Gold Rate Chennai: விண்ணை முட்டும் தங்கம் விலை; சவரனுக்கு ரூ.880 உயர்வு!
தங்கம் விலை இன்று உச்சகட்டமாக சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்துள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கம் விலை இன்று உச்சகட்டமாக சவரனுக்கு 880 ரூபாய் உயர்ந்துள்ளது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் போக்கு தொடரும் எனத் தெரிகிறது.
தங்கம் விலை நிலவரம் (18/03/2023)
கடந்த 14-ம் தேதி முதலே தங்கம் விலை சவரனுக்கு ரூ.43,000-ஐ கடந்து விற்பனையாகி வந்தது. இதனால் இனி தங்கம் வாங்க முடியுமா என நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்த்திருந்தனர். வார கடைசி நாளான இன்று யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு தங்கம் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்திருப்பது முதலீட்டாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்றைய வர்த்தகத்தின் போது, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 5,450 ரூபாய்க்கும், சவரன் 43,600 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்றைய நிலவரப்படி, (சனிக்கிழமை) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 5,560 ரூபாயாகவும், சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து 44,480 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, 24 காரட் சுத்த தங்கத்தின் விலை, கிராம் ஒன்றிற்கு 110 ரூபாய் அதிகரித்து 6,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து 48,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தை போலவே இன்று வெள்ளியின் விலையும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 30 காசுகள் அதிகரித்து 74 ரூபாய் 40 காசுகளுக்கும், ஒரு கிலோவிற்கு ஆயிரத்து 300 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.

கடும் உயர்வுக்கான காரணம் என்ன?
அமெரிக்காவில் அடுத்தடுத்து இரண்டு பிரபல வங்கிகள் திவாலானதை தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை மீதான நம்பிக்கை குறைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளை நோக்கி திரும்பியுள்ளனர். முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தின் மீதான முதலீடுகளை அதிகரித்துள்ளது, அதன் விலை தொடர்ந்து அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
முக்கிய நகரங்களின் தங்கம் விலை நிலவரம்:
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,560 (மாற்றம்: ரூ.110 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,480 (மாற்றம்: ரூ.880 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,050 (மாற்றம்: ரூ.110 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,400 (மாற்றம்: ரூ.880 அதிகரிப்பு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ. 5,560 (மாற்றம்: ரூ.110 அதிகரிப்பு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.44,480 (மாற்றம்: ரூ.880 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.6,065 (மாற்றம்: ரூ. 120 அதிகரிப்பு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ. 48,520 (மாற்றம்: ரூ.960 அதிகரிப்பு)