‘விளம்பர வருவாய் மூலமே Meesho-வின் வருங்கால வளர்ச்சி இருக்கும்’ - இணை நிறுவனர் விதித் ஆத்ரே!
யுவர்ஸ்டோரி ஆண்டு நிகழ்வான TechSparksல், மீஷோ மேடையில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்களிடமிருந்து வரும் விளம்பர வருவாய் மூலம் நிறுவனம் தனது வணிகத்தை வளர்க்க விரும்புகிறது, என்று இணை நிறுவனர் மற்றும் சிஇஒ, விதித் ஆத்ரே கூறினார்.
யுவர் டோரியின் 13வது டெக்ஸ்பார்க் நிகழ்ச்சியில் Meesho நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விதித் ஆத்ரே கலந்துகொண்டார். இந்தியாவின் முக்கியமான சோசியல் காமர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் உடன் யுவர் ஸ்டோரி தலைமைச் செயல் அதிகாரி ஷ்ரத்தா சர்மா உரையாடினார்.
இந்தியாவில் இ-காமர்ஸ் நிறுவனங்கள் இருந்தாலும் அந்த தளங்களில் சிறு நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் குறைவாக இருந்தது. முதல் காரணம் இணையம் மூலம் பொருட்களை வினியோகம் செய்வது செலவு அதிகம் கொண்டது, கமிஷன் கொடுக்க வேண்டி இருந்தது.
அதேபோல, ஷிப்பிங் கட்டணமும் அதிகமாக இருந்ததால் சிறு வர்த்தகர்களுக்கு லாபம் குறைவாக இருந்தது. அதனால் இ-காமர்ஸ் நிறுவனங்களில் சிறு வணிகர்கள் இல்லை.
அதே சமயத்தில் வாடிக்கையாளர்களுக்கும் பல சிக்கல்கள் இருந்தன. என்னுடைய மற்றும் என் இணை நிறுவனரின் அம்மாகள் அருகில் இருக்கும் கடைகளுக்கு மட்டுமே ஆடைகள் வாங்க செல்வார்கள்.
2015ம் ஆண்டு ’Meesho'-வை தொடங்கினோம். அப்போது ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும், வாட்ஸ் ஆப் தவிர வேறு எந்த செயலிகளும் போனில் இல்லை.
”நாங்கள் தொடங்கும் வரையில் அமெரிக்காவில் ஒரு ஸ்டார்ட் அப் உருவாகி இருக்கும். அதனுடைய இந்திய மாடலை இங்கு தொடங்குவதுதான் ஸ்டார்ட் அப்- ஆக இருந்தது. இந்தியாவுக்கு என பல பிரச்சினைகள் இருக்கின்றன. அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்ற நிறுவனங்கள் உருவாகவில்லை. அந்த இடத்தை நிரப்பவே மீஷோவை தொடங்கினோம்,” எனக் கூறினார்.
எங்களிடம் இன்வெண்ட்ரி இல்லை பார்டனர்கள் மூலமே பிஸினஸை விரிவாக்கம் செய்தோம்.
உதாரணத்துக்கு இந்தியாவின் பிரச்சினைகள் வேறு. ஒரு பொருளை வேண்டாம் என்று சொன்னால் அந்த பணத்தை திருப்பி தர வேண்டும்.
ஆனால், மனைவியிடம் வங்கி கணக்கு இருக்காது. அதனால் அந்த பணம் கணவரின் கணக்கு இயல்பாக செல்லும். ஆனால் இந்த பிரச்சினை இந்தியாவின் பிரச்சினை. இதனை நாங்கள் தீர்த்திருக்கிறோம் என்றார்.
மீஷோவின் பிஸினஸ் மாடல் குறித்த ஷ்ரத்தாவின் கேள்விக்கு பதிலளித்த விதித், நிறுவனம் தொடங்கும்போதே கமிஷன் மாடலில் செயல்பட வேண்டாம் என முடிவெடுத்துவிட்டோம். கமிஷன் அடிப்படையில் செயல்படத் தொடங்கினால், எந்த பொருளுக்கு அதிக கமிஷன் கிடைக்கிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி இருக்கும். அதனால் விளம்பர மாடலில் செயல்பட்டுவருகிறோம். பல சர்வதேச நிறுவனங்கள் இந்த மாடலில் செயல்படத் தொடங்கி இருக்கின்றன.
”விளம்பரம் மூலமே வருமானம் ஈட்டி வருங்கால வளர்ச்சியை திட்டமிட்டுள்ளோம். இப்போது நிலைமை நன்றாக இருந்தாலும் 2017ம் ஆண்டு பெரும் நெருக்கடியில் இருந்தோம் அதன் பிறகு, நிதி திரட்டினோம். நாங்கள் நிதி திரட்டினாலும் எந்த நிறுவனத்தையும் வாங்கவில்லை. இந்தியாவில் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து இந்தியாவுக்கு ஏற்ற நிறுவனமாக மாற வேண்டும்,” என மீஷோ நிறுவனர் பேசினார்.
'Byju's காணாமல் போகும் என்றவர்களுக்கு நான் சொல்வது சான்சே இல்லை...’ - TechSparks-இல் பைஜு ரவீந்திரன்!