'விளம்பர வருவாய் மூலம் நிறுவன வளர்ச்சியை சாத்தியப்படுத்துவோம்’ – Meesho சிஇஓ விதித் ஆத்ரேய்!
மீஷோ தளத்தில் இணையும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான விற்பனையாளர்களின் விளம்பர வருவாய் மூலம் நிறுவனம் வளர்ச்சியடையும் என்று மீஷோ இணை நிறுவனர் மற்றும் சிஇஓ விதித் ஆத்ரேய் யுவர்ஸ்டோரின் டெக்ஸ்பார்க்ஸ் நிகழ்வில் தெரிவித்தார்.
சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்களுக்கான விளம்பரம் மூலம் மிகப்பெரிய நிறுவனத்தை கட்டமைக்க விரும்புகிறது
தளம்.இந்த மின்வணிக தளம் இரண்டாம் நிலை நகரங்களை இலக்காகக் கொண்டுள்ளது. ஏற்கெனவே உள்ள வணிக மாதிரியைக் கொண்டு வணிகத்தை வளர்ச்சியடையச் செய்யவும் புதிய பிரிவுகளை இணைத்துக்கொள்ளவும் விரும்புகிறது.
“நாங்கள் தொடங்கியபோது ஜீரோ கமிஷன் தளமாக தொடங்கவில்லை,” என்று யுவர்ஸ்டோரி டெக்ஸ்பார்க்ஸ் 2022 நிகழ்வில் யுவர்ஸ்டோரி நிறுவனர் மற்றும் சிஇஓ ஷ்ரத்தா ஷர்மாவிடம் பகிர்ந்துகொண்டார் மீஷோ இணை நிறுவனர் மற்றும் சிஇஓ விதித் ஆத்ரேய்.
இந்த காரணத்தினால் ஃபேஷன் மற்றும் ஆக்சசரி பிரிவிலிருந்து அதிகளவிலான விற்பனையாளர்கள் இந்தத் தளத்தில் இணைந்துகொண்டதாகத் தெரிவிக்கிறார்.
”இந்த வணிகங்களை நாங்கள் சந்தித்தபோது, தளத்திற்கு கமிஷன் கொடுப்பதற்கும் ஷிப்பிங் செலவுகளை சமாளிக்கவும் போதுமான அளவு லாபம் கிடைப்பதாக இந்தப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். இது சரியல்ல என தீர்மானித்த நாங்கள் விற்பனையாளர்களிடம் கமிஷம் பெறும் முறையை நீக்கிவிட்டோம். இதனால் தனித்துவமான சிறு விற்பனையாளர்களும் தனித்துவமான தயாரிப்புகளும் அதிகளவில் தளத்தில் இணைந்துகொண்டன,” என்கிறார் விதித்.
ஒருகட்டத்தில் மீஷோ தளத்தில் ஃபேஷன் மற்றும் துணி பிரிவுகளின் பங்களிப்பு குறைந்தது. 2020ம் ஆண்டில் 60 சதவீதமாக இருந்த பெண்களுக்கான துணி வகைகளின் பங்களிப்பை 2022ம் ஆண்டில் 40 சதவீதமாக இந்நிறுவனம் குறைத்தது, என்கிறார்.
இந்தத் தளத்தில் இணைந்திருந்த விற்பனையாளர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே விளம்பரங்கள் செய்து பழக்கம் இல்லாதவர்கள். இதனால் மீஷோ அதன் தயாரிப்புகளை விளம்பரப்படுத்துவதை எளிமையாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொண்டதாக விதித் தெரிவிக்கிறார்.
மிகப்பெரிய மின்வணிக நிறுவனங்கள் பின்பற்றிய முறையை மீஷோ தளம் பின்பற்றவில்லை. மாறாக லாஜிஸ்டிக்ஸ் மற்றும் பேமெண்ட் நிறிவனங்களுடன் பார்ட்னர்ஷிப் முறையில் கைகோர்த்துக்கொண்டது. இந்த முன்னெடுப்பு சிறு வணிகங்களின் ஆன்லைன் விற்பனைக்கு பெரிதும் உதவியதாக விதித் சுட்டிக்காட்டினார்.
2021 நிதியாண்டில் லாஜிஸ்டிக்ஸ், மனித வளம் ஆகிய இரண்டிலும் செலவினங்கள் அதிகம் இருந்துள்ளது. மீஷோ தளம் அதன் விற்பனையாளர்களுக்கு லாஜிஸ்டிக்ஸ் மற்றும் ஆர்டர் பூர்த்தி செய்யப்படும் சேவைகளை வழங்குகிறது.
ஏற்கெனவே வழங்கப்படும் சேவையுடன் கூடுதல் சேவைகளை இணைத்துக்கொள்ள பார்ட்னர்ஷிப் முறையில் மீஷோ செயல்படுகிறது. பலதரப்பட்ட சேவைகளில் கவனம் செலுத்தாமல் ஒரு பிரச்சனையில் கவனம் செலுத்தி தீர்வளிக்கிறது. இத்தகைய நடவடிக்கைகளால் செலவினங்களைக் குறைப்பதாக விதித் தெரிவிக்கிறார்.
மீஷோ தளம் தரம், போலியான தயாரிப்புகள் போன்ற பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண்பதாக விதித் சுட்டிக்காட்டினார்.
‘ஓலா தயாரிப்புகள் சிறப்பாக இருப்பதாலே மக்கள் அதை வாங்குகின்றனர்’ – பவிஷ் அகர்வால்!