யூடியூப் சேனலில் தொடங்கி ஸ்டார்ட்-அப் உலகில் ரூ.150 கோடி மதிப்பு நிறுவனமான சென்னை ‘Guvi’ வெற்றிக் கதை!
ஒரே ஒரு யூடியூப் சேனலில் ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, ரூ.150 கோடி மதிப்பிலான ‘குவி’ என்னும் இ-லேர்னிங் ஸ்டார்ட்-அப் நிறுவனமாக உயர்ந்து நிற்கும் பயணம் கவனிக்கத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு, இயந்திரம் மூலம் கற்றல் முதல் இணைய மேம்பாடு, சைபர் பாதுகாப்பு வரை ஆர்வம் உள்ளவர்களுக்கு திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை வழங்கி வருகிறது சென்னையைச் சேர்ந்த ‘குவி’ (
) நிறுவனம்.ஸ்டார்ட்-அப்களின் வேகமான உலகில், வணிக கருத்துளும் அவற்றைத் தூண்டும் தொழில்நுட்பத்தைப் போலவே வேகமாகப் பரவுகின்றன. இதனால் புதுமைப்புகுத்தலின் சாரம் மட்டுமல்ல, இடைவிடாத நாட்டத்தையும் படம்பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
ஒரு சாதாரண யூடியூப் சேனலாக தொடங்கப்பட்டு, 150 கோடி ரூபாய் மதிப்பிலான இ-லேர்னிங் தளமாக மாறிய ‘குவி’ என்ற ஸ்டார்ட்-அப், ஆன்லைன் கல்வியை எப்படி புரட்சிகரமாக மாற்றியதன் கதைதான் இது.
‘குவி’யின் வணிக மாதிரி, அதன் வேர்கள், அதன் பின்னணியில் உள்ள தொலைநோக்கு பார்வையாளர்கள், அதன் நோக்கம் மற்றும் வெற்றியை மறுவரையறை செய்ய சமாளித்த தனித்துவமான சவால்கள் ஆகியவற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
எளிய தொடக்கம்:
‘குவி’ தளத்தின் தொடக்கம் ஓர் எளிமையான, ஆனால் ஆழமான கருத்தின் பின்புலத்தில் நிகழ்ந்தது ஆகும். தொலைநோக்குப் பார்வை கொண்ட அருண் பிரகாஷ், ஸ்ரீதேவி, மற்றும் எஸ்.பி.பாலமுருகன் ஆகியோரால் ‘குவி’ தொடங்கப்பட்டது. இந்தியர்களுக்கு தொழில்நுட்ப கல்வியை ஜனநாயகபூர்வமாக்க தொடங்கப்பட்டதாக இம்மூவரும் கருதுகின்றனர்.
தொழில்நுட்பத்தை கற்கையில் இருக்கும் மொழித் தடையை நீக்க முதலில் யூடியூப் சேனல் தொடங்கினர். நிறுவனர்கள், தொழில்நுட்பப் பரப்பைப் பற்றிய ஆழமான புரிதலையும் கல்வியில் ஆர்வமும் கொண்டவர்கள், இந்திய கல்வி முறையில் இருக்கும் இடைவெளியைப் புரிந்து கொண்டனர். அதாவது, உயர் தொழில்நுட்பமுறைகளை நுணுக்கங்களை தங்கள் சொந்த மொழியில் கற்க முடியாமல் இருக்கும் நிலையை உணர்ந்தனர்.
தொழில்நுட்பக் கல்வியை அனைவரும் அணுகும் நோக்கத்தில், அவர்களின் மொழிப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் தங்களது பணியைத் தொடங்கினர்.
உள்ளூர் மொழிகளை மேம்படுத்துவதன் மூலம், கற்க ஆர்வமுள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் திறனை முடுக்கிவிட முடியும் என்று நிறுவனர்கள் நம்பினர். இந்த நம்பிக்கை ‘குவி’யின் புதுமையான வணிக மாதிரிக்கு அடித்தளம் அமைத்தது. இது பிராந்திய மொழிகளில் தொழில்நுட்ப படிப்புகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.
பைத்தான், மெஷின் லேர்னிங், டேட்டா சயின்ஸ் மற்றும் பல படிப்புகளை பிராந்திய மொழிகளில் வழங்குவதன் மூலம், ‘குவி’ தனது வரம்பை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், இ-லெர்னிங் சந்தையில் ஒரு தனித்துவமான இடத்தையும் வளர்த்துள்ளது.
இந்த அணுகுமுறை ஆயிரக்கணக்கான மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் திறமையை மேம்படுத்தி, கடும் போட்டிகள் கொண்ட தொழில்நுட்ப துறையில் வெற்றிக்கு வழி வகுத்தது.
ஸ்டார்ட் அப் நிறுவனமாக...
ஒரு யூடியூப் சேனலில் இருந்து ரூ.150 கோடி நிறுவனமாக மாறுவது சிறிய சாதனையல்ல. ‘குவி’யின் பயணம், ஆரம்பகால நிதியுதவித் தடைகள் முதல் பிராந்திய மொழிக் கல்வியின் சாத்தியக்கூறு பற்றிய சந்தேகம் வரை சவால்கள் நிறைந்ததாக இருந்தது.
இருப்பினும், நிறுவனர்களின் தங்கள் பணியின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கை, விடா முயற்சி ஆகியவற்ற்றின் மூலம் தடைகளை உடைத்தெறிந்தனர். அவர்களின் வெற்றிக் கதை, புதுமை மற்றும் வழக்கமான எல்லைகளைத் தாண்டிய தொலைநோக்குப் பார்வை மீதான இடைவிடாத நாட்டம் மற்றும் சக்திக்குச் சான்றாக விளங்குகிறது.
‘குவி’யின் புதுமையான அணுகுமுறை, குறிப்பிடத்தக்க தாக்கத்துக்கு அங்கீகாரம் கிடைக்காமலில்லை. தொழில்நுட்பக் கல்வியை பலருக்கும் உரியதாக ஜனநாயகமயப்படுத்தல் மற்றும் அணுகக்கூடியதாக மாற்றுவதில் அதன் பங்களிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக பல விருதுகளுடன் பாராட்டப்பட்டது. இந்த பாராட்டுக்கள் குவியின் சிறப்பிற்கும், எண்ணற்ற கற்கும் மாணவர்களின் வாழ்வில் ஏற்படுத்திய உறுதியான மாற்றத்திற்கும் ஓர் சான்றாகும்.
தொழில்நுட்பப் புரட்சியின் காரணமாக முன்னணியில் நிற்கும் கல்விகள் மற்றும் பாடங்களில் ‘குவி’ நிபுணத்துவமுடையது. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் முதல் இணைய மேம்பாடு மற்றும் சைபர் பாதுகாப்பு வரை ‘குவி’ இன்றைய மாறும் தொழில்நுட்ப நிலப்பரப்பால் கோரப்படும் திறன்களுடன் கற்பவர்களுக்கு பேருதவியாக இருக்கிறது.
இந்த சிக்கலான பாடங்களை எளிதில் கற்கக் கூடிய விதமாகவும், பிராந்திய மொழி அடிப்படையிலான படிப்புகளாக மாற்றியமைக்கும் திறனில் இந்த தளத்தின் வெற்றியாகவும் மட்டுமே அல்லாமல் தொழில்நுட்பக் கல்வியை அணுகக்கூடியதாகவும் ஈர்க்கக் கூடியதாகவும் ஆக்குகிறது.
‘குவி’ தொடர்ந்து வளர்ந்து வருவதால், அதன் நிறுவனர்கள் தொழில்நுட்பக் கல்வியை ஜனநாயகப்படுத்துவதில் உறுதியாக உள்ளனர். அதன் பாடத்திட்டங்களை விரிவுபடுத்துவதற்கும், இந்தியா முழுவதும் அதிகமான பேர்களைச் சென்றடைவதற்கும் திட்டமிட்டுள்ள ‘குவி’, அதன் குறிப்பிடத்தக்க பயணத்தைத் தொடரத் தயாராக உள்ளது.
தொழில்நுட்பத்தின் மாறிவரும் நிலைகளினால் ஸ்டார்ட்-அப்கள் திறப்பதும் மூடுவதுமாக இருக்கும் காலக்கட்டத்தில் நீடித்த தாக்கத்தை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதற்கு ‘குவி’ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
யூடியூப்பில் தனது எளிய தொடக்கத்தில் இருந்து ரூ.150 கோடி வெற்றிக் கதையாக மாறியது வரை, ‘குவி’யின் பயணம் டிஜிட்டல் யுகத்தில் கல்வி என்பது அறிவைப் பெறுவது மட்டுமல்ல, தடைகளைத் தகர்த்து ஒளிமயமான எதிர்காலத்திற்கான பாலங்களைக் கட்டுவதுதான் என்பதைக் குறிக்கிறது.
உப்பை பல கோடி வர்த்தகமாக மாற்றிய 21 வயது மதுரை இளைஞர்! - Naked Nature வெற்றி கண்டது எப்படி?
Edited by Induja Raghunathan