எலான் மஸ்கிற்கு ட்விட்டரை விற்கலாமா: பங்குதாரர் வாக்கெடுப்பு நடத்த ட்விட்டர் திட்டம்!
இயந்திர ஸ்பாம் கணக்கு தொடர்பான பிரச்சனையால், 44 பில்லியன் டாலருக்கு டிவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து, விலகுவேன் என எலான் மஸ்க் எச்சரித்திருக்கிறார்.
டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கும் டெஸ்லா நிறுவனரின் கோரிக்கை குறித்து, ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாக பங்குதாரர்கள் வாக்கெடுப்பு நடைபெற இருப்பதாக, ஊழியர்கள் கூட்டத்தில் பேசும் போது, ட்விட்டரின் முன்னணி வழக்கறிஞ்சரான விஜயா கடே தெரிவித்திருக்கிறார்.
இந்த ஊழியர்கள் கூட்டத்தில், கிரிப்டோ மோசடிகளை பரப்பும் ஸ்பான் கணக்குளை கட்டுப்படுத்துவது தொடர்பான டிவிட்டர் நிறுவனத்தின் வாதமும் பரிசீலிக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை பொது சந்தையில் இருந்து வாங்கியுள்ளதாக ஏப்ரல் மாதத்தில் எலான் மஸ்க் அறிவித்ததை அடுத்து நிறுவனத்தை வாங்குவது தொடர்பான அவரது விருப்பம் வெளியானது. அதன் பிறகு, ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன், செக்கோஷியா நிறுவனம், சீன கிரிப்டோ நிறுவனம் பைனான்ஸ் ஆகியவற்றின் உதவியோடு, டிவிட்டர் நிறுவனத்தை வாங்கும் முயற்சியை அறிவித்தார்.
எனினும், பணம் ஈட்டக்கூடிய தினசரி பயனாளிகளில் 5 சதவீதம் மட்டுமே இயந்திர ஸ்பான் கணக்குகள் எனத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவேன் என எலான் மஸ்க் எச்சரித்தார்.
இந்த எண்ணிக்கை அதிகமானது என்று கூறும் மஸ்க், இது தொடர்பான தரவுகள் மூன்றாம் தரப்பால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் வரை நிறுவனத்தை வாங்குவது சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.
நிறுவனத்தின் தனிப்பட்ட தகவல்கள் இருப்பதால், மூன்றாம் தரப்பு ஆய்வை அனுமதிக்க முடியாது என டிவிட்டர் சி.இ.ஓ பாரக் அக்ரவால் கூறியிருந்தார். இந்த ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே இயந்திர ஸ்பாம் கணக்குகள் தொடர்பான எண்ணிக்கை மஸ்கிடம் இருந்தது என்றும் டிவிட்டர் தெரிவித்தது.
இந்த ஒப்பந்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகினால், மஸ்க் ஒரு பில்லியன் டாலர் ரத்து தொகையை செலுத்த வேண்டும்.
மஸ்க் மற்றும் டிவிட்டர் நிர்வாகம் இடையிலான கருத்து வேறுபாடுகளை மீறி, டிவிட்டர் முன்னாள் சி.இ.ஓ ஜேக் டோர்சி, மஸ்கின் திட்டம் மற்றும் டிவிட்டரின் தற்போதைய சி.இ.ஓ பாரக் அக்ரவாலின் நிர்வாகத்தை ஆதரித்து வருகிறார்.
ஆங்கிலத்தில்: தாருதர் மல்கோத்ரா | தமிழில்: சைபர் சிம்மன்