சோனியுடன் இணைந்த ஜீ - ராக்கெட் வேகத்தில் அதிகரித்த பங்கு மதிப்பு!
நீண்ட நாட்களுக்கு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் காத்திருந்த ஜீ மற்றும் சோனி இணைப்புக்கான ரூட் கிளியர் செய்யப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களுக்கு பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் காத்திருந்த ஜீ மற்றும் சோனி இணைப்புக்கான ரூட் கிளியர் செய்யப்பட்டுள்ளது.
சோனி இந்தியாவுடன் ஜீ எண்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தை இணைக்க தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) ஒப்புதல் அளித்துள்ளது. $10 பில்லியன் மீடியா குழுமத்தை உருவாக்கும் நோக்கில் மெகா இணைப்புக்கான முக்கிய ஒழுங்குமுறை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2021 இல், ஜீ எண்டர்டெயின்மென்ட் மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகியவை தங்கள் வணிகங்களை இணைக்க ஒப்பந்தம் செய்தன. இதையடுத்து, இரு ஊடக நிறுவனங்களும், தேசிய பங்குச் சந்தை (என்எஸ்இ), மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) மற்றும் இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ), பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) போன்ற பிற ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து ஏற்கனவே தேவையான அனுமதிகளைப் பெற்றிருந்த நிலையில், இணைப்புக்கு ஒப்புதல் பெற நீதிமன்றத்தை அணுகின.
எச் வி சுப்பா ராவ் மற்றும் மது சின்ஹா ஆகியோர் அடங்கிய மும்பை நீதிமன்றம், ஆக்சிஸ் ஃபைனான்ஸ், ஜேசி ஃப்ளவர் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கோ, ஐடிபிஐ வங்கி, ஐமேக்ஸ் கார்ப் மற்றும் ஐடிபிஐ டிரஸ்டிஷிப் போன்ற கடன் வழங்குநர்களின் ஆட்சேபனைகளை தள்ளுபடி செய்ததது.
கடந்த மாதம், என்சிஎல்டி மும்பை பெஞ்ச், ஆக்சிஸ் ஃபைனான்ஸ், ஜேசி ஃப்ளவர் அசெட் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கோ, ஐடிபிஐ வங்கி, ஐமாக்ஸ் கார்ப், ஐடிபிஐ டிரஸ்டிஷிப் உள்ளிட்ட கடன் வழங்குநர்களின் வாதங்களைக் கேட்டபின், உத்தரவை ஒத்திவைத்தது. ஜீ நிறுவனத்தின் மொத்த பொது பங்குகள் 96.01 சதவீதம் ஆகும், இதில் 70 சதவீதம் பொது நிறுவனங்களால் உள்ளது.
அரசு சாரா நிறுவனங்களில் 25.88 சதவீதமும், விளம்பரதாரர்கள் 3.99 சதவீதமும் மட்டுமே இருப்பது தெரியவந்தது. தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதையடுத்து, முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து, ஜீ நிறுவனத்தின் நேற்றய பங்கின் விலை 15 சதவீதம் உயர்ந்து ரூ.281.80-ல் வர்த்தகம் முடிந்தது. இதனால் பங்கின் விலை ஒரே நாளில் 40 ரூபாய் அதிகரித்துள்ளது.