ஹெலிகாப்டர் பயணச் சேவையை அறிமுகப்படுத்தியது Uber
அமெரிக்க நிறுவனமான ‘உபெர்’ நியூயார்க் நகரில் இந்த ஹெலிகாப்டர் பயணச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாலைவழிப் பயணச்சேவையை வழங்கும் உபெர் தற்போது வான்வழியிலும் தங்களது பயணச்சேவையை தொடங்கியுள்ளது. ஹெலிகாப்டர் மூலம் பயணிகளை உரிய இடத்திற்கு கொண்டு செல்லும் சேவையின் பெயர் ‘உபெர் காப்டர்’ Uber Copter.
இச்சேவை ஜூலை 9ம்தேதி முதல் நியூயார்க் மாநகரில் தொடங்கும் என்றும் ஹெலிகாப்டரில் பயணிகளை மன்ஹாட்டன் கீழ் பகுதியில் இருந்து கென்னடி சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு செல்லும் என உபெர் தெரிவித்துள்ளது.
ஹெலிகாப்டர் மூலம் வெறும் 8 நிமிடங்களில் விமான நிலையத்தை பயணிகள் அடையமுடியும் என்று நியூ யார்க் டைம்ஸ் செய்திகள் கூறுகிறது.
வழக்கம் போல் ஹெலிகாப்டர் பயணச்சேவைக்கும் பயணிகள் ஆப் மூலம் புக் செய்ய முடியும் ஆனால் தற்போது பிளாட்டினம் மற்றும் டைமண்ட் மெம்பர்களுக்கு மட்டும் இச்சேவை அளிக்கமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் ஹெலிகாப்டர் பயணச்சேவைக்கு புக் செய்யவேண்டும். இந்த பயணத்துக்கு ஒரு நபருக்கு 200 முதல் 225 அமெரிக்க டாலர்கள் கட்டணம் ஆகும் என்றும் செய்திகள் குறிப்பிடுகிறது.
தகவல் உதவி: ஏஎன்ஐ