எளிமையான உயர்வான சிந்தனைகள் உடைய வினிதா ஜெயின்!
வினி’ஸ் ஃபுட்டின் வினிதா ஜெயினுக்கு வாழ்க்கை என்பது எளிமையான வாழ்க்கை முறையும் உயர்வான சிந்தனைகளும்தான்
பெங்களூரைச் சேர்ந்த வினிதா ஜெயின், சமையல் துறையில் ஒரு வெற்றிகரமான தொழில்முனைவராவார் என்று அவரது குடும்பத்தார் நினைத்துக்கூட பார்க்கவில்லை என்கிறார். இத்தாலிய உணவு வகைகளான பாஸ்தா பீஸா வகைகளை இவரின் வினி’ஸ் ஃபுட்ஸ் எளிதாகச் செய்ய உதவுகிறது.
பீஸா, பாஸ்தா போன்றவை சரியான படி தயாரித்தால் ஜங்க் உணவுகள் அல்ல என்ற எண்ணத்தை மக்களிடையே பரப்புகிறார். வினிதாவின் இந்த தொழில் முயற்சி வினிதாவின் மனதிற்கு உகந்ததான ஒரு விஷயத்திலிருந்து கிளைத்திருக்கிறது. வினிதாவுடைய மகனுக்குச் சில உணவு வகைகள் ஒவ்வாதவையாக இருந்திருக்கின்றன. அதனால் அவர் வீட்டிலேயே உணவு தயாரித்தலை விரும்பியிருக்கிறார். சந்தையில் கிடைக்காத சமையலுக்கான சாஸ் வகைகளைத் தானே தயாரித்து உறைய வைத்துப் பயன்படுத்துகையில் ஒருநாள் இதை ஏன் தொழில்முறையாகச் செய்யக் கூடாது என்ற எண்ணம் உதித்திருக்கிறது.
வினிதாவின் கல்வி மற்றும் தொழில் பின்னணிகளைப் பார்க்கையில் யாருக்கும் அவர் உணவு சார்ந்த தொழிலில் இருப்பாரெனக் கற்பனை கூடச் செய்து பார்த்திருக்க முடியாது. அஜ்மீரில் பிறந்த வளர்ந்த வினிதாவின் பெற்றோர் கற்றல் கற்பித்தல் துறையில் இருந்தார்கள். கணிதத்தில் ஈடுபாடு காட்டிய அவர் கட்டிட வல்லுனருக்கான படிப்பைப் படிக்க ஆசைப்பட்டார். கணிதத்தின் மீடு கொண்ட காதலால் அதைப் படிக்கத் தொடங்கிய அவர் கணிப்பொறியியல் சார்ந்த பாடங்களை அடுத்த விருப்பங்களாகக் கொண்டு தன் கல்வியை முடித்தார். பரம்பரையாக வந்த கற்பித்தல் திறனால் கல்லூரி நாட்களில் அவர் பிறருக்கு வகுப்பு எடுத்திருக்கிறார்.
ஆனால் அப்போதிலிருந்தே சாதாரணமான 9-5 மணிவரை செய்யும் வேலைகள் தனக்கு சரிப்பட்டு வராது என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். தான் விரும்பியதைச் செய்வதன் மீது அவருக்கு பெரிய ஈர்ப்பு இருந்தது.
பட்டப்படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்துகொண்டவருக்கு திருமணம் ஒரு புது அத்தியாயத்தைத் திறந்தது. அது அவரை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்னும் மூன்று வேறு வேறு நாடுகளின் மூன்று மாறுபட்ட கலாச்சாரங்களின் வாழ சந்தர்பத்தை ஏற்படுத்தியது. திருமணம் ஆனதிலிருந்து இப்போது வரை வினிதா இந்த மூன்று நாடுகளுக்கிடையே பத்து முறை குடிபெயர்ந்திருக்கிறார். முதல்முறை ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்கையில் குழந்தைவளர்ப்பு ஒருங்கிணைப்பாளராகத் தன் தொழில் வாழ்வைத் தொடங்கிய இவர் அதன் பின்னான குடிபெயர்தலில் ஒரு காப்பீட்டு நிறுவனத்திலும் பணிபுரிந்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இந்த இடமாற்றத்தினால் சற்றே நிலையின்மையை உணர்ந்தேன் ஆனால் இரண்டொரு முறைகளுக்குப் பின் பயணத்தை நான் விரும்ப ஆரம்பித்து விட்டேன் எனச் சொல்லும் இவர் தொடக்கத்தில் இருந்தே சுதந்திரமாக இருந்ததாகவும் குழந்தைகளுடன் தனியே பயணிப்பதை சிக்கலாகக் கருதியதில்லை எனவும் கூறுகிறார். குடியேறி, இடம்பெயர்ந்து வேறோர் இடத்தில் குடியேறுவதில் நிபுணத்துவம் பெற்றுவிட்டதாகக் கூறுகிறார்.
"இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு மகிழ்ச்சியான பெருமிதமான தாயாக இந்தியா திரும்பினேன். முழுநேரத் தாயாக ஒவ்வொரு கணத்தையும் ரசித்து அனுபவித்தேன்". குழந்தைகள் தான் எனக்கு முதன்மையாகப் பட்டது எனச் சொல்லும் அவர் அதேசமயம் வேலை பார்க்க வேண்டும் என்னும் பொறி அணையாமல் அப்படியே இருந்ததாகச் சொல்கிறார். சில மாதங்கள் தன் ஒன்றுவிட்ட சகோதரனுடன் சேர்ந்து பதாகைகளை நிறுவனங்களுக்கானச் சின்னங்களை வடிவமைப்பதை கற்றுக் கொண்டார். அவரிடமிருந்து பெற்ற அறிவு ஒரு பொருளை எப்படி சந்தைப்படுத்த வேண்டும், வாடிக்கையாளர்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதையெல்லாம் தனக்குச் சொல்லிக் கொடுத்ததாக்க் கூறுகிறார்.
திருமணத்திற்கு முன் பெரிதாகச் சமையல் தெரியாதெனவும் தன் தாய் சமைப்பதை பார்க்க மட்டுமே செய்ததாகவும் வெளிநாட்டில் வசிக்கையிலே சமைக்கும்போது தனக்கு நன்றாகச் சமைக்க வரும் என அறிந்ததாகச் சொல்கிறார். குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் வரையில் தன்னார்வத் தொண்டுகளும் பகுதிநேர வேலைகளும் செய்து வந்தார். “புதிய மனிதர்களை எனக்குச் சந்திக்கப் பிடிக்கும். நான் வாழ்ந்த இடங்களிலெல்லாம் இந்தியர்களுடனும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களுடனும் நல்ல நட்புறவை உருவாக்கிக் கொண்டேன். நான் சமைக்கும் உணவு அனைவருக்கும் பிடித்தது. இதுவே என்னைப் புதிதாக எதையேனும் சமைக்கத் தூண்டியது” எனக் கூறுகிறார். வினிதாவும் அவருடைய இந்திய நண்பர்களும் சிலநேரம் ஒன்றுகூடிச் சமைத்து மகிழ்ந்தனர். “நான் ஒவ்வொரு நாட்டுக்குச் செல்லும்போது உணவுமீதான என் ஈர்ப்பு அதிகரிப்பதை உணர்ந்தேன். புதிய பன்னாட்டு உணவு வகைகளை முயல ஆரம்பித்தேன், அதை ஆஸ்திரேலியாவின் என் தொடக்க வருடங்களின் செய்ததில்லை எனவும் சொல்கிறார். ப்ரிஸ்பேனிலிருந்த சொந்தமாக உணவகம் நடத்தி வந்த சமையல் வல்லுனரான நண்பர், வினிதாவின் சமையல் குறிப்புகளை மெருகேற்றியிருக்கிறார்.
இங்கிலாந்தில் இருக்கையில் இரண்டாவது குழந்தை இருந்ததால் அவரின் பெரும்பான்மை நேரம் வீட்டிலேயே கழிந்தது. குடும்பத் துணையின்றி வெளிநாட்டில் வாழும் பெண்ணாகையால் வினிதாவுக்கு பணிச்சுமைகள் அதிகம் இருந்தன. “என் பெரும்பான்மை நேரம் குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மாலையில் கூட்டி வருதல், டென்னிஸ் விளையாடல், பூங்காவிற்குச் செல்லல் என்றே கழிந்தது. நிமிரக் கூட நேரமின்றி வேலையிருந்தாலும், குழந்தைகளுக்காகச் செய்ததாலும் வண்டி ஓட்டுதல் பிடித்துப்போனதாலும் அந்த நாட்களை நான் மிகவும் விரும்பினேன். குழந்தைகளுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். பொழுது போக்க எனக்கு நல்ல நண்பர்கள் இருந்ததனால் அவர்களுடன் என் ஓய்வு நேரத்தைச் செலவிட்டேன்” என்கிறார்
வண்டி ஓட்டுதல் அவருடைய ஒரு காதல் என்றே சொல்லலாம். வண்டி ஓட்டுகையில் தான் போகும் பாதையைத் தான் நிர்ணயிக்கும் சுதந்திரம் வினிதாவுக்கு சொல்லமுடியாத மகிழ்ச்சியைச் தந்தது. ஆஸ்திரேலியாவிலும் இங்கிலாந்திலும் வண்டி ஓட்டுதல் ஒரு சுகமான அனுபவம். கார் பயணம் என்று வந்துவிட்டால் நான் வண்டி ஓட்டுதலையே விரும்புகிறேன், நியூசிலாந்தின் சவுத் தீவுகள் முழுக்க நான் வண்டி ஓட்டியிருக்கிறேன். ஒரு ஐந்து வயதுக் குழந்தை ஒரு ஏழு மாதக் குழந்தையை வைத்துக் கொண்டு பத்து நாளில் மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் வண்டி ஓட்டியிருக்கிறேன். என் கணவருக்கும் பயணப்படுதல் பிடிக்கும் என்பதால் நாங்கள் இருவருமே பயணத்திற்கு குழந்தைகளைத் தடையாகக் கருதியதில்லை. குழந்தைகள் பயணங்களின்போது இருப்பது நல்லது ஏனெனில் அவர்கள் நம்மிடமிருந்து கூடுதல் கவனத்தைப் பெறுவார்கள். சில நேரங்களில் நாங்கள் தங்கும் வசதி கொண்ட வாகனங்களை வாடகைக்கு எடுத்துத் திராட்சைத் தோட்டங்களுக்கு நீண்ட தூரப் பிரயாணங்கள் செல்வோம். கார் ஓட்டுதல் நான் இந்தியாவில்தான் கற்றுக் கொண்டேன் ஆனால் கார் இல்லாமையால் இங்கு ஓட்டியதில்லை. ஆஸ்திரேலியாவில் ஒரு டொயோட்டா கரோல்லாவும் ஒரு பி. எம். டபிள்யூவும், இங்கிலாந்தில் ஒரு நிஸானும் வைத்திருந்தேன். இங்கு நான் ஒரு ஐ20 ஓட்டுகிறேன். ஒரு மினி வாங்க வேண்டும் என்பது கனவு” என்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இரு மகன்களும் இசை கற்றுக்கொண்டமையால், வினிதா மகன்களைப் பார்த்துத் தானும் ஒரு இசைக்கருவி கற்க ஆசைப்பட்டு புல்லாங்குழல் வக்குப்புகளில் சேர்ந்தார். ”நான் எதையும் வேகமாகக் கற்றுக் கொண்டு விடுவேன் ஆனால் பயிற்சி இல்லாததனால் வாசிப்பு விட்டுப் போய்விட்டது. என் புல்லாங்குழலோடு நேரம் செலவிட்டு திரும்பவும் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும்” எனக் கூறுகிறார்
வினிதா கற்றுக்கொள்வதற்கு என்றுமே தயாராக இருந்திருக்கிறார். அது நண்பராகட்டும் அல்லது மூன்றாவது நபராகட்டும். “இங்கிலாந்தில் நாங்கள் இப்ஸ்விச் என்ற ஊரில் இருந்தோம். அப்போது தெருவில் ஒரு சிறிய கடையில் டோனட்கள் செய்து விற்கும் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அதைப் போன்ற சுவையான டோனட்களை என் வாழ்வில் நான் சாப்பிட்டதே இல்லை. அவள் டோனட் தயாரித்து விற்று தனியாளாகக் கடைநடத்துவதைப் பார்க்க மிக ஆச்சர்யமாக இருக்கும். தான் நினைத்ததை ஒருவரால் செய்ய முடியும் என்பதை அந்தப் பெண் எனக்கு ஞாபகப்படுத்திக் கொண்டேயிருந்தாள். சார்ந்திருத்தல் நம்மை மனதளவில் பலகீனமாக்கிவிடும். அவள் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் காணப்படுவாள். குழந்தைகள் டோனட்களை ருசித்துக் கொண்டிருக்கையில் நான் அவளோடு பேசிக்கொண்டிருப்பேன். அவள் செய்வதை மனது வைத்துச் செய்கிறாள் என்பதற்கு அந்த டோனட்டின் சுவைகளே சாட்சி. உணவு தயாரித்தல் உள்ளன்போடும் நல்ல எண்ணங்களோடும் செய்யப்பட வேண்டும். இல்லையேல் அது ருசிக்காது” எனக் கூறுகிறார்.
மேலும் அவர் “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சிறந்த விஷயம் அவர்கள் ஒருவரோடு ஒருவர் பழகுதல் தான். எவ்வளவு எரிச்சலூட்டும் விஷயங்கள் நடந்தாலும் அவர்கள் தங்கள் வாடிக்கையாளரிடத்தே இன்முகத்துடனும் மிகுந்த மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள். ஒரு காய்கறிக் கடையில் கூட வாங்க எப்படி இருக்கீங்க என விசாரிப்பார்கள். சிடுசிடுத்த முகத்துடன் ஒரு ஆஸ்திரேலியனை கல்லாவிலோ அல்லது கடையில் வேறு எங்குமோ காண முடியாது.
மற்றவர்களை உபசரிப்பது மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களை எப்படி உபசரிப்பது என்று அவர்களிடம் தெரிந்துகொண்டேன். வாடிக்கையாளரை மகிழ்விப்பது தொழில்முனைவோராக இருத்தலின் ஒரு முக்கியமான பங்காகும்” எனக் கூறுகிறார்
ஒரு தொழில்முனைவராக இருத்தல் அவ்வளவு எளிதான காரியம் இல்லை. நேர மேலான்மை மிகப்பெரிய சிக்கல். தன் தொழில் முயற்சியைத் தொடங்குகையில் வினிதா தயாரித்தல், சந்தைப்படுத்தல், கணக்கு வழக்குகளைப் பார்த்தல் மேலும் வீடு குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுதல் என மிகவும் சிரமப்பட்டார். அவ்வப்போது எரிச்சலூட்டினாலும் ஒவ்வொரு முறையும் நீ இன்னும் இதைச் செய்ய விரும்புகிறாயா எனக் கேட்டுக் கொண்டார் மற்றும் அதன் பதில் எப்போதும் ஆம் என்பதாகவே அமைந்தது. அவருடைய குழு சரியான இடத்திற்கு வந்ததும் வேலைகள் சுலபமாயிற்று.
“இந்த நிலையில் நான் பெரிய அளவின் பணம் ஈட்டவில்லை என்றாலும் எனக்கு இது திருப்தியளிக்கிறது மற்றும் ஒரு அறிவுசார்ந்த தூண்டுதல் இருக்கிறது. முன்னைவிட எனக்கு நம்பிக்கையும் சுதந்திரமும் அதிகமாகி இருக்கிறது” எனச் சொல்கிறார்.
வினிஸ் ஃபுட்டைத் தவிர தன் தோழி ஒருத்தியின் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்த உதவுகிறார். அவர்களின் நிகழ்ச்சிகளை அமைக்க உதவுகிறார். “ நான் ஒரு காலத்தில் நிறைய புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் தற்போது நேரமே இருப்பதில்லை. நாளின் இறுதியில் உறங்கப் போகும் முன் சற்று நேரம் தொலைக்காட்சியைப் பார்க்கிறேன்” “தனிப்பட்ட முறையில் எனக்குத் தாய் உணவுகள் பிடிக்கும். அசலான தாய் உணவுகளைச் சமைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆசை. எனக்கு நடப்பது பிடிக்கும் அதனால் தினமும் என் நெருங்கிய நண்பர்களுடன் ஒரு சின்ன நடை இருக்குமாறு பார்த்துக் கொள்கிறேன். அதுவே நாளின் மிகச்சிறந்த நேரம் அப்போதுதான் நாங்கள் நிறைய பேசவும் முடிகிறது” எனப் புன்னகையுடன் கூறுகிறார்.
வினிதா தன்னை ஒரு எளிமையான ஆளாகச் சொல்லிக்கொள்கிறார். சுகமான ஆடைகள் உடுத்திக் கொள்ள அவருக்குப் பிடிக்கும் மற்றும் பாரம்பரிய உடையணிதல் விருப்பமான விஷயம்", எனக்கு என்கிறார். நவீன உடைகளை நான் வரவேற்கிறேன் ஆனால் ஒவ்வொரு முறையும் நான் பாரம்பரிய உடைகளையே தேர்ந்தெடுக்கிறேன். முன்னால் பழுப்புச் சாயல்கொண்ட வண்ணங்கள் பிடித்திருந்தன ஆனால் இப்போதெல்லாம் பளீரென்று இருக்கும் வண்ணங்கள் பிடித்திருக்கின்றன”. மேலும் அவர் “ எனக்கு ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்கள் மிகவும் பிடிக்கும். ஆரஞ்சு என் ஆளுமைக்கு ஒரு உத்வேகத்தைத் தருகிறது.
ஒப்பனை என்று வரும்போது நான் இயல்பாக இருப்பதையே தேர்வு செய்கிறேன். ஒற்றைக் கல்வைத்த நகைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. எடுப்பான, உன்னதமான அதே சமயம் எளிமையாக இருப்பவைகளையே நான் அணிய விரும்புகிறேன். பயணமும் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தலும் வினிதாவிற்கு முக்கியமான வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ளது. “ நான் யாருக்கு உதவ வேண்டும்? எவ்வளவு உதவ வேண்டும்? மேலும் என்னால் முடியாது என்று தீர்க்கமாக அதே சமயம் பணிவாகச் சொல்வதற்கும் கற்றுக் கொண்டேன்” என்கிறார்.
தன்னுடைய தொழிலை, முயற்சிகளை தினமும் மெருகேற்றி வளர்த்தெடுக்கும் இந்த தொழில்முனைவோர் வாழ்க்கை வினிதாவிற்குப் பிடித்திருக்கிறது. “நான் சரியான பாதையில் போய்க்கொண்ட்டிருப்பதாக உணர்கிறேன் ஏனெனில் இதைச் செய்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். புதிதாகச் செய்த, பதனிடும் பொருட்கள் இல்லாத உணவுக்கான சந்தையில் என்னை நான் ஒரு பெரிய அடையாளமாகப் பார்க்க்கிறேன். நிறைய பெண்களுக்கு வேலைவாய்ப்பு தருவதன் மூலம் உதவ நினைக்கிறேன். எல்லோருடைய வாங்கவேண்டிய பொருள் பட்டியலிலும் வினிஸ் சாஸ்கள் இருப்பதைப் பார்க்க விழைகிறேன்” என்கிறார்.
“ஆண்களை விட பெண்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால் பெண்ணாக இருப்பது ஒரு சவால். பெண்களுக்குச் சம உரிமை கொடுத்து தன்னம்பிக்கை உள்ளவளாக வளர்க்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தது என் அதிர்ஷ்டம். எனக்கான சுதந்திரத்தையும் இடத்தையும் தரும் ஒரு ஆணைத்தான் நான் மணந்திருக்கிறேன். அவர் திறம்பட சமைப்பார். உணவை சிறப்பாக தயாரிப்பதற்கும் சிறப்பாக அலங்கரித்துப் பரிமாறுவதற்கும், அவர் எனக்குத் தூண்டுதலாய் இருந்திருக்கிறார். ஒரு சிறப்பான நேர்மையான விமர்சமராக இருந்து அவர் எனக்குப் பிடித்தமான சமையலை தொழிலாகச் செய்ய என்னை ஊக்குவிக்கிறார்” என்கிறார்.
பெண்கள் வீட்டிலே செய்யும் வேலைகளுக்கான மரியாதை தரப்பட்டு மொத்தக் குடும்பமும் அவரை ஆதரிக்குமாயின் நம் சமுதாயம் இன்று இருப்பதை விட மேலான நிலைக்குச் செல்லும் என நம்புகிறார். பணம் சம்பாதித்து வீட்டுக்குக் கொண்டு வருதல் மட்டும் வாழ்க்கையாகி விடாது. ஒரு பெண் வேலைக்குச் செல்வதைத் தவிர்த்து குடும்பத்தை மட்டும் கவனிக்க முடிவு செய்வாளாயின் ஒரு வேலைக்குச் செல்லும் பெண்ணுக்குத் தரப்படும் மரியாதை அவளுக்கும் தரப்பட வேண்டும்.