மொரோக்காவைச் சேர்ந்த Yolafresh உடன் கூட்டு சேரும் சென்னை வேகூல் சென்சாநெக்ஸ்ட்!
உணவு மற்றும் விவசாய-தொழில்நுட்ப தளமான WayCool Foods தொழில்நுட்ப துணை நிறுவனமான வேகூல் சென்சாநெக்ஸ்ட்டின் செயல்பாட்டை அதிகரிக்க மொராக்கோவை தளமாகக் கொண்ட வேளாண் வணிக சந்தை நிறுவனமான YoLa Fresh உடன் கூட்டு சேர்ந்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த உணவு மற்றும் விவசாய-தொழில்நுட்ப நிறுவனமான '
Foods'-இன் துணை நிறுவனமான CensaNext-இன் செயல்பாட்டை அதிகரிக்க மொராக்கோவை தளமாகக் கொண்ட வேளாண் வணிக சந்தை நிறுவனமான உடன் கூட்டு சேர்ந்துள்ளது.மொரோக்காவைச் சேர்ந்த வேளாண் வணிக சந்தை நிறுவனமான யோலா ஃப்ரெஷ், ஆப்பிரிக்காவில் புதிய தயாரிப்புகளின் விநியோக சங்கிலியை பெரிதாக்குவது, விவசாயிகள் மற்றும் அதனைச் சார்ந்தவர்களுக்கு நிலையான வாழ்வாதாரம் அளிப்பது ஆகியவை நோக்கமாகும். இந்நிறுவனம்; விவசாயிகள், செயலிகள், பிராண்டுகள், விநியோகஸ்தர்கள் அல்லது அவர்களின் சில்லறை விற்பனையாளர்கள் எளிதாக முடிவெடுப்பதன் மூலம் தங்கள் வணிகத்தை திறமையாக நிர்வகிக்க உதவுகிறது.

இந்தியாவின் முன்னணி உணவு மற்றும் வேளாண் தொழில்நுட்ப நிறுவனமான WayCool Foods 2 லட்சத்திற்கும் அதிமான விவசாயிகள், ஒரு லட்சத்து 65 ஆயிரம் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் தனது தொழில்நுட்ப துணை நிறுவனமான ’வேகூல் சென்சாநெக்ஸ்ட்’ மூலமாக வேளாண் துறை சந்தித்து வரும் திட்டமிடல், வளர்ச்சி, சரக்குகளை நிர்வகித்தல், விற்பனைப் படை ஆட்டோமேஷன், விநியோகம் மற்றும் கடன் மேலாண்மை ஆகிய பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.
தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் மொராக்கோ சந்தையின் விநியோக சங்கிலியை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்துள்ளது. மொரோக்காவில் வளர்ந்து வரும் YoLa Fresh நிறுவனம், 2030 ஆம் ஆண்டளவில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யோலா ஃப்ரெஷ் இணை நிறுவனர் மற்றும் இணை தலைமை நிர்வாக அதிகாரி Larbi Alaoui Belghiti கூறுகையில்,
“சென்சாநெக்ஸ்டுடன் கூட்டு சேர்ந்து அவர்களின் புதுமையான தொழில்நுட்பத்தை ஆப்பிரிக்க சந்தையில் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டாண்மை எங்கள் விநியோகச் சங்கிலியை மேலும் மேம்படுத்தவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் திறமையான மற்றும் நிலையான வழியில் புதிய தயாரிப்புகளை வழங்கவும் உதவும்,” என்றார்.

யோலா ஃப்ரெஷ் மற்றும் சென்சாநெக்ஸ்ட் ஆகிய இரண்டிற்கும் இந்த கூட்டாண்மை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக உள்ளது, விவசாய வணிக நிலப்பரப்பை மாற்றுவதற்கான பகிரப்பட்ட பார்வையுடன் இரு நிறுவனங்களையும் ஒன்றிணைக்கிறது.
யோலா ஃப்ரெஷ் உடனான கூட்டாண்மை குறித்து, WayCool Foods இன் இணை நிறுவனர் சஞ்சய் தாசாரி கூறுகையில்,
"யோலா ஃப்ரெஷ் உடனான எங்கள் மூலோபாய கூட்டணியை ஆப்பிரிக்க உணவு சுற்றுச்சூழல் அமைப்பை மறுவடிவமைப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாக நாங்கள் கருதுகிறோம். உணவு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவிற்கு எங்களின் பங்களிப்பை தொடர்ந்து வழங்கவுள்ளோம்,” என்றார்.
WayCool இன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், YoLa Fresh ஆனது அதன் விநியோகச் சங்கிலித் திறனை மேலும் மேம்படுத்தவுள்ளது. அதேபோல், விவசாயிகள், நுகர்வோர் மற்றும் ஒட்டுமொத்த வேளாண் வணிகச் சூழல் அமைப்புக்கும் பயனளிக்கும் வகையில் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, கழிவுகளைக் குறைக்கவும் உதவவுள்ளது.