உயரதிகாரிகளின் இழிவசைகள்; அவமானம்; வேதனை - யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மீண்ட கான்ஸ்டபிள்!
இந்தியாவின் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் மிகக்கடினமானவை. இதற்கு நீண்ட கால வாசிப்புத் தயாரிப்பும் கடின உழைப்பும் தேவை. கறாரான இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கறாரான பல அரசு உயர் பணிகளான ஐஏஎஸ், ஐ.எஃப்.எஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளுக்கான நுழைவாயில் ஆகும். இந்த வெற்றி வாசலில் நுழைந்து வாழ்க்கையில் மேலே வ
இந்தியாவின் சிவில் சர்வீசஸ் தேர்வுகள் மிகக்கடினமானவை. இதற்கு நீண்ட கால வாசிப்புத் தயாரிப்பும் கடின உழைப்பும் தேவை. கஷ்டமான இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கறாரான பல அரசு உயர் பணிகளான ஐஏஎஸ், ஐ.எஃப்.எஸ், ஐபிஎஸ் போன்ற உயரிய பதவிகளுக்கான நுழைவாயில் ஆகும்.
இந்த வெற்றி வாசலில் நுழைந்து வாழ்க்கையில் மேலே வந்தவர்தான் சாதாரண கான்ஸ்டபிளாக இருந்து யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற ஆந்திராவின் உதய கிருஷ்ணா ரெட்டி.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் சிங்கராயக்கொண்டாவைச் சேர்ந்த உதய கிருஷ்ணா ரெட்டி 2013-ஆம் ஆண்டு முதல் பிரகாசம் மாவட்டத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார். கான்ஸ்டபிள் பணி என்றாலே உயரதிகாரிகளுக்குப் பணிவிடை செய்வது, பணிபுரிவது, நேரம் காலம் பார்க்காம உழைப்பது போன்றவை கட்டாயங்களாகும்.
இதில் உயரதிகாரிகளின் இழிபேச்சுக்களையும் வசைகளையும் எதிர்கொள்வது மிகமிகக் கடினம். குடும்பச் சூழ்நிலையினால் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டிய அபத்த வேதனை தரும் வாழ்க்கை.
2018-ல் இதே போன்ற ஒரு வேதனையை உதய கிருஷ்ணாவும் சந்தித்தார். இவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராவது இவருடைய உயரதிகாரி சர்க்கிள் இன்ஸ்பெக்டருக்குப் பிடிக்கவில்லை. இவரை கேலி செய்ததோடு, கூடுதல் ட்ரில்லும் வாங்கினார், கண்ட நேரத்தில் பணிகளைக் கொடுத்து இடையூறுகள் செய்தார். ஒருநாள் ட்ரில்லுக்கு கொஞ்சம் லேட்டாக வந்ததை சாக்காக வைத்து இவரது சகாக்கள் 60 பேர் முன்னிலையில் இவருக்கு தண்டனை கொடுத்திருக்கிறார். இதையெல்லாம் பொதுவாகப் பொறுத்துக் கொண்டு வருவதுதான் சாதாரண கான்ஸ்டபிள்களின் மனநிலையாக இருந்திருக்கும்.
அவர் மேலும் இவரை இழிவு படுத்திப் பேசுகையில், ‘நீங்களெல்லாம் கான்ஸ்டபிளாக இருக்கத்தான் லாயக்கு’, இது தான் உதய் கிருஷ்ணாவின் எழுச்சிக்குப் பின்னாலிருந்த உந்து விசை. ஏன் கான்ஸ்டபிளாக இருக்க மட்டுமே லாயக்கு. என்று உதய் கிருஷ்ணா வேறு மாதிரி சிந்தித்தார். கான்ஸ்டபிள் வேலையை அன்றே ராஜினாமா செய்தார். யுபிஎஸ்சி தேர்வுதான் இதற்கெல்லாம் ஒரே தீர்வு என்று முடிவெடுத்தார்.
கடுமையாக படித்தார், உழைத்தார், ஆனால் முதல் மூன்று முறை யுபிஎஸ்சி இவருக்கு தோல்விகளையே பரிசாக அளித்தன. ஆனாலும் அவர் கவலைப்படவில்லை. லட்சியத்தின் உயிர்நாடி துடிக்க மேன் மேலும் உழைத்தார். 780வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார்.
உதய் கிருஷ்ணா சிறு வயதிலேயே தாய் தந்தையரை இழந்தவர், ஆனால் தாத்தா பாட்டிகளின் ஆதரவு இவருக்கு பெரிய அளவில் உதவியது. பாட்டி காய்கறி விற்று இவரை காப்பாற்றினார். யுபிஎஸ்சியை 4வது முயற்சியில் கிளியர் செய்தார். தன் வெற்றி பற்றி அவர் ஊடகம் ஒன்றில் கூறும்போது, உயரதிகாரிகளால் இழிபேச்சு வாங்கிய தருணம் தான் முக்கியமான திருப்பு முனை என்றார்.
உதய கிருஷ்ணா ரெட்டியின் இந்த வெற்றிக்கதை உழைப்பு, தன்னம்பிக்கை, விடாப்பிடியான லட்சிய வேட்கைக்கான செயல் உதாரணமாகத் திகழ்கின்றது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் 3 பெண் ஊழியர்கள் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி!