சென்னை நிறுவனம் Jidoka-வில் ரூ.6 கோடி முதலீடு செய்தது சென்னை ஏஞ்சல்ஸ்!
முன்னணி தேவதை முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி சென்னை ஏஞ்சல்ஸ், சென்னையைச் சேர்ந்த ஜிடோகா ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் இரண்டு கட்டங்களாக ஆறு கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஏஞ்சல் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ’தி சென்னை ஏஞ்சல்ஸ்’, சென்னையைச் சேர்ந்த
என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ரூ.3 கோடி முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் ரூ.3 கோடி இந்த ஆண்டு முதலீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.ஜிடோகா (Jidoka) நிறுவனம், விஷுவல் டிபெக்ட்ஸ் கண்டறிதல் மற்றும் ஆடியோ சோதனை சேவைகளை தானியங்கி முறையில் வழங்கி வருகிறது. ஆட்டோமொபைல், பேகேஜிங், மருந்தகங்கள், மின்னணு துறை, நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட துறைகளில் மிகவும் நுட்பம் வாய்ந்த செயல்முறையாக இவை அமைகின்றன.
பல்வேறு துறையில் இந்தியாவில் சந்தைக்கு ஏற்ற சேவைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதோடு, சர்வதேச சந்தைக்கு ஏற்ப சேவையை மேம்படுத்தவும் இந்த நிதியை நிறுவனம் பயன்படுத்த உள்ளது.
தொழில்முறை 4.0 க்கு ஏற்ப செயல்படுவதன் மூலம், ஜிடோகா டெக்னாலஜிஸ், தரக்கப்பட்டுபாட்டில் உற்பத்தியாளர்களுக்கான டிஜிட்டல் மாற்றத்தை எளிதாக்குகிறது. சோதனை செயல்பாடுகளை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஸ்மார்ட்டாக்குவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“கடந்த காலாண்டில் பல்வேறு முதலீட்டாளர்களை அணுகி வருகிறோம். கடினமான கேள்வி பதில் முறைக்கு பதிலாக சென்னை ஏஞ்சல்ஸ் எங்கள் நிதி திரட்டும் பயணத்தில் ஒரு பங்குதாரராக இருக்கிறது. ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மத்தியில் எங்களை சிறப்பாக நிலை நிறுத்திக்கொள்ள உதவியதோடு, எதிர்கால நோக்கிலான வர்த்தகத் திட்டத்தை வகுப்பதிலும் உதவுகின்றனர்,” என்று ஜிடோகா நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சேகர் உதயமூர்த்தி கூறியுள்ளார்.
“பெரும்பாலான நிறுவனங்களுக்கு முக்கியமான துறையில் ஜிடோகா செயல்பட்டு வருகிறது. இந்த குழு தொழில்நுட்பம் சார்ந்த சிறந்த தீர்வுகளை உருவாக்கி இருக்கிறது. நிறுவனம் சர்வதேச அளவி வளர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளதாக நம்புகிறோம்,” என்று சென்னை ஏஞ்சல்ஸ் லீட் இன்வெஸ்டர், கெவின்கேர் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ வெங்கடேஷ் விஜயராகவன் கூறியுள்ளார்.
“ஜிடோகா நிறுவனர்கள் ஆழமான தொழில்நுட்பம் சார்ந்த சோதனை முறையுடன் இணைந்த தானியங்கி தீவிர முறை நுகர்வோருக்கு பாதுகாப்பான பொருட்களை அளிக்க உதவும் என நம்புகின்றனர். சென்னை ஏஞ்சல்ஸ் இதனுடன் உடன்படுகிறது,” என ஐசிடி அகாடமி தலைவர் லட்சுமி நாராயணன் கூறியுள்ளார்.
ஜிடோகா நிறுவனம் புத்திசாலித்தனமான தானியங்கி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலை தானியங்கிமயமாக்கலுடன் செயற்கை நுண்ணறிவு கலந்த தீர்வுகளை வழங்கி வருகிறது.