வாட்ச்மேன் மகனில் இருந்து ’சூப்பர் கிங்’ கிரிக்கெட் வீரர் ஆன ரவீந்திர ஜடேஜாவின் ஊக்கமிகு கதை!
வாட்ச்மேன் மகனாக பிறந்து வளர்ந்து கிரிக்கெட் ஆர்வத்தால் மிக உயரிய உயரத்தை அடைந்த ரவீந்திர ஜடேஜாவின் கதை!
ஐபிஎல் போட்டிகளில் அதிக விசிறிகளைக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறையும் அபாரமாக விளையாடி வேகமாக பட்டியலில் முன்னேறி வருகிறது. CSK அணியில் உள்ள எல்லா வீரர்களும் கிரிக்கெட் ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர்களே. அதில் ரவீந்திர ஜடேஜாவிற்கும் தனி இடம் உண்டு.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடது கை ஆட்டக்காரரான ரவீந்திர ஜடேஜா சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இவருக்கு இரண்டு மில்லியன் டாலர் (9.8 கோடி ரூபாய்) வழங்கிய பிறகு 2012-ம் ஆண்டில் அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்ட ஆட்டக்காரரானார்.
தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியில் வாட்ச்மேனாக இருக்கும் ஜடேஜாவின் அப்பா அனிருத் தனது மகனின் கனவுகளுக்கு எப்போதும் ஊக்கமளித்தார். ஜடேஜா ஆயுதப் படையில் சேரவேண்டும் என அவர் விரும்பினார். ஜடேஜாவின் பதின்ம வயதிலேயே அவரது அம்மா இறந்துவிட்டார். ஜடேஜா இந்தியாவிற்காக விளையாடவேண்டும் என்பதே இவரது விருப்பமாக இருந்தது. அத்துடன் தனது மகனுக்கு கிரிக்கெட் தொடர்பாக எந்த பிரச்சனைகளும் ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்.
2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியில் இந்தியா சார்பாக விளையாடினார் ஜடேஜா. மலேசியாவில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியா உலகக்கோப்பையை வென்றதாக Kenfolios பதிவு தெரிவிக்கிறது. அப்போதிருந்து ’சர் ஜடேஜா’ என்று சமூக ஊடகங்களில் அன்புடன் அழைக்கப்படும் இவருக்கு அனைத்தும் சிறப்பாகவே அமைந்தது.
சிஎஸ்கே அணியில் அனைவருக்கும் பிரியமானவரான இவர் சிஎஸ்கே அணியால் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட மூன்றாவது ஆட்டக்காரராவார் என ஐபிஎல் அதிகாரப்பூர்வமான வலைதளம் தெரிவிக்கிறது. 2008-ம் ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடியபோது களத்தில் அவரது சிறப்பான ஆட்டத்தைக் கண்டு அணியின் கேப்டன் ஷேன் வான் அவருக்கு ’ராக்ஸ்டார்’ என்கிற பட்டத்தை வழங்கினார்.
செவிலியர் பணியில் இருக்கும் ஜடேஜாவின் சகோதரி நைனா ஒரு நேர்காணலில் குறிப்பிடுகையில்,
”என்னுடைய சகோதரர் இந்தியா சார்பாக விளையாடுகிறார் என்பதையும் இன்று மிகப்பெரிய ஸ்டாராக இருக்கிறார் என்பதையும் நம்பவே முடியவில்லை. நாங்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் நகரம் சிறு நகரமாக இருப்பினும் கிரிக்கெட் விளையாட்டிற்கு பிரபலமானது. இன்னமும் அனைத்தும் கனவு போலவே தோன்றுகிறது. எந்த ஒரு சகோதரியும் தனது சகோதரனின் சாதனையை நினைத்து மகிழ்வாள். அதே போல் நானும் மகிழ்ச்சியடைகிறேன்,” என்றார்.
31 வயதான இந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் 2013-ம் ஆண்டு சாம்பியன் கோப்பையில் அவரது அசாத்திய திறனை வெளிப்படுத்தியதால் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தில் பிரபலமானார். இந்தப் போட்டியில் அவரது அபார பந்து வீச்சிற்காக அவருக்கு ’கோல்டன் பால்’ விருது வழங்கப்பட்டது. இன்று பந்து வீச்சில் 4-ம் இடத்திலும் பேட்ஸ்மேன்களுக்கான தர வரிசைப்பட்டியலில் 62-ம் இடத்தில் உள்ளார்.
கட்டுரை : THINK CHANGE INDIA