உள்ளூர் பசு ரகங்களை காக்கப் பாடுபடும் ’வரேன்யம் ஃபார்ம்ஸ்’

பொறியாளராக இருந்து விவசாயியான, வரேன்யம் ஃபார்ம்ஸ் இணை நிறுவனர், பிருந்தா ஷா, தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

12th Jun 2019
  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
வெரேன்யம் பார்ம்ஸ்

சில ஆண்டுகளுக்கு முன்வரை பெங்களூர்வாசியான பிருந்தா ஷாவுக்கு, இப்போது குஜராத்தின் வாபி தான் மையமாக இருக்கிறது. டெக்சாஸ் இன்ஸ்ட்ருமண்ட் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பிரிந்தா, 56 ஏக்கர் பண்ணை வைத்திருந்த, தனது கணவரின் பெற்றோர்களை பார்த்து 2015 ல் விவசாயி ஆனார்.

அதற்கு முன், 2013ல் பணியில் இருந்து கொண்டே, அவர் மற்றும் கணவரின் சகோதரி பிருந்தா ஆகியோர் பிருந்தாவின் மாமானாருடன் இணைந்து, மக்கள் சமூக ஊடகம் வாயிலாக விவசாயிகள் உற்பத்தியை பார்வையிடுகதற்கான இணைய மேடை ஒன்றை உருவாக்கினர். மக்கள் அவர்கள் பண்ணைக்கு நேரடியாக வருகை தந்து, மரங்களில் இருந்து நேரடியாக பழங்களை வாங்கிக் கொள்ளலாம் என்கிறார், குடும்ப வர்த்தகமான ’வரேன்யம் ஃபார்ம்ஸ்’ (Varenyam Farms) இணை நிறுவனரான பிருந்தா ஷா.

“ஆண்டுதோறும் 100 பேருக்கு மேல், தங்கள் நண்பர்கள், குடும்பத்தினருடன் வருகை தந்து, பண்ணையில் இருந்து பழங்களை பெற்றுக் கொள்வார்கள். இப்படித் தான் விவசாயத்தில் என் ஆர்வம் வளர்ந்தது,” என்கிறார் பிருந்தா.

பால் ஆய்வு

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, பிருந்தாவின் மாமானார், கிர் எனும் உள்ளூர் பசுமாடு ரகத்தால் கவரப்பட்டார். இந்த பசுக்களின் வரலாறு பற்றி அறிந்தவர், அவற்றை காப்பதற்கான முயற்சியை மேற்கொண்டார். அவர்கள், இரண்டு காளைகள், எட்டு பசுக்களை வாங்கி, அவற்றை இனப்பெருக்கம் செய்ய வைப்பதில் ஈடுபட்டனர். அப்போது தான் இந்தியர்கள் பருகும் பால் பற்றி ஆய்வு செய்யத்துவங்கினர்.

“உற்பத்தித் தேவையை பூர்த்தி செய்வதற்காக, இந்தியர்கள் ஐரோப்பிய பசுக்கள் மற்றும் கலப்பின பசுக்களை பயன்படுத்துகின்றனர். இவற்றில் பால் உற்பத்தி அதிகம் இருந்தாலும், நாம் தரத்தை தியாகம் செய்து விட்டோம். ஐரோப்பிய பசுக்கள் அளிக்கும் பால் ஏ 1 பால் எனப்படுகிறது. உள்ளூர் பசுக்கள் உற்பத்தி செய்யும் ஏ 2 பாலைவிட இவை தரத்தில் மேம்பட்டவை அல்ல. மேலும் உள்ளூர் பசுவின் பால், வயிற்றுக்கும் நல்லது,” என விளக்குகிறார் பிருந்தா.
பசுக்களுடன்

கடந்த ஐந்து ஆண்டுகளில் வரேன்யம் ஃபார்ம்ஸ், 130 பசுக்கள் கொண்ட பண்ணையை அமைத்துள்ளது. இங்கு உற்பத்தி ஆகும் பால் எச்.எம்.எஸ் எனும் பிராண்ட் பெயரில் விற்பனை ஆகிறது. ஒவ்வொரு 100 கிராமுக்கும் இது 4 கிராம் உயர் தர கொழுப்பை கொண்டுள்ளது.  

“எங்களுடையது குடும்ப வர்த்தகம். பழங்கள் உற்பத்தி செய்ய மற்றும் பசுக்களுக்கு உணவு அளிக்கும் ஆர்கானிக் பொருட்களை உற்பத்தி செய்யும் பண்ணையை உருவாக நிறைய செலவு செய்துள்ளோம். பால், உள்ளூர் கூட்டுறவு மையங்களுக்கு விற்கப்படுகிறது,“ என்கிறார் அவர்.

திரட்டப்பட்ட நிதி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்பாத நிலையில், 2019 மார்ச்சில் முதல் ஆண்டு செயல்பாடுகளை பூர்த்தி செய்திருப்பதாகவும், ரூ.50 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.

எச்.எ.ம்.எஸ் பால் லிட்டருக்கு ரூ.80 ஆகிறது. வரேன்யம் ஃபார்ம்ஸ் இதை தேசிய அளவிலான பிராண்டாக உருவாக்க விரும்புகிறது. வர்த்தக நோக்கில் உற்பத்தி செய்ய தினமும் 10,000 லிட்டர் உற்பத்தி செய்ய வேண்டியிருக்கிறது. நிறுவனம் விரிவாக்கம், மற்றும் 2022 வாக்கில் அகில இந்திய அளவிலான இருப்பிற்கு திட்டமிட்டுள்ளது.

“பாலின் விலை அதிகம் தான். ஆனால், ஆரோக்கியமான வாழ்க்கை பற்றி அக்கரை கொண்டுள்ளவர்களுக்கு விற்பனை செய்கிறோம். எங்கள் பிராண்ட் நெய்யை இந்தியா முழுவதும் விற்பனை செய்கிறோம்,” என்கிறார் பிருந்தா.

இந்திய பசு ரகங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் தங்கள் பண்ணையில் பயன்படுத்தப்படும் ஆரோக்கியமான பொருட்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சந்தை வாய்ப்பு, போட்டி

இந்தியா ஆண்டுக்கு 160 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்கிறது. இந்த சந்தை மதிப்பு 30 பில்லியன் டாலராகும். கடந்த 2 ஆண்டுகளில், ஆர்கானிக் பால் வர்த்தகம் தழைக்கத்துவங்கியுள்ளது. ஹேப்பி மில்க் மற்றும் டூத்வாலா போன்ற ஸ்டார்ட் அப்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒரு காலத்தில் உள்ளூரில் கிடைத்துக் கொண்டிருந்தது இன்று விலை மிக்கதாக ஆகியிருக்கிறது. வரேன்யம் ஃபார்ம்ஸ், தனது பால் அனைத்து இந்தியர்களுக்கும் கிடைக்க விரும்புகிறது. குஜராத்தின் ஆனந்தில் வெண்மை புரட்சி உண்டானது போல, வாபியில் புதியதொரு வென்மை புரட்சி உண்டாகலாம்.

ஆங்கில கட்டுரையாளர்: விஷால் கிருஷ்ணா | தமிழில்: சைபர்சிம்மன்

  • +0
Share on
close
  • +0
Share on
close
Share on
close
Report an issue
Authors

Related Tags

Latest

Updates from around the world

Our Partner Events

Hustle across India