ரெடிமேட் பரோட்டா, சப்பாத்தி வகைகளை அறிமுகப்படுத்தியது Freshey's
விவசாய மற்றும் உணவு சேவை நிறுவனமான வேகூலின் (WayCool) அங்கமான பிராண்ட்ஸ்நெக்ஸ்ட் உடனடியாக சமைத்து சாப்பிடக்கூடிய உணவு பிரிவில் நுழையவதாக அறிவித்துள்ளது.
விவசாய மற்றும் உணவு சேவை நிறுவனமான 'வேகூல்’இன் (
) அங்கமான ’பிராண்ட்ஸ்நெக்ஸ்ட்’ உடனடியாக சமைத்து சாப்பிடக்கூடிய உணவுப் பிரிவில் நுழையவதாக அறிவித்துள்ளது.Freshey’s பிராண்ட் கீழ், மலபார் பரோட்டா மற்றும் மலபார் சப்பாத்தி ஆகியவற்றை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இட்லி மாவு, பால் பொருட்கள், பிரெட் ஆகியவற்றில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பிராண்ட்ஸ் நெக்ஸ்ட், இந்த புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்துள்ளது. தரம் மற்றும் சுவையுடன், வசதியையும் இணைந்து அளிக்கும் தன்மையோடு இந்த பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவன செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
“நுகர்வோர் வசதி மற்றும் தினசரி வேலைகளில் இருந்து நிவாரணத்தை எதிர்பார்க்கும் நிலையில் உடனடி உணவுப் பிரிவு 16 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த போக்கு சமூகத்தின் உணவு சார்ந்த எதிர்பார்ப்பில் முக்கிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. பரோட்டா மற்றும் சப்பாத்தி அறிமுகத்தின் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்கிறோம்,” என பிராண்ட்ஸ் நெக்ஸ்ட் சி.இ.ஓ பிபி.ரவீந்திரன் கூறியுள்ளார்.
ரெஸ்டாரண்ட் போன்ற உற்சாகத்துடன், வீட்டில் புத்துணர்ச்சியான உணவு எனும் உத்தியின் கீழ் நிறுவனம் இந்த அறிமுகங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சப்பாத்தி மென்மையான தன்மையோடு அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோயாவின் நற்குணத்துடன், தரமான ஆட்டாவில் தயார் செய்யப்பட்ட பரோட்டா மற்றும் சப்பாத்தி, நார்ச்சத்துடன், புரத சத்தும் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களில் 400 மற்றும் 500 கிராம் பேக்குகளில் இவை கிடைக்கின்றன.
பிராண்ட்ஸ் நெக்ஸ்ட் நுகர்வோர் பிரிவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது. மதுரம், கிட்சன்ஜி, மற்றும் பிரெஷே பிராண்ட்களை கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan