Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
Youtstory

Brands

Resources

Stories

General

In-Depth

Announcement

Reports

News

Funding

Startup Sectors

Women in tech

Sportstech

Agritech

E-Commerce

Education

Lifestyle

Entertainment

Art & Culture

Travel & Leisure

Curtain Raiser

Wine and Food

YSTV

ADVERTISEMENT
Advertise with us

'டயானா விருது’ வென்ற மனிதநேய செயல்களில் ஈடுப்பட்ட 5 இளம் இந்தியர்கள்!

மனிதநேய செயல்பாடுகளில் ஈடுபட்டு `டயானா விருது’ வென்ற இளம் இந்தியர்களைப் பட்டியலிட்டுள்ளது சோஷியல்ஸ்டோரி.

'டயானா விருது’ வென்ற மனிதநேய செயல்களில் ஈடுப்பட்ட 5 இளம் இந்தியர்கள்!

Wednesday July 07, 2021 , 3 min Read

இன்றைய தொழில்நுட்ப உலகில் அடுத்தவர்களை சார்ந்திருக்கவேண்டிய சூழல் குறைந்துள்ளது. இதனால் உலகம் சுருங்கி நம் கைக்குள் அடக்கமாகிவிட்டது. இது ஒருபுறம் இருந்தாலும் இன்றைய இளைஞர்களின் மனது விசாலமாக உள்ளது. மக்கள் நலனில் அக்கறை காட்டும் இளம் சமூகத்தினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.


இப்படிப்பட்ட இளைஞர்கள் சமூகப் பொறுப்புணர்ந்து மக்கள் நலனில் பங்களிப்பதுடன் மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கிறார்கள். பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்த போராளி மலாலா இளம் வயதான 17 வயதில் நோபல் பரிசு பெற்றவர். இவரைப் போலவே எத்தனையோ இளைஞர்கள் நலிந்த மக்களின் நிலையை மேம்படுத்துவதில் பங்களித்து வருகிறார்கள்.


இளவரசி டயானா ஸ்பென்சர் தனது வாழ்நாளில் எய்ட்ஸ் நோய் பாதித்த குழந்தைகள், ஏழை மக்கள் என பல தரப்பினருக்கு மனிதநேயத்துடன் எத்தனையோ உதவிகள் செய்துள்ளார். விலங்குகள் பாதுகாப்பு தொடர்பாகவும் செயல்பட்டுள்ளார்.

1

சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் இளம் சமூகத்தினரிடையே நேர்மறை எண்ணங்களை ஊக்குவிக்கும் இளைஞர்களுக்கு 'டயானா விருது’ வழங்கப்படுகிறது.


இந்த ஆண்டு 'டயானா விருது’ வென்ற இளம் இந்தியர்கள் சிலரை சோஷியல்ஸ்டோரி தொகுத்துள்ளது:

ஆகர்ஷ் ஷ்ராஃப் (Akarsh Shroff)

21 வயது ஆகர்ஷ் ஷ்ராஃப் பிட்ஸ் பிலானி மாணவர். இவர் 2018-ம் ஆண்டு பெங்களூருவில் நிறுவப்பட்ட S.P.A.R.K நிறுவனத்தின் இணை நிறுவனர்.

1
  • ஆதரவற்றக் குழந்தைகளுக்கான வழிகாட்டல் முயற்சி – Project Vineeta
  • நூலகங்கள் அமைத்து வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சி – Library Enrichment And Development or LEAD)
  • மொழித் திறனை ஊக்குவிக்கும் முயற்சி – Project Utsaaha
  • பேச்சாற்றல், விவாதிக்கும் திறன், உச்சரிப்பு போன்ற திறன்களைப் பட்டைத்தீட்டும் கருத்தரங்கு – Project Ullaasa


இப்படி நான்கு வெவ்வேறு முயற்சிகளின்கீழ் குழந்தைகளுக்கு வழிகாட்டுகிறார். 500-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களை ஒன்று திரட்டி 11 மையங்களில் 16,000 மணி நேர பயிற்சியை ஒருங்கிணைத்துள்ளார். இந்த முயற்சியினால் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலனடைந்துள்ளார்கள்.


கொரோனா பெருந்தொற்று சமயத்தில் நிவாரணப் பணிகளுக்காக 40 லட்சம் ரூபாய் வரை ஆகர்ஷ் நிதி திரட்டியுள்ளார்.

“சமூகப் பொறுப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்தியுள்ளோம். இதற்கு முன்பு வரை சமூக நலப் பணிகளில் ஈடுபட்ட அனுபவமே இல்லாத 500-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு உந்துதலாக இருந்தது மகிழ்ச்சியளிக்கிறது,” என்று ஆகர்ஷ் குறிப்பிட்டுள்ளார்.

சைதன்யா பிரபு (Chaitanya Prabhu)

மும்பையைச் சேர்ந்தவர் சைதன்யா பிரபு. இவர் Mark My Presence என்கிற லாபநோக்கமற்ற, அரசியல் சார்பில்லாத நிறுவனத்தின் நிறுவனர்.

2
”இளம் வாக்காளர்கள் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற ஊக்கமளிக்கிறேன்,” என்கிறார் சைதன்யா.

வாக்களிக்கும் உரிமையுள்ள அனைத்து குடிமக்களும் வாக்களிக்க உதவுவதற்காக 18 மேற்பட்டவர்களை இந்நிறுவனம் பதிவு செய்துகொள்கிறது.


மும்பை பல்கலைக்கழகம், சிம்பயாசிஸ் பல்கலைக்கழகம், NMIMS பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், அசோகா பல்கலைக்கழகம் போன்றவற்றுடன் இணைந்துள்ள கல்லூரிகளிலும் இதர தனியார் கல்லூரிகளிலும் இந்நிறுவனம் கருத்தரங்கு ஏற்பாடு செய்கிறது.

சைதன்யா 2018-ம் ஆண்டு முதல் வாக்காளர்களின் தகவல்களைப் பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இவரது விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் 16,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைச் சென்றடைந்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் 10,000–க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பதிவு செய்ய உதவியுள்ளார்.

செஹர் தனேஜா (Seher Taneja)

செஹர் தனேஜா புதுடெல்லியில் வசிக்கிறார். பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறார். இவர் Tale of Humankind என்கிற முயற்சியை முன்னெடுத்து நடத்தி வருகிறார்.

3
சிறப்பான வருங்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்கள் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். இந்த நம்பிக்கையை அடிநாதமாகக் கொண்டு உலகில் மாற்றத்தை ஏற்படுத்த இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் முயற்சியை செஹர் தொடங்கியுள்ளார்.

மன நலம், மாதவிடாய், பாலின சமத்துவம், மனித உரிமை, இளைஞர்களின் சக்தி, குழந்தைகள் உரிமை, பருவநிலை செயல்பாடுகள், ஐ.நா நிலையான வளர்ச்சி இலக்குகள் போன்றவை தொடர்பாக பிரச்சாரம் செய்துள்ளார்.

”என் பெற்றோர் கோவிட் ஐசியூ-வில் வேலை செய்கிறார்கள். அவர்கள் எந்தவித பிரச்சனையும் ஏற்படாமல் நலமாக இருக்கவேண்டும் என்று எப்போதும் கவலையில் ஆழ்ந்திருப்பேன். இப்படிப்பட்ட சூழலில்தான் சமூகத்தின் மாற்றத்தைக் கொண்டு சேர்ப்பதில் பங்களிக்க விரும்பி Tale of Humankind என்கிற முயற்சியைத் தொடங்கினேன்,” என்கிறார் செஹர்.

சியா கோடிகா (Sia Godika)

பெங்களூருவைச் சேர்ந்தவர் சியா கோடிகா. இவர் தனது பகுதிக்கு அருகில் வசிக்கும் ஏழை மக்கள் காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பதை கவனித்தார்.

4

நலிந்த மக்களின் நிலையைக் கண்டு 2019ம் ஆண்டு Sole Foundation தொடங்கினார். இந்த முயற்சியின் மூலம் மக்களிடமிருந்து காலணிகள் சேகரிக்கப்படுகிறது. இவை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. பின்னர், சரிசெய்யவேண்டிய காலணிகள் செருப்பு தைப்பவரிடம் அனுப்பி வைக்கப்பட்டு புதுப்பிக்கப்படுகிறது.

”கடந்த 18 மாதங்களில் 4,000 வீடுகளில் இருந்து 15,000-க்கும் மேற்பட்ட காலணிகளை சேகரித்திருக்கிறோம். 50 தன்னார்வலர்களும் எட்டு நிறுவனங்களும் இந்த முயற்சிக்கு ஆதரவளித்து இதை சாத்தியப்படுத்தியுள்ளது,” என்கிறார் சியா.

அதிதி கெரா (Aditi Gera)

20 வயதாகும் அதிதி கெரா மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்தவர். இவர் 2019-ம் ஆண்டு Empowerette தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் கிராமப்புறங்களில் உள்ள இளம் பெண்களுக்கு வாய்ப்பளிக்கிறது. இந்நிறுவனத்தில் 19-22 வயதுடைய இளம் பெண்கள் ஏழு பேர் குழுவாக செயல்படுகிறார்கள்.

5
“பாலின சமத்துவமின்மையைத் தகர்த்தெறிந்து கிராமப்புற பெண்கள் தலைமைத்துவ பண்புகளுடன் வளர்ச்சியடைய ஆதரவளிக்கிறோம்,” என்கிறார் அதிதி.

தலைமைப்பண்பு, முடிவெடுக்கும் திறன், தன்னம்பிக்கை போன்றவற்றை வளர்த்தெடுக்க உதவும் வகையில் Empowerette 12-18 மாதங்கள் பயிற்சி வழங்குகிறது.


கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இளம் சமூகத்தினர் கடும் அழுத்தத்தை சந்தித்த நிலையில் மனநலம் சார்ந்த விழிப்புணர்வுத் திட்டத்தையும் இந்நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. டிஜிட்டல் தளங்களில் 2,000-க்கும் மேற்பட்டோரைச் சென்றடைந்துள்ளது.


ஆங்கில கட்டுரையாளர்: அஞ்சு அன் மேத்யூ | தமிழில்: ஸ்ரீவித்யா