Flipkart-ல் பெண்கள்: ‘பிக் பில்லியன் டேஸ்’க்கு தயாராகும் சுமதி, மொஹிமா, அஸ்வினி!
ஃபிளிப்கார்ட் நிறுவனம் தனது வருடாந்திர பிக்பில்லியன் டேஸ் விற்பனைக்கு தயாராகும் நிலையில், ஒவ்வொரு பேக்கேஜும் சரியாக கையாளப்பட்டு, உரிய இடத்தில் டெலிவரி செய்யப்படுவதை உறுதி செய்யும் விநியோ சங்கிலி நிர்வாகத்தில் முக்கிய பணிகளில் பல பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
விநியோகச் சங்கிலியில் பெண்களை முக்கியப் பொறுப்புகளில் ஈடுபடுத்தும் திட்டத்தை 2017ல் ஃபிளிப்கார்ட் விவிதா எனும் பெயரில் மேற்கொண்டது. மூன்று ஆண்டுகளுக்குள் விநியோகச் சங்கிலியின் பல்வேறு பொறுப்புகளில் பெண்கள் பங்கேற்று சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
இப்போது ஃபிளிப்கார்ட்டில் பெண்கள் மட்டுமே பணியாற்றும் ஷிப்ட்கள் உள்ளன. இவை பிங்க் ஷிப்ட் என அழைக்கப்படுகின்றன. பல்வேறு நகரங்களில் அமைந்துள்ள பொருட்களை பிரித்தள்ளிக்கும் மதர் ஹப் பிரிவில் இவை அமைந்துள்ளன. நுகர்வோர் இல்லங்களுக்கு பெரிய பர்னீச்சர்களை விநியோகம் செய்ய பெண் டெலிவரி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த திட்டங்கள், தற்போதைய சூழலில் பெண்கள் கொரோனா பாதிப்பை எதிர்கொண்டு, வருமானம் ஈட்ட ஃபிளிப்கார்ட் முயற்சிகள் உதவுகிறது. இதில் பணியாற்றும் பல பெண்களுக்கு, இந்த பண்டிகைக் கால விற்பனை, சம்பளம் வாங்கும் ஊழியர்களாக முதல் அனுபவமாக அமைகிறது.
“நாடு முழுவதும் உள்ள நுகர்வோர் தங்கள் பண்டிகைக் கால ஷாப்பிங்கிற்காக இ-காமர்சை சார்ந்திருக்கும் நிலையில், அவர்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள், ஆயிரக்கணக்கான ஊழியர்களால் வகைப்படுத்தப்பட்டு, டெலிவரி செய்யப்படும். இந்த விநியோகச் சங்கிலியில் பல்வேறு பணிகளில் பெண்களும் ஈடுபட்டுள்ளனர்,” என்கிறார் ஃபிளிப்கார்ட் பணியாளர்காள் முதன்மை அதிகாரி கிருஷண ராகவன்.
“சம வாய்ப்பு வழங்கும் நிறுவனம் என்ற முறையில், ஃபிளிக்ப்கார்ட் தனது சப்ளை செயினை அனைவரையும் உள்ளடக்கியதாக ஆக்கியிருகிறது. பண்டிகைக் கால உற்சாகத்தை சாத்தியமாக்க வழி செய்யும் ஊழியர்கள் பட்டாளத்தில் இந்த பெண்களும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.”
பிக்பில்லியன் டேஸ் விற்பனை துவங்க சில நாட்களே உள்ள நிலையில், ஹெர்ஸ்டோரி, நிறுவனத்தின் விநியோகச் சங்கிலியில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் பெண்களிடம் பேசியது.
சுமதி நாகேந்திரன், ஹப் இன்சார்ஜ், சென்னை மதர்ஹப்
பொறியியல் பட்டம் பெற்ற பிறகு, சுமதி நாகேந்திரன் விஐபி பேக்ஸ் நிறுவனத்தில் நேரடியாக பணிக்கு சேர்ந்தார். இங்கு தான் விநியோகச் சங்கியிலில் முதல் அனுபவம் பெற்றார்.
“டிஸ்கவரி சேனலில் லாஜிஸ்டிக்ஸ் தொடர்பாக பல நிகழ்ச்சிகளை பார்த்து வளந்தேன். எனவே இந்தத் துறையில் பணியாற்ற விரும்பினேன்,” என்கிறார் சுமதி. மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தவர், ஃபிளிப்கார்ட்டில் அதன் மதர்ஹப்பில் ஒராண்டுக்கு முன் இணைந்தார்.
அதிகாலை 6 மணி முதல் மாலை 3 மணி ஷிப்டில், அவர் 110 ஊழியர்கள் குழுவை வழிநடத்துகிறார். தினசரி செயல்பாடுகளை நிர்வகிக்கிறார்.
பிக்பில்லியன் டேஸ் விற்பனைக்கு முன் இந்த மையம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
“பணிச்சுமையை நிர்வகிப்பது, அதிக டெலிவரிகளை கையாள்வது, வாடிக்கையாளர் தேவையை நிறைவேற்றுவது பற்றி முன்னதாக திட்டமிட்டுள்ளோம்,” என்கிறார் சுமதி.
கொரோனா தொற்று காலம் சவாலானதாக இருக்கிறது. தனிப்பட்ட போக்குவரத்து, ஸ்கிரீனிங், சானிடைசேஷன் போன்ற அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார்.
“கள செயல்பாட்டை கவனிப்பது ஊழியர்கள் நிர்வாகத்தில் நல்ல பாடமாகும். எதிர்காலத்தில் மேலாளராக விருப்பம்,” என்கிறார்.
மொஹிமா கட்டுன், ஹவ்ரா, மேற்கு வங்கம்
மொஹிமா கட்டுன் (24) ஹவ்ராவில் உள்ள ஃபிளிப்கார்ட் ஹப்பில் எல்லாவற்றுக்குமானவராக இருக்கிறார். இந்த குழுவில் உள்ள ஒரே பெண் என்பதோடு, பர்னீச்சர் டெலிவரி போன்றவற்றை கையாள்கிறார். ஈஸ்ட் பெங்காலுக்காக கால்பந்தும் விளையாடுகிறார்.
“பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டு வரை தான் படிக்க முடிந்தது. என் தந்தை இறந்ததால், குடும்பப் பொறுப்பை கவனிக்க வேண்டியிருந்தது,” என்கிறார்.
ஃபிளிப்கார்ட்டில் மூன்று மாதம் முன் இணைந்தவர், டெலிவரி பணியை கேட்டு பெற்றார். தினமும் 16 முதல் 17 டெலிவரிகளை மேற்கொள்கிறார்.
“பல நேரங்களில் கணமாக பொருட்களை எப்படி தூக்குகிறேன் என கேட்கின்றனர். இது என் வேலையின் ஒரு பகுதி என பதில் அளிப்பேன்,” என்கிறார் சிரித்துக்கொண்டே.
கொரோனா சூழல் பற்றி பேசுபவர், வேலையில் எப்படி அஞ்ச முடியும். பாதுகாப்பாக பணியை தொடர வேண்டும் என்கிறார். 13 வயது முதல் கால்பந்து வீராங்கனையாக இருப்பவர் எதிர்காலத்தில் பயிற்சியாளராக இருக்க விரும்புகிறார்.
அஸ்வினி, டி.என், சீனியர் அசிஸ்டெண்ட், மேலூர், கர்நாடாகா
கர்நாடகாவில் மேலூரில் உள்ள புல்பில்மெண்ட் மையத்தில் பணியாற்றும அஸ்வினி, காலையில், பாதுகாப்பு சோதனைகளோடு துவக்குகிறார்.
“காலையில் ஊழியர்கள் ஒன்றாகக் கூடி, அன்றைய தினப் பணிகளை விவாதிக்கிறோம். நான் பொருட்களுக்கு பொறுப்பு வகிக்கிறேன். பேக் செய்யப்பட வேண்டிய பொருட்கள் பற்றி தகவல் பெற்று செயல்படுகிறேன்,” என்கிறார்.
வீட்டில் அம்மாவுக்கு வேலையில் உதவியாக இருக்கிறார். தேர்வுக்கும் படிக்கிறார். குடும்பத்தில் இளையவரான அஸ்வினி, இந்த வாய்ப்பை பயன்படுத்தி காவல்துறையில் சேர விரும்புகிறார்.
“பிக்பில்லியன் டேஸ் அனைவருக்குமான கற்றல் வாய்ப்பு. அதிக எதிர்பார்ப்புச் சூழலில் பணியாற்ற கற்றுத்தருகிறது என்பவர், இந்த அனுபவம் இன்ஸ்பெக்டர் பணியில் உதவும் என்கிறார்.
“சப் இன்ஸ்பெக்டராக வேண்டும் என்பது என் விருப்பம். ஏற்கனவே தேர்வு செயல்முறையில் ஈடுபட்டிருக்கிறேன். எழுத்துத் தேர்வை எதிர்நோக்கியுள்ளேன். ஃபிளிப்கார்ட் சம்பளத்தில் சேமித்து புத்தகங்கள் வாங்குகிறேன். என் கனவை நிறைவேற்றி பெற்றோரை பெருமைப் படுத்த வேண்டும்,” என்கிறார் அஸ்வினி.
ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்-சைபர்சிம்மன்