JRD TATA: தாத்தாவை நினைவுகூர்ந்த ரத்தன் டாடா; 118வது பிறந்தநாளில் உருக்கம்!
டாட்டா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாட்டாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, கொள்ளுப் பேரனான ரத்தன் டாடா நினைவு கூர்ந்துள்ளார்.
டாட்டா குழும நிறுவனர் ஜாம்செட்ஜி டாட்டாவின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, கொள்ளுப் பேரனான ரத்தன் டாடா அவரது பழைய நாட்களை நினைவு கூர்ந்துள்ளார்.
1938 ஆம் ஆண்டு டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகளாக நிறுவனத்தை வழிநடத்தியவர் JRD Tata, இந்தியாவின் முதல் விமான சேவையை வழங்கியது, இந்தியாவின் சிவில் விமானப் பயணத்திற்கான முதல் விமான சேவையை இயக்கியது என பல சாதனைகளை படைத்த ஜேஆர்டி டாடா, 34 வயதிலேயே டாடா சன்ஸ் வாரியத்தின் உறுப்பினராக பதவியேற்று, மிகவும் இளமையான உறுப்பினர் என்ற பெருமையையும் பெற்றார்.
இந்தியாவின் முதல் விமானி ஜேஆர்டி டாடா:
பிப்ரவரி 10, 1929ல், ஜே.ஆர்.டி டாடா தனது 15 வயதில் இருந்து வளர்த்து வந்த ஒரு கனவை நிறைவேற்றினார். இந்தியாவில் முதல் வணிக விமானிச் சான்றிதழைப் பெற்றார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அக்டோபர் 1932ல், டாடா கராச்சியிலிருந்து மும்பை நோக்கி விமானத்தை இயக்கினார். ஒரு மணி நேரத்திற்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் விமானத்தை இயக்கி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார்.
விமானியாகப் பணிபுரியும் போது, டாடாவிடம் ஒரே ஒரு துணைக்கருவி, அவரது கண்ணாடிகள் மட்டுமே. அத்துடன் நீலம் மற்றும் தங்க நிறத்தில் எண் 1 என அச்சிடப்பட்ட விமானிக்கான சான்றிதழையும் ‘ஜே’ தனது விமானத்தில் வைத்திருந்தார்.
ஜேடிஆர் டாடாவை நினைவுகூர்ந்த ரத்தன் டாடா:
ஜே.ஆர்.டி.டாடா இந்தியாவின் இரண்டு உயரிய விருதுகளைப் பெற்ற ஒரே தொழிலதிபர் ஆவார். தொழில்துறையின் வளர்ச்சிக்காக ஜேஆர்டி டாடா செய்த சேவை மற்றும் பங்களிப்பை பாராட்டி 1955ம் ஆண்டு 'பத்ம விபூஷன்' விருதும், 1992ம் ஆண்டு பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ஜூலை 29ம் தேதி அன்று, டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா, ஜேஆர்டி டாடாவின் 118வது பிறந்தநாளை நினைகூர்ந்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,
"அன்பான இதயம் மற்றும் அக்கறையுள்ள மனிதர்..." என ஜேஆர்டி டாடாவின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ரத்தன் டாடா.
அவரைப் பற்றி மேலும் பகிர்கையில்,
"நாங்கள் பல பொதுவான விஷயங்களைப் பற்றி ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்வோம், ஆனால் நான் உண்மையில் மிஸ் செய்வது அவருடைய பாசத்தையும் கருணையையும் தான். ‘ஜே’ எங்களுடன் இல்லாவிட்டாலும், அவரது வரலாறு என்றும் தொடரும்..." என்று இந்திய விமானப் பயணத்தின் தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ரத்தன் டாடா பதிவிட்டுள்ளார்.
ஜேஆர்டி டாடாவின் 118வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், நாட்டின் முதல் விமான நிறுவனமான ஏர் இந்தியா குறித்த அவரது சில குறிப்புகளை டாடா குழுமம் பகிர்ந்துள்ளது.
‘ஆம்லெட் எப்படி இருக்க வேண்டும், தேநீரின் நிறம், இருக்கைகளின் சாய்வு அல்லது குழாயில் இருந்து வரும் தண்ணீரின் வெப்ப நிலை என எதையுமே ஜே சின்ன விஷயமாக எடுத்துக்கொண்டது இல்லை. விமானப் பயணங்களின் போது அவர் மேற்கொண்ட அவதானிப்புகள் பற்றிய விரிவான குறிப்புகளை மேற்கொள்வார். அவை ஒவ்வொன்றிலும் சிரத்தையுடன் செயல்பட்டார். இந்த விவரம் மற்றும் சிறப்பைப் பின்தொடர்வது உலகெங்கிலும் உள்ள பயணிகளுக்கு ஏர்-இந்தியா ஒரு தனித்துவமான தேர்வாக மாறியது,” எனக்குறிப்பிட்டுள்ளது.
ஜேஆர்டி பகிர்ந்துள்ள குறிப்புகள் சிலவற்றையும் டாடா குரூப் நிறுவனம் பகிர்ந்துள்ளது. முதல் குறிப்பில்,
"ஜன்னல் இடைவெளிகளில் உள்ள விளக்குகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதை நான் கவனித்தேன். எங்கள் இடைவெளி ஜன்னல்களின் விளக்குகளுக்கு வண்ணம் தீட்டியதில் யாருக்கும் எந்தவிதமான ஆட்சேபனைகளும் அல்லது சிரமங்களும் வில்லை என்று நம்புகிறேன்,” என எழுதியுள்ளார்.
மற்றொரு குறிப்பில்,
“என விமானப் பயணத்தில் கொடுக்கப்பட்ட ஆம்லெட் மிகப் பிரமாதமாக இருந்தது. முதன்முறை இத்தகைய கச்சிதமான ப்ரேக்பாஸ்ட் அனுபவம் கிடைத்துள்ளது. விமான கிட்சனில் பணியாற்றுபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்...” எனக்குறிப்பிட்டுள்ளார்.