பதிப்புகளில்

துவக்க நிறுவனங்களுக்கு இணை நிறுவனர்களை கண்டுபிடித்து உதவும் நிகிலேஷ்!

முன்னனுபவம் இல்லாதவர்கள் ஒரு நிறுவனத்தைத் துவக்கும் போது அவர்களுக்கு அனுபவம் உள்ளவர்களுடன் இணைப்பு ஏற்படுத்துதல் பற்றியது இக்கதை

pothiraj purushothaman
28th Oct 2015
 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on

புதிய நிறுவனம் துவக்குவதற்கு என்னுடைய எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் துவக்க நிலையில் எழும் பொதுவான பிரச்சனைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதையும் கற்றுத் தருகிறேன். ஆனால் நாம் எவ்வளவு முயற்சித்தாலும் வெற்றிக்கு உத்திரவாதம் இல்லை. தோல்வியின் விகிதாச்சாரம் துவக்க நிலையில் அதிகமாகவே இருந்து வருகிறது. அதற்குக் காரணம் நிறுவனர்களின் ஆற்றல் போதாமையல்ல, தயாரிப்புப் பொருட்களுக்கான சந்தை நிலவரம் பெரும்பாலான நேரங்களில் சாதகமாக இல்லை என்பதுதான்.

நிகிலேஷ்

நிகிலேஷ்


அப்படியானால் துவக்க நிலையில் தோல்வியடைந்த நிறுவனர்கள் என்னதான் செய்வது..?

ஏதேனும் வேலையில் சேர்ந்து விடுவதா..? கெடு வினையாக, தொகழில்முனைவு அனுபவம், வழக்கமான வேலைக்கு எந்த வகையிலும் உதவப்போவதில்லை. இதில் மோசமான அம்சம் என்னவென்றால் பெருநிறுவன வேலையை மனநிறைவுடன் செய்ய முடியாது.

இன்னொரு நிறுவனத்தைத் துவக்குவதா..? அது அவ்வளவு சாதாரணமாதல்ல – உங்களுக்கு துவக்க முதலீடு, குழு, மிக முக்கியமாக சந்தைக்குப் பொருத்தமான தயாரிப்பைக் கண்டடைவதற்கான நேரம் ஆகியவை தேவைப்படும். இவையெல்லாம் உங்களிடம் இருந்திருந்தால் நீங்கள் ஏன் தற்போது துவங்கிய நிறுவனத்தை மூடிவைக்கப் போகிறீர்கள். எந்த நிலையிலும் நீங்கள் ஓர் இயங்கு சக்தி தான்.

தற்சமயம் பெற்றிருந்த விலைமதிப்பில்லாத அனுபவத்தைக் கொண்டு மற்றொரு துவக்க நிறுவனத்துடன் உங்களை ஒரு இணை நிறுவனராகவோ அல்லது முதற்கட்ட ஊழியராகவோ இணைத்துக் கொள்வது தான் இறுதியான சிறந்த வழி.

மார்பஸ் ஆக்சிலேட்டரின் நிறுவனர் சமீர் குஹ்லானி இந்தக் காணொளியில் கூறுவதைக் கேளுங்கள். உங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்குவதன் மேலான அம்சங்களைப் பாருங்கள். அவருக்கு நெருக்கமான தொழில் முனைவோர் பலர் நிறுவனங்களைத் தொடங்கி தவிர்க்க முடியாத காரணங்களால் அவற்றை மூடி விட்டாலும் அவர்களது தனிப்பட்ட திறமையால் தற்போது வெற்றியாளர்களாக மதிக்கப்படுகிறவர்களின் சுவாரஸ்யமான எடுத்துக்காட்டுகளைப் பாருங்கள்.


தங்களது தொழில்முனை முயற்சியில் தோல்வியுற்ற தொழில்முனைவோர் பலர் ’த மார்பஸ் கேங்’கில் அங்கமாகி விட்டதை நிகிலேஷ் பார்த்துள்ளார். இவர் தனது "சிவிபேஜோ" (cvbhejo) நிறுவனத்தைத் தொடங்கி 2.5 ஆண்டுகள் நடத்தி விட்டு அதனை மூடி விட்டார். இப்போது அந்நிறுவனம் த மார்பஸால் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் நிகிலேஷ் தனது நிறுவனத்தைத் துவக்கிய போது ஊழியர்களைப் பணியில் அமர்த்தியதன் மூலமாக நிறைய அனுபவங்களைச் சம்பாதித்துள்ளார்.

முன்னாள் நிறுவனர்களின் மற்றொரு துவக்கத்திற்கான இரண்டாம் வாய்ப்பிற்கு உதவ மார்பஸ் துணையுடன் ஒரு முயற்சி மேற் கொண்டார் நிகிலேஷ்.

‘’எனது நிறுவனத்தைக் கை விட்ட பிறகு அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் இருந்தேன். மார்பஸ் கேங்கின் இணை நிறுவனர் சமீருடன் உரையாடினேன். மற்றொரு துவக்கத்தில் முன்னாள் நிறுவனர்களின் முக்கியத்துவம், அதில் அவர்களது பொருத்தமான பங்களிப்பு ஆகியவற்றைப் பற்றி பணியில் அமர்த்தப்பட உள்ள குழு நிறுவன ஊழியர்களுக்குப் பயிற்றுவிப்பதில் உதவுமாறு என்னைப் பணித்தார். மற்றொரு துவக்கத்தில் இணைய விருப்பமுள்ள முன்னாள் நிறுவனர்களுக்கு சரியான அமைப்பை ஏற்படுத்தித் தர உடனடியாக ஒப்புக் கொண்டேன். அவர்களைத் தோல்வியுற்ற நிறுவனர்கள் என்றழைப்பதை நாங்கள் விரும்பவில்லை. மறுதுவக்கத்தின் நிறுவனர்கள் என்றே அழைக்க ஆரம்பித்தோம்’’ என்கிறார் நிகிலேஷ்.

புதிதாகத் துவக்கப்பட உள்ள ஒரு நிறுவனத்தில் இணை நிறுவனர் போன்ற தகுதியான இடத்திற்கு ஒருவரைக் கண்டுபிடித்து பணியில் அமர்த்த பொதுவாக நான்கைந்து மாதங்களேனும் தேவைப்படும். அப்போதும் இணை நிறுவனர் மற்றும் துவக்க நிறுவனத்தின் நிறுவனர் இருவரது எதிர்பார்ப்பும் சரியாகப் பொருந்தி வரும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இது பணத்தை வாரி இறைப்பதாலும், லாபத்தில் ஈடு வழங்கி விடுவதாலும் மட்டுமே நடந்து விடுகிற விஷயமல்ல.

இணை நிறுவனரை அமர்த்துவதில் பல தளங்களும், பல குழுக்களும் உண்டு. எனவே ஒரு வலைப் பின்னலமைப்பிற்கு வெளியே இணை நிறுவனரைக் கண்டுபிடிப்பது தான் பெரும் பிரச்சனை. பலரும் தங்களது குழுவை விட்டு அவ்வளவு எளிதாக வெளியேற மாட்டார்கள். பொருத்தமான இணை நிறுவனருக்கும், துவக்கப்படும் நிறுவனத்திற்கும் இணைப்பு ஏற்படுத்தித் தருவதில் முகநூலும், அமைப்புத் தளமும் ஓரளவு உதவக்கூடும். ஆனால் துவக்கத்திற்கு மிகச் சரியான நபரை அடையாளம் காட்டுவதில் அவை உதவாது. அச்செயல்பாடு தன்னியல்பாக நடைபெற முடியாது. இணை நிறுவனரை அமர்த்துவதற்கும் அனுபவம் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஒரு துவக்க நிறுவனத்திற்கு பொருத்தமானவர்களை எடுப்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாகும். அதை வித்தியாசமாகத் தான் செய்தாக வேண்டும்.

மார்பஸ் வலைப்பின்னலுக்கு வெளியில் உள்ள நிறுவனங்களுக்கும் நிகிலேஷ் உதவிகள் செய்கிறார். அதற்கு "ஹையரிங் டிகோடர்" (Hiring Decoder) என்று பெயரிட்டுள்ளார். ‘’மெய்யான அக்கறையுடன் நிறுவனத்தைத் துவக்க விரும்புபவர்களுக்கு நான் உதவி புரிய விரும்புகிறேன். எனவே மார்பஸ் கேங்குடன் மட்டுமே சுருங்கிக் கொள்வதில் அர்த்தமில்லை. துவக்க நிறுவனர்களுடன் நடைபெறும் சந்திப்பை மிகவும் விரும்புகிறேன். அவர்களுக்குப் பங்களிப்பு செய்ய முடிகிறவர்களுடன் பரஸ்பர உரையாடலை நிகழ்த்தினேன். அதிலிருந்து தானாகவே உருவாகி விட்டது ஹையரிங் டிகோடர். அது எவ்வித முனைப்பும் காட்டாமலே உதயமாகி விட்டது.

துவக்க நிறுவனத்திற்கு இணை நிறுவனர் அல்லது அனுபவம் மிக்க ஒருவரை அமர்த்துவதில் நிகிலேஷ் பின் வரும் முறையைக் கையாளுகிறார் –

 • புதிய நிறுவனர்கள் மீதும் அவர்கள் துவக்கும் நிறுவனத்தின் மீதும் ஒரு மதிப்பு மரியாதையை உருவாக்குகிறார். 
 • பிறருடனான தொடர்புகளை மேம்படுத்திக் கொள்கிறார்.
 • அனுபவம் பெற்ற நபர்களை எப்படி அமர்த்துவது என்பதற்கு புதிய நிறுவனர்களுக்குக் கற்றுத் தருகிறார்.
 • பொருத்தமான ஆட்களுடன் அவர்களுக்கு இணைப்பு ஏற்படுத்தித் தருகிறார்.
 • நேர்காணல்கள் நடத்த உதவி புரிகிறார்.

நிறுவனத்தின் ஒற்றை நிறுவனர்களுடன் நான் சில வேலைகள் மேற்கொள்வேன். பிறகு நாங்கள் இருவருமாகச் சேர்ந்து இணை நிறுவனருக்குப் பொருத்தமான நபரைக் கண்டுபிடிப்போம். புதிய நிறுவனர்களுடன் நெருக்கமாக இருந்து பணியாற்றுவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கைப் பயணம், துவக்குவதற்கான அனுபவம், ஆர்வம் குறித்துப் புரிந்து கொள்கிறேன். அது அவர்களுக்குப் பொருத்தமான நபரை ஈர்ப்பதற்கு எனக்கு உதவிகரமாக இருக்கிறது. எனது துவக்க அனுபவத்தில் பெற்ற படிப்பினைகள் மூலமாக இணை நிறுவனரை ஒரு மாத காலத்திற்குள்ளேயே என்னால் கண்டுபிடிக்க முடிகிறது’’ என்று கூறுகிறார் நிகிலேஷ்.

"அனுபவம் வாய்ந்த மூத்த நிலையில் உள்ள ஒருவரை இணை நிறுவனராக அமர்த்துவதும், துணைத்தலைவராக அமர்த்துவதும் அல்லது முன்னால் நிறுவனர்களை குறைந்த தொகைக்கு அமர்த்தக் கண்டுபிடிப்பது தான் மிகவும் கடினம் என்று நினைக்கிறேன். தொழில் முனைவோர் தங்களது உற்பத்தி பற்றியும், அதற்குரிய சந்தை பற்றியும், முதலீடு பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் துவக்கநிலையில் தமக்கான குழு உறுப்பினர்களை எப்படி அமர்த்துவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. உங்களால் எவ்வளவு அதிகமாகவும் பணம் திரட்ட முடிந்திருக்கலாம். ஆனால் துவக்க நிலையில் உங்களுக்குச் சரியான குழு உறுப்பினர்களை உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் உங்களது துவக்கம் நெடுந்தொலைவிற்குப் பயணப்படாது’’.

நிறுவனர்களின் தொழில் முனைப்புப் பயணம் ஒரு துவக்கத்துடன் முற்றுப் பெறுவதில்லை. ஒரு துவக்கத்தில் உங்களுடன் இருந்த ஒருவர் இன்னொரு துவக்கத்திலும் நீடித்து விட்டால் அப்போது அற்புதங்கள் நிகழத் தொடங்கி விடும். மெய்யான தொழில் முனைவோருக்கு உதவிகள் புரிய அவரது தகுதிக்கு ஏற்ற நபர் நிச்சயமாகக் கிடைக்கவே செய்வார். பலரும் தொழில் முனைப்பை மேற்கொள்வதற்கு நமக்கு நிறைய ஊக்கமளிப்புகள் தேவைப்படுகின்றன.

இணையதள முகவரி: Hiring Decoder

 • Share Icon
 • Facebook Icon
 • Twitter Icon
 • LinkedIn Icon
 • Reddit Icon
 • WhatsApp Icon
Share on
Report an issue
Authors

Related Tags