ஒரு முடிவே இல்லையா! அதல பாதாளத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு; சிக்கலில் முதலீட்டாளர்கள்!
கிரிப்டோகரன்சி மதிப்பானது தொடர்ந்து பெரும் சரிவை சந்தித்து வருகிறது.
கிரிப்டோகரன்சி மதிப்பானது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கிரிப்டோ முதலீட்டாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.
பங்குச் சந்தையில் ஏற்றம் இறக்கம் என்பது இயல்பான ஒன்று. ஆனால், தற்போது கிரிப்டோகரன்சியானது பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. கிரிப்டோவில் மிகவும் பிரபலமான பிட்காயின் ஆனது அதீத சரிவை சந்தித்திருக்கிறது.
கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் தங்களது கிரிப்டோ காயின்களை நஷ்டம் வந்தாலும் பரவாயில்லை இப்போதாவது விற்றுவிடலாம் வருகிற தொகை போதும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்திருக்கின்றனர். காரணம் அடுத்தடுத்த நாட்களில் முந்தைய மதிப்பை விட கிரிப்டோ விலை மோசமான சரிவை சந்தித்து வருகிறது.
தொடர்ந்து சரிவை மட்டும் சந்தித்து வரும் கிரிப்டோ மதிப்பு இன்னும் ஒரு நிலையான இடத்தை பிடிக்கவில்லை எனவே இன்னும் மதிப்பு குறையலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்,
24 மணிநேரத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு சர்வதேச அளவில் 9.37 சதவீதம் வரை குறைந்து 1.27 டிரில்லியன் டாலர் அளவுக்கு சரிவினை கண்டிருக்கிறது. கிரப்டோ முதலீட்டாளர்கள் பெரும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். தொடர்ந்து டுவிட்டரில் #cryptocrash என்ற ஹேஷ்டேக் பெருமளவு டிரெண்டாகி வருகிறது.
பிட்காயின் மதிப்பு 2022ல் மட்டும் 43.72 சதவீதம் அளவிற்கு குறைந்து தற்போது 25,402 டாலர்களாக இருக்கிறது. அதேபோல், எத்திரியம், சோலானா உள்ளிட்ட கிரிப்டோக்கள் மதிப்பு பெருமளவு குறைந்திருக்கிறது. மேலும், குறிப்பிட்ட கிரிப்டோ கரன்சியானது அடிமட்ட அளவில் சரிந்திருக்கிறது. அதாவது, லூனா காயின் 100% சரிவினை கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோகரன்சி பலத்த சரிவை சந்தித்து வந்தாலும் குறிப்பிட்ட அளவிலான கிரிப்டோ காயின்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை சந்தித்திருக்கிறது. இதில் ஒன்று டோஜ்காயின்.
சமீபத்தில் எலான் மஸ்க், கிரிப்டோகரன்சி குறிப்பாக டோஜ் காயின் செலுத்தி எங்கள் நிறுவனத்தின் டெஸ்லா கார்களை வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தார். இந்த நிலையில், டோஜ்காயின், போல்கடோட், யுனிஸ்வேப் ஆகிய கிரிப்டோகாயின்கள் மதிப்பு நல்ல வளர்ச்சியை சந்தித்திருக்கிறது.