Brands
Discover
Events
Newsletter
More

Follow Us

twitterfacebookinstagramyoutube
ADVERTISEMENT
Advertise with us

சென்னை விண்வெளி ஸ்டார்ட் அப் Agnikul நிறுவனத்தில் பொறியியல் குழுக்களை வழிநடத்தும் இளம் பெண்கள்!

விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான அக்னிகுல் காஸ்மோசில் உமா மகேஸ்வரி, சரன்யா மற்றும் ஆருஷி சவுத்ரி ஆகிய பெண்கள் பொறியியல் மற்றும் வடிவமைப்பு குழுவை வழிநடத்துகின்றனர்.

சென்னை விண்வெளி ஸ்டார்ட் அப் Agnikul நிறுவனத்தில் பொறியியல் குழுக்களை வழிநடத்தும் இளம் பெண்கள்!

Friday July 02, 2021 , 4 min Read

இந்திய விண்வெளி ஸ்டார்ட் அப் துறையில் இந்த ஆண்டு ஏற்கனவே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இத்துறையில் தனியார் துறையை அரசு அனுமதித்ததை அடுத்து முதலீட்டாளர் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.


சென்னை ஐஐடியில் உருவான அக்னிகுல் காஸ்மோஸ் (Agnikul Cosmos) போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சிறிய செயற்கைகோள்களை செலுத்தும் சந்தையை மேலும் ஜனநாயகமயமாக்க முயல்கின்றன.


2017ல், ஸ்ரீநாத் ரவிசந்திரன் மற்றும் மொயின், எஸ்.பி.எம் ஆகியோரால் துவக்கப்பட்ட அக்னிகுல் காஸ்மோஸ் குறைந்த செலவில் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவதற்காக ஏவுவாகனத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இஸ்ரோவின் நிபுணத்துவம் மற்றும் ராக்கெட்டை உருவாக்கு ஆற்றலை பயன்படுத்திக்கொள்வதற்காக முதலில் ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனமாகவும் இது திகழ்கிறது.

அக்னிகுல்

இதன் முக்கியத் தயாரிப்பான அக்னிபான் (Agnibaan) பூமியின் 700 கிமீ நீள்வட்ட பாதையில் 100 கிலோ எடையை கொண்ட செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


விண்வெளி அனைவருக்கும் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும் என நிறுவனர்கள் கருதுகின்றனர். நம் உலகிற்கு வெளியே இருக்கும் பரப்பிற்கான நீண்ட பயணத்தின் துவக்கம் என்றும் இதை கருதுகின்றனர்.


அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் அடிப்படையாக பொறியியல் அமைந்துள்ள நிலையில், வானமே எல்லை என நினைக்கும் துடிப்பான இளம் பெண்கள், நிறுவனக் குழுக்களை வழிநடத்தி வருகின்றனர்.


இயற்பியல் ஆசிரியர்களான தனது அம்மா மற்றும் அத்தை ஆகிய இருவரால், இந்த பாடத்தில் ஆர்வம் கொண்ட ஸ்ரீநாத்,

“பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது மற்றும் நிர்வாகத்திற்கு பெண்கள் வேறு விதமான பார்வையை கொண்டு வருகின்றனர்,” என்கிறார்.

அக்னிகுல் காஸ்மோசில் உள்ள குழுக்களை வழிநடத்தும், உமா மகேஸ்வரி, சரண்யா மற்றும் ஆரூஷி சவுத்ரி ஆகியோரிடம் ஹெர்ஸ்டோரி உரையாடியது.


உமா மகேஸ்வரி, Agnilet Engine  சோதனை திட்ட இயக்குனர்

உமா

சென்னையில் பிறந்து வளர்ந்த உமா மகேஸ்வரி, எம்.ஐ.டி-யில் ஏரோனாடிக்ஸ் பி.டெக் பட்டம் பெற்றார். படித்துக்கொண்டிருந்த போது, டி.ஆர்.டி.ஓ உள்ளிட்ட அமைப்புகளில் பயிற்சி ஊழியராக இருந்தவர், பின்னர் அக்னிகுல் நிறுவனத்தில் இணைந்தார்.


நிறுவனத்தில் அவர் உலகின் முதல் ஒற்றை பொருள் 3டி- பிரிண்டிங் ராக்கெட் இஞ்சின் சோதனையை வழிநடத்தினார்.

“Agnilet தனித்தன்மை வாய்ந்தது ஏனெனில், இது ஒற்றை பாகமாக, 3டி பிரிண்டரில் உருவாக்கப்பட்ட ஒற்றைப் பொருள் வன்பொருளாகும்,” என்கிறார் அவர்.  

இந்தத் திட்டத்தின் பலன் என்னவாக இருக்கும் என்பது தெரியாமலே இதில் அவர் பங்கேற்றது ஊக்கம் தரும் கதையாக அமைகிறது.

“ஐசியூவை கட்டமைப்பது போன்றது இது. வேறுபட்ட பல விஷயங்கள் ஒன்றிணைய வேண்டும். ஆக்சிஜன், கெரோசின் போன்ற தீவிரமான பொருட்களைக் கையாள வேண்டும். இதற்கு நுணுக்கமான, துல்லியமான திட்டமிடல் அவசியம். ஒரு மருத்துவமனையின் முக்கியப் பகுதியை உருவாக்குவது போன்றது,” என்று ஸ்ரீநாத் விளக்குகிறார்.

வெளிநாட்டு குழுக்கள் மற்றும், வெளிப்புற வெண்டர்கள் கொண்ட இந்தத் திட்டத்தை கொரோனா சூழலுக்கு மத்தியில் உமா திறம்பட வழிநடத்தினார்.

“அனைத்து சோதனை அம்சங்களையும் மேற்கொண்டு, அவற்றை கண்காணித்த படி, நிறுவனக் குழுக்கள் மற்றும் பெரிய ரிக்கின் கட்டுமானத்தை நிர்வகிக்க வேண்டியிருந்தது- இவை அனைத்தும் ஒரே ஒத்திசைவான செயல்பாடாக அமைந்திருந்தது மிகப்பெரிய சவாலாக இருந்தது,” என்கிறா உமா.

இது செயல்படும் வரை முயற்சித்துக்கொண்டே இருந்ததால் எதையும் கைவிட்டுவிடவில்லை என்பவர் கற்றில் பயனே இது தானே என்கிறார்.


சரன்யா, அகினாபான் வாகன வடிவமைப்பு

சரன்யா

போர்ட் பிளேயரைச்சேர்ந்த சரன்யா, பொறியியல் படிப்பிற்காக சென்னை வந்தார். GATE தேர்வு எழுதிய பிறகு சென்னை ஐஐடியில் கடல்சார் தொழில்நுட்பத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்தார்.  


விண்வெளித்துறை புதியது என்றாலும், தனது பொறியியல் கல்வியை அடிப்படையாகக் கொண்டு அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தில், சிஸ்டம்ஸ் இஞ்சினியராக சேர்ந்தார். நிறுவனத்தில் வாகன வடிவமைப்பு குழுவுக்கு தலைமை வகிக்கிறார். மாறுபட்ட தேவைகளை கொண்ட வேறுபட்ட குழுவை அவர் நிர்வகிக்கிறார்.


நூற்றுக்கணக்கான சிஸ்டம்ஸ் வடிவமப்புகளை கையாள்பவர், அவற்றின் இடைமுகங்களை கவனித்தபடி, வாகனம் மேலும் எடை குறைந்ததாகவும், செயல்திறன் மிக்கதாகவும் இருக்க குழுவை ஊக்கப்படுத்துகிறார்.


அக்னிகுல் முதலில் உருவாக்கிய Compressive Overwrapped Pressure Vessel (COPV) திட்டத்தில் அவர் பங்கேற்றார்.

“வழக்கமான முறை என்னவென்றால் சுவரை தடிமனாக உருவாக்குவது. இது பறக்கும் தன்மையை பாதிக்கும். இதை லேசாக்குவதற்காக வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தினோம். மெல்லிய சுவர் கொண்ட கண்டெய்னரை உருவாக்கி அதைச்சுற்றி இழைகளை அமைப்பதன் மூலம், பறப்பதற்கு ஏற்ற லேசான தன்மையை உருவாக்குவது ஒரு வழி,” என விளக்குகிறார் ஸ்ரீநாத்.

அக்னிகுல் நிறுவனத்தில் துவக்கத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது மற்றும் தனக்கு பழக்கமான மண்டத்திற்கு வெளியே செயல்பட வேண்டியிருந்தது என்கிறார் சரன்யா.  


ஆருஷி சவுத்ரி- அக்னிபான் ஏவியானிக்ஸ் சிஸ்டம்ஸ் பொறியியல்

ஆருஷி

உத்திரபிரதேசத்தின் காஸியாபாத்தைச்சேந்த ஆருஷி, குருகிராமில் உள்ள பிஎம்.எல் முஞ்சால் பலகலையில் மின்னணு மற்றும் தகவல் தொழிநுட்பப் பட்டம் பெற்றவர் தனது கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக பெரிய நிறுவனங்களை விடுத்து அக்னிகுலை தேர்வு செய்தார்.

“கல்பான் சாவ்லாவால் உந்தப்பட்டு சிறுவயதிலேயே எனக்கு விண்வெளியில் ஆர்வம் உண்டானது. எனினும் கல்லூரி காலத்தில் தான் இதில் உண்மையான நாட்டம் உண்டானது. என சாத்தியமாகக்கூடிய கனவு என நினைத்தேன்,” என்கிறார் ஆருஷி.

அக்னிகுல் நிறுவனத்தில் பணியாற்றத்துவங்கிய போது, சரியான நபர்கள் இருந்தால், எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியும் என்பதை அவர் உணர்ந்தார்.


நிறுவனத்தில் ஏவியானிக்ஸ் சிஸ்டம்ஸ் பொறியியலை அவர் கவனித்துக்கொள்கிறார். அகினிபான் உள்கட்டமைப்பு தனித்தன்மை மிக்கதாக இருப்பதால் இது சவாலானது.

“எளிமையாகச் சொல்வது என்றால், ஏவியானிக்ஸ் உள்கட்டமைப்பு பல்வேறு காரணிகள் தொடர்பான உணர்வை அளிக்கும், ஏவுவாகன மூளையாக விளங்குகிறது. செயல்பாட்டில் ஏதேனும் பிரச்சனையா அல்லது எல்லாம் சரியாக இருக்கிறதா எனக் கண்டறிய உதவுகிறது,” என்கிறார் ஆருஷி.

நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு 21ம் நூற்றாண்டின் ராக்கெட்டை உருவாக்குவது நோக்கம் என்கிறார். ஆனால் அதே நேரத்தில் எளிதாகக் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு குறைந்த செலவிலும் உருவாக்க வேண்டும்.


சரியான அமைப்பு வேண்டும் என்பதால் இந்த க்குழு வென்பொருள் திட்டத்தை தாமதமாக்கியது.

”இதற்கு மிகவும் பொறுமை தேவைப்பட்டது. வன்பொருள் திட்டத்தில் ஈடுபட ஆர்வமுடந்த இருந்த குழுவிற்கு எங்கள் கருத்தை புரிய வைக்க வேண்டியிருந்தது,” என்கிறார் ஆருஷி.

செவ்வாய்க்கு மனிதர்கள் செல்வதற்கு உதவ வேண்டும் என்பதே தனது கனவு என்றும் சொல்கிறார்.


ஆங்கில கட்டுரையாளர்: ரேகா பாலகிருஷ்ணன் | தமிழில்: சைபர் சிம்மன்