வயதுக்கும் மீறிய திறமை - மைக்ரோசாஃப்ட் தேர்வை 7 வயதில் வென்ற சிறுவன்!
7 வயது சிறுவன் Microsoft Technology Associate Examination தேர்வில் வெற்றி!
7 வயது சிறுவன் ஒருவன் மைக்ரோசாஃப்ட் டெக்னாலஜி அசோசியட் தேர்வில் (Microsoft Technology Associate Examination) தேர்வில் வெற்றிப் பெற்று சாதனைப் படைத்துள்ளான். தொழில்நுட்பத் துறையில் ஈடுபட விரும்புவோருக்கு இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் ஆகும்.
நினைத்துப்பார்க்காத சாதனைகளைப் படைப்பவர்கள் பலரும், அறியப்படாத இடங்களிலிருந்து வருபவர்கள்தான். சமயங்களில் நம்மை ஆச்சியரிப்படுத்தி பிரம்மிக்க வைக்கின்றனர். மற்ற குழந்தைகளிலிடமிருந்து தனித்துவமாக தெரிய காரணம் அவர்களின் அறிவு முதிர்ச்சி தான். அப்படித்தான் இந்த சிறுவனும் தனித்துவமாக தெரிய ஆரம்பித்துள்ளான்.
பெரியவர்களே தேர்ச்சி பெற முடியாமல் தவிக்கும் தேர்தில், சிறு வயதிலேயே இந்த தேர்வை எதிர்கொண்டு அதில் தேர்ச்சி பெற்று, தனது அறிவுப்புலமையை நிரூபித்துள்ளான் சிறுவன் பட்நாயக்.
ஓடிசாவில் உள்ள பலாங்கிர் பகுதியைச் சேர்ந்த 7வயது சிறுவன் வெங்கட் ராமன் பட்நாயக். 3ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் ஜாவா (Java), ஜாவா ஸ்கிரிப்ட் (Javascript) , பைதான் (Python), ஹெச்டிஎம்எல் (HTML) , சிஎஸ்எஸ் (CSS), டேட்டா பேஸ், உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்ட மைக்ரோசாஃப்ட் டெக்னாலஜி அசோசியட் தேர்வில் (Microsoft Technology Associate Examination) தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளான்.
”மார்ச் 19 - ல் வெங்கட் வைட்ஹாட் ஜூனியரில் வகுப்புகளில் சேர்ந்தார். சுமார் 160 வகுப்புகளில் கலந்து கொண்டார். அவர் தொடக்க நாள் முதல் கோடிங்-கில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். அவரது சாதனை உண்மையில் அரிதானது,” என்று வெங்கட்டின் ஆசிரியரான ஜதிந்தர் கவுர் கூறினார்.
சிறுவனின் இந்த அபார திறன் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவன் ஒரு மேதை என்று புகழந்துள்ளனர். இன்னும் சில ஆண்டுகளில் உலக அளவில் தனக்கென ஒரு தனி முத்திரையை இச்சிறுவன் பதிப்பான் என்றும், டெக்னாலஜி துறையில் மிகப்பெரிய ஒருவனாக அவரால் வர இருக்கிறான் என வெங்கட்டுக்கு நெருக்கமான பலரும் தெரிவித்துள்ளனர்.
தகால் உதவி - indiatimes | தொகுப்பு: மலையரசு