தங்கத்தை சேமிக்க ஆப் வந்தாச்சு - கோல்ட் சேமிப்பு, முதலீட்டை எளிதாக்கும் ‘Gullak’
தொழில்முனைவோர் அவர்களுக்கான வெற்றி எண்ணங்களை கண்டறிந்த தருணங்களை விவரிக்கும் திருப்பு முனை தொடர் வரிசையில், தங்க முதலீட்டை தானியங்கிமயமாக்கும் பெங்களூருவைச் சேர்ந்த குல்லக் செயலியின் கதையை பார்க்கலாம்.
இந்தியா பொதுவாக சேமிப்பவர்களின் தேசம் என்றாலும் பெரும்பாலான இந்தியர்கள். செல்வ வளத்தை உருவாக்க போதிய வாய்ப்பில்லாத வழிகளிலேயே சேமிக்கின்றனர்.
2021 இறுதியில் ஜஸ்ட்பே நிறுவன அதிகாரிகள் மாந்தன் ஷா மற்றும் திலீப் ஜெயின், வர்த்தக தொடர்பு மூலம் மூன்றாவது இணை நிறுவனர் நரசிம்ம ராவை சந்தித்த போது, இந்தியாவின் அடுத்த பெரிய நிதிநுட்ப நிறுவனத்திற்கான ஐடியாவை நோக்கியிருந்தனர்.
இந்தியாவில், செல்வத்தில் உச்சத்தில் இருக்கும் 2 சதவீதத்தினர் முதலீடு செய்வதற்கும், எஞ்சிய 98 சதவீதத்தினர் முதலீடு செய்வதற்கும் பெரும் வேறுபாடு இருப்பதை கவனித்தனர். சராசரியாக 200 மில்லியன் இந்தியர்கள் பணவீக்கத்தை கூட மிஞ்ச வழியில்லாத சாதனங்களில் முதலீடு செய்கின்றனர். நிதி அறியாமை மற்றும் அதன் விளைவுகள் பற்றிய புரிதல் இல்லாததே இதற்கான காரணம்.
2022 ஜனவரியில், இந்த மூவரும் இணைந்து, தங்கம் சார்ந்த சேமிப்பு செயலி ’குல்லக்’ (
) துவக்கினர். செல்வ வளம் உருவாக்கத்தை ஜனநாயகமயமாக்கும் வகையிலும், ஒவ்வொரு இந்தியருக்கும் செல்வ வளத்திற்கான எளிய, புத்திசாலியான வழியாக இந்த செயலி அமைந்திருந்தது.இந்த ஆப் பயனாளிகள் தொடர்ச்சியாக சிறிய தொகையை சேமித்து, 24 கேரட் தங்கத்தில் தானாக முதலீடு செய்யும் வகையில் செயல்படுகிறது. அடுத்த கட்ட 200 மில்லியன் இந்தியர்களுக்கான நிதி தற்சார்பாக விளங்க இந்த செயலி விரும்புகிறது.
“செல்வ வளம் உருவாக்கம் என்பது அனைவரும் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்காக தொடர்ந்து முயற்சிக்கிறோம். பண பரிவர்த்தனைக்கு யுபிஐ செய்ததை சேமிப்பிற்கு ’குல்லக்’ செய்ய விரும்புகிறது. மக்களின் செல்வ வளம் உருவாக்கத்தில் பங்குதாரராக இருக்க விரும்புகிறோம்,” என்கிறார் இணை நிறுவனர் திலீப்.
அண்மையில் குல்லக், புதிய முதலீட்டாளர்கள் ஒய்.சி மற்றும் ரீபெல் பார்ட்னர்ஸ், ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் பெட்டர் கேபிடல் பங்கேற்ற விதை நிதி சுற்றில் 3 மில்லியன் டாலர் நிதி திரட்டியது. முன்னதாக, விதை நிதிக்கு முந்தைய சுற்றில், விமல் குமார், ஷீத்தல் லால்வானி (ஜஸ்ட்பே இணை நிறுவனர்) உள்ளிட்ட ஏஞ்சல் முதலீட்டாளர்களிடம் இருந்து 1.3 மில்லியன் திரட்டியது.
இந்தியாவின் போட்டி மிக்க தங்க சந்தையில், ஜார், சிப்ளி, பேடிஎம், போன்பே, சேப்கோல்ட் உள்ளிட்ட நிறுவனங்களுடன் போட்டியிடும் குல்லக், ஒய் காம்பினேட்டரின் 2022 கோடைக்கால முகாமில் 18 ஸ்டார்ட் அப்’களில் ஒன்றாக பங்கேற்றது.
தொழில்நுட்பம் மற்றும் பொருள் சேவையில் உள்ள பின்னணி எளிமையான நிதி நுட்ப செயலியாக உருவெடுத்துள்ளதாக இணை நிறுவனர்கள் தெரிவிக்கின்றனர்.
“குல்லக் பாரதத்திற்காக உருவானது. வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் பாரத பயனாளிகளுக்காக உருவாக்கப்பட்டது. இது மிகவும் எளிதானது. பயனாளிகள் 30 நொடிகளில் தங்கள் சேமிப்பு பயணத்தை துவக்கிவிடலாம்,” என்கிறார் திலீப்.
இந்த செயலியின் பொதுமக்கள் வடிவை 2022 ஜூனில் அறிமுகம் செய்த இந்த ஸ்டார்ட் அப், ரூ.14 கோடி மதிப்பிலான தங்கம் செயலி வாயிலாக வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறது.
குல்லக், 12,000 எம்.ஆர்.ஆர் உருவாக்கி, 28 கிலோ தங்கம் விற்பனை செய்திருப்பதாகவும் தெரிவிகிறது. ஏழு மாதங்களில் தினசரி பரிவர்த்தனை 2 லட்சத்தில் இருந்து 22 லட்சமாக அதிகரித்துள்ளது.
நிதி தற்சார்பு
இந்த செயலி இரண்டு முக்கிய சேமிப்பு வாய்ப்புகளைக் கொண்டுள்ளது. தினமும் அல்லது மாதந்தோறும் தொடர் சேமிப்புகளை மேற்கொள்ள வழிசெய்கிறது. யுபிஐ ஆட்டோபே வாயிலாக பயனாளிகள் சேமிப்பை தானியங்கிமயமாக்கலாம். தினசரி பரிவர்த்தனை சில்லறைகளை முழுமையாக்கி, அதையும் தங்கத்தில் சேமிக்க வழி செய்கிறது.
லாக் இன் எதுவும் கிடையாது என்பதால் பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் தங்கம் அல்லது ரொக்கமாக சேமிப்பை விலக்கிக் கொள்ளலாம். மும்பையைச் சேர்ந்த டிஜிட்டல் தங்க மேடையான ஆக்மண்ட் கோல்ட் நிறுவனத்துடன் இணைந்து, இந்த சேவையை வழங்குகிறது Gullak.
ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 1.5 முதல் 2 சதவீதம் வரை வருவாய் பெறுகிறது. அண்மையில் இந்த செயலி, குல்லக் கோல்ட் + எனும் முதலீடு வாய்ப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் தங்கத்தின் மீது அதிக பலன் பெறலாம். தங்கம் அளிக்கும் பலன் தவிர இந்த திட்டம் ஆண்டுக்கு 5 சதவீத தங்கம் அளிக்கிறது. தங்கத்தை நகைக்கடைகளுக்கு வாடகைக்கு அல்லது குத்தகைக்கு அளிப்பதன் மூலம் இதை சாத்தியமாக்குகிறது.
ஆண்டுக்கு தங்கத்தின் விலை 11 சதவீதம் உயர்ந்தால், குல்லக் கோல்ட் + வாடிக்கையாளர்கள் குத்தகை வாயிலாக 5 % கூடுதலாகp பெறலாம். தங்க பத்திரம், தங்க நிதிகள் போன்றவை அளிக்கும் பலனை விட இது அதிகம்.
குறைந்த பட்சம் 0.5 கிராமை குத்தகைக்கு விடலாம். அனைத்து நகைக்கடைகளும் ஆக்மண்ட் மேடையால் பரிசீலிக்கப்படுகின்றன.
"தங்க குத்தகை என்பது சந்தையில் வழக்கமாக இருந்தாலும், இந்தியாவில் 0.01 மக்கள் மட்டுமே இதில் ஈடுபடுகின்றனர். ஒரு கிலோவுக்கு மேல் குறைந்த பட்சம் குத்தகை விட வேண்டும். இதை டிஜிட்டல்மயமாக்கி ஜனநாயகமயமாக்கி இருக்கிறது குல்லக்,” என்கிறார் திலீப்.
தனது அண்மை நிதியை பயனாளிகள் பரப்பை அதிகரிக்க மற்றும் மேலும் தனித்தன்மை வாய்ந்த நிதி சேவைகள் அறிமுகத்திற்கு நிறுவனம் பயன்படுத்த உள்ளது. வலுவான சமூகத்தை உருவாக்கி நிதி விழிப்புணர்வை உண்டாக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: திரிஷா மெஹதி | தமிழில்: சைபர் சிம்மன்
நல்ல பழக்கத்தை ரெகுலரா தொடர விரும்புகிறீர்களா? உங்களை ஊக்குவிக்க வந்தாச்சு Habit Tracker ஆப்!
Edited by Induja Raghunathan