தியாவின் வளர்ந்துவரும் சிறந்த 30 தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்களை இந்நிகழ்வு அறிமுகப்படுத்தும்.
டெக்ஸ்பார்க்ஸ் தளத்தில் முதலீட்டாளர்கள், வழிகாட்டிகள், வணிகத் தலைவர்கள் போன்ற பெரும்புள்ளிகளுடன் நேரலை சந்திப்புகள் மூலம் இணைய இறுதி போட்டியாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.
சிறப்புச் சலுகைகள்
2020-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ள டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் ஸ்டார்ட் அப் விருதுகள், பிராடக்ட் அறிமுகங்கள், கொள்கை விவாதங்கள், மாஸ்டர்கிளாசஸ் போன்றவற்றில் பங்கேற்க யுவர்ஸ்டோரி உங்களை அழைக்கிறது. இப்போதே இணைந்து சிறப்பு சலுகைகள் பெறலாம்.
TechSparks 2020-ல் பங்குபெற உடனே பதிவு செய்ய: டெக்ஸ்பார்க்ஸ் 2020