1 கோடி ரூபாய் முதலீடு பெற்றது தமிழக ஸ்டார்ட்-அப் ’GUVI’
சென்னை ஸ்டார்ட்-அப் GUVI, அமெரிக்க முதலீட்டு நிறுவனம் Gray Matters Capital இடம் இருந்து 1 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றுள்ளது. ஐஐடி மெட்ராஸ் இன்குபேஷன் மையத்தின் கீழ் செயல்பட்ட இந்நிறுவனம் பல்வேறு திறன் சார்ந்த கல்வித் திட்டங்களை பிராந்திய மொழிகளில் வழங்குகிறது.
குறிப்பாக கோடிங் என்று சொல்லப்படும் தொழில்நுட்பக் குறியீட்டுகளை அவரவரின் தாய் மொழில் கற்பது நல்ல பயனை அளிக்கும் எனும் நோக்கில் இவக்ரள் பல மொழிகளில் Coding பாடப்பயிற்சிகளை தயாரித்து ஆன்லைன் வழி கற்றுத்தர வழி செய்கின்றனர்.
தமிழ் மொழியிலும் குறியீட்டு (Coding) கற்றலை வழங்கும் GUVI, மதுரையைச் சேர்ந்த அருண்பிரகாஷ் எனும் தகவல் தொழில்நுட்ப பட்டதாரி மற்றும் அவரது நண்பரகளால் துவங்கப்பட்டது.
____________________________________________________________________________________________
இவர்களைப் பற்றி விரிவாக படிக்க: தமிழில் தொழில்நுட்பப் பாடங்களை வழங்கும் ஒரு தமிழனின் படைப்பு!
____________________________________________________________________________________________
அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டுள்ள Gray Matters Capital-ன் edLabs எனும் திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த guvi-க்கு முதலீடு வழங்கப்பட்டுள்ளது. இதுவே GUVI பெற்றுள்ள முதல் முதலீடாகும் என்றும் இந்த தொகை தெற்காசியாவில் இவர்களின் விரிவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு தாண்டி பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிலையங்களுடன் சேர்ந்து இப்பயிற்சி திட்டங்களை வழங்கி, வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவ உள்ளது. Guvi-ன் முக்கிய இலக்கான 2020க்குள் இந்தியாவில் 10 லட்சம் கோடர்களை உருவாக்கும் நோக்கத்தில் மாணவிகள் பலரை இணைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிறுவனர்கள் தெரிவித்துள்ளனர்.