200 மில்லியன் டாலர் நிதி திரட்டி இந்தியாவின் புதிய யூனிகார்ன் ஆனது Zepto
ஜெப்டோ நிறுவனம் அடுத்த 12 முதல் 15 மாதங்களில் லாபகரமாக மாறுவதை எதிர்பார்க்கும் நிலையில் 2025 ல் பொது பங்கு வெளியீட்டிற்கும் திட்டமிட்டுள்ளது.
விரைவு காமர்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனம்
, புதிய மற்றும் தற்போதைய முதலீட்டாளர்களிடம் இருந்து, 1.4 பில்லியன் டாலர் சந்தை மதிப்பில், இ சுற்று நிதியாக 200 மில்லியன் டாலர் நிதி திரட்டி, 2023 ம் ஆண்டில் யூனிகார்ன் அந்தஸ்து பெறும் முதல் நிறுவனமாக விளங்குகிறது.ஜெப்டோவில் முதலீடு செய்வதன் மூலம் இந்தியாவில் முதல் நேரடி முதலீட்டை மேற்கொள்ளும் நியூயார்க்கின் தனியார் சந்தை முதலீடு நிறுவனம் ஸ்டெப்ஸ்டோன் குருப் தலைமையில் இந்த நிதி சுற்று அமைந்தது. கலிபோர்னியாவைச் சேர்ந்த வென்சர் முதலீடு நிறுவனமான குட்வாட்டர் கேபிடல் புதிய முதலீட்டாளராக வந்துள்ள நிலையில், நெக்சஸ் வென்சர் பாட்னர்ஸ், கிலாட் புரூக் கேபிடல், லாக்கி குரூம் ஆகிய நிறுவனங்கள் இந்த சுற்றில் பங்கேற்றன.
ஆதித் பலிகா (Aadit Palicha) மற்றும் கைவல்ய வோரா (Kaivalya Vohra) தலைமையில் இயங்கும் ஜெப்டோ, மும்பை, தில்லி, பெங்களூரு, சென்னை, ஐதராபாத், புனே, கொல்கத்தாவின் பகுதி ஏழு முன்னணி நகரங்களில் தனது இருப்பை ஆழமாக்க இந்த நிதியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அவெண்டஸ் கேபிடல் இந்த ஒப்பந்தத்திற்கு ஆலோசகராக விளங்கியது.
ஏற்கனவே கற்பனை செய்ததை விட முன்னணி நகரங்கள் மிகப்பெரிய வாய்ப்புகளை கொண்டுள்தால், தற்போதைய சந்தையில் மேலும் ஆழமாக ஊடுருவுவது அவசியமாகிறது மற்றும் வளர்ச்சி, லாபத்தை நோக்கி முன்னேறவும் அவசியமாகிறது என ஜெப்டோ இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ ஆதித் பலிகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
"பூலோக பரப்பில் தீவிரமாக விரிவாக்கம் செய்யப் போவதில்லை. ஆனால் திட்டமிட்ட, ஒழுங்கான அணுகுமுறையை பின்பற்ற இருக்கிறோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த மளிகைப் பொருட்கள் டெலிவரி நிறுவனம், அடுத்த 12 முதல் 15 மாதங்களில் EBITDA-அளவு லாபத்தை அடைய திட்டமிட்டுஓள்ளது. வளர்ச்சி மற்றும் லாபத்தை அடைவதில் தீவிர கவனம் செலுத்துவதன் மூலம் இதை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
ஆண்டு அடிபப்டையில் இதன் விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், அடுத்த சில காலாண்டுகளில் ஒரு பில்லியன் ஆண்டு விற்பனையை அடைய இருப்பதாகவும் நிறுவனம் தெரிவிக்கிறது.
"இந்த மூலதனத்தில் கூட, எங்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க உள்ளோம், அலட்சியம் கொள்வதை தவிர்த்து, EBITDA இலக்கில் முன்னேற உள்ளோம். இந்த பயணத்தில், லாப நஷ்டத்திற்கான முன்னேற்றத்தில் தொழில்நுட்பம் மற்றும் சேவை முக்கிய அம்சமாக இருக்கும் என இணை நிறுவனரும், முதன்மை தொழில்நுட்ப அதிகாரியுமான வோரா கூறினார்.
ஓய் காம்பினேட்டர் ஆதரவு பெற்ற இந்நிறுவனம், 2025ல் பொது பங்குகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக நீடித்த வளர்ச்சியில் தற்போது அதிக கவனம் செலுத்துகிறது.
பொது வெளியீடு மூலம் திரட்ட உள்ள தொகை பற்றி நிறுவனர் எதுவும் கூறவில்லை. எனினும், இந்த சுற்று பொது வெளியீட்டிற்கு முந்தைய மூலதன சுற்று என்று தெரிவித்தார்.
"இந்த நிதியை (200 மில்லியன் டாலர்) திரட்டியதன் நோக்கம், அடுத்த 1 முதல் 3 மாதங்களுக்கான மூலதனத்தை பெறுவதாகும். அடுத்த 9 முதல் 12 மாதங்களிலிருந்த மூலதனம் அளிக்கும் வருவாய், லாப பயணத்தை ஊக்குவிக்கும்,” என்று அவர் கூறினார்.
இதன் மூலம் ஜெப்டோ இதுவரை 560 மில்லியன் டாலர் நிதி திரட்டியுள்ளது. கடந்த சுற்றில் 900 மில்லியன் டாலர் மதிப்பில், ஒய் காம்பினேட்டர் தலைமையில் 200 மில்லியன் டாலர் நிதி திரட்டியது.
2021ல் நிறுவப்பட்ட நிறுவனம், ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் மற்றும் ஜொமேட்டோவின் Blinkit-க்கு போட்டியாக விளங்கும் வகையில் இந்தியாவின் அதிக நிதி பெற்ற விரைவு காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.
அதிக ரொக்கம் தேவைப்படுவது மற்றும் சிக்கலான பொருளாதார மாதிரியை மீறி விரைவு காமர்ஸ் துறையில் போட்டி அதிகரிப்பது இந்த நிதி திரட்டல் உணர்த்துகிறது. எனினும், ஒரு ஆர்டரை நிறைவேற்ற நிறுவனம் செலவிடும் தொகை 2022 துவக்கத்துடன் ஒப்பிடும் போது 70 சதவீதம் குறைந்திருப்பதாகவும், சப்ளை சைன் மேம்பாடு, டார்க் ஸ்டோர் நிர்வாகம் போன்ற இதற்குக் காரணம் என்று பலிகா தெரிவித்தார். ஒவ்வொரு மாதமும் 50 முதல் 60 மில்லியன் டார்ல் விற்பனை உருவாவதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஜெப்டோவின் பெரும்பாலான டார்க் ஸ்டோர்கள் ஏற்கனவே லாபகரமாக இயங்குவதாக நிறுவனம் கூறுகிறது.
கடந்த ஏப்ரலில், ஜிலிங்கோ மற்றும் மிந்த்ரா ஆகியவற்றின் முன்னாள் சி.எப்.ஓ ரமேஷ் பாப்னா, நிறுவன சி.எப்.ஓவாக நியமிக்கப்பட்டிருப்பதாக யுவர்ஸ்டோரி செய்தி வெளியிட்டது.
பின்னர், மே மாதம் நிறுபனம் நிர்வாக உயர் பதவிகளில் மாற்றத்தை கொண்டு வந்தது.
ஆங்கிலத்தில்: செளமியா ராமசுப்பிரமணியன்
Edited by Induja Raghunathan