ஒரே வீட்டில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்; யுபிஎஸ்சி-யில் சாதனை படைத்த முந்திரி விவசாயி மகள்கள்!

எந்த ஒரு தேர்விலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் தங்கையைப் போலவே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூத்த சகோதரி சுஷ்மிதா.

ஒரே வீட்டில் 2 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்; யுபிஎஸ்சி-யில் சாதனை படைத்த முந்திரி விவசாயி மகள்கள்!

Saturday May 27, 2023,

2 min Read

எந்த ஒரு தேர்விலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் தங்கையை போலவே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற மூத்த சகோதரி சுஷ்மிதா.

முந்திரி விவசாயி மகள்கள்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயி ராமநாதன் இவரது மகள் சுஷ்மிதா ராமநாதன் நடந்து முடிந்த 2022ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய தரவரிசை பட்டியலில் 528வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார்.

இதன் மூலம் ஒரே குடும்பத்தில் இருந்து அரசுக்குக் கிடைத்த இரண்டாவது ஐ.ஏ.எஸ். அதிகாரி என்ற பெருமை பெற்றுள்ளார். ஆம், சுஷ்மிதாவின் தங்கை ஐஸ்வர்யாவும் 2019ம் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் தமிழக அளவில் 2வது இடமும், தேசிய அளவில் 47வது இடமும் பிடித்து சாதனை படைத்தவர். தற்போது சென்னை பொன்னேரி சார் ஆட்சியராக உள்ளார்.

Susitha

சுஷ்மிதா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில்,

“கிராமத்தில் பிறந்த நான் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு எழுதவும், அதற்காக எனக்கு ஊக்கமளித்து முழுவதுமாக தயார்படுத்தியும் எனது பெற்றோர்கள் தான். எனக்கு ஆர்வம் அதிகமாக இருந்ததால் போட்டியில் வெற்றி பெற்றுள்ளேன். பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் கல்வி மூலமாகதான் முன்னேற்றம் அடையமுடியும் என எனது அம்மா தான் முழுமையாக கூறிவந்தார்கள். பெண்கள் வளர்ச்சிக்காகவும், ஊரக வளர்ச்சிகாகவும் பாடுபடுவதுதான் எனது முழு நோக்கம். கிராமத்தில் இருந்து வந்துதான் கல்வி மூலமாக தான் இந்தத் தேர்வில் சாதனை பெறமுடிந்தது. கல்வி ஒரு முக்கிய படிகட்டுகள் என்னைப் போலவே கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரும் கல்வி பயில வேண்டும்,” என்கிறார்.

தற்காலத்தில் கூட கிராமப்புற பெண்கள் கல்வி கற்பதில் பல்வேறு சவால்கள் உள்ளதாக கூறும் சுஷ்மிதா, அரசின் இலவசப் பாடப்புத்தகம், மதிய உணவு, உதவித்தொகை போன்ற கல்வி திட்டங்களை பயன்படுத்துக்கொண்டு முன்னேற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Student

சுஷ்மிதா தங்கை ஐஸ்வர்யா

அதுமட்டுமின்றி, வருங்காலத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராக விரும்பும் மாணவ, மாணவிகளுக்கும் அசத்தலான ஆலோசனையை வழங்கியுள்ளார்.

“யுபிஎஸ்சி தேர்வுக்கு அதிக நேரம் படிக்கவேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் குறிகோள்வைத்து ஆர்வத்துடன் படித்தால் வெற்றி நிச்சயம்,” என்கிறார்.

ஏற்கனவே தங்கை சார் ஆட்சியராக பணியாற்றி வரும் நிலையில், தற்போது அக்கா சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.