யுவர்ஸ்டோரி-ன் மிகப்பெரிய மாநாடான ’TechSparks': பங்கேற்பதற்கான 10 காரணங்கள்!
யுவர் ஸ்டோரியின் ஆண்டு விழாவான ’டெக் ஸ்பார்க்ஸ்’ மாநாட்டிற்கான கவுண்ட் டவுன் துவங்கிவிட்டது. இந்த மாநாடு மூலம் உங்களுக்குக் கிடைக்க கூடிய பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.
சிறந்த தொழில்நுட்ப மனிதர்கள், இந்தியா மற்றும் வெளிநாட்டின் முன்னணி வி.சி.கள்(VC), இந்திய ஸ்டார்ட் அப் சூழலின் நாயகர், நாயகிகள், முன்னோடிகள், அரசு அதிகாரிகள் என எல்லோரையும் ஓரே ஒரு இடத்தில் நீங்கள் பார்க்க முடியும் தெரியுமா? இந்த எல்லோரையும் ஒரே கூரையின் கீழ் பார்க்க முடிவது தான் டெக் ஸ்பார்க்ஸ் விழாவை மறக்க முடியாத அனுபவமாக மாற்றுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டார்ட் அப் மாநாடான, யுவர்ஸ்டோரியின் TechSparks நிகழ்ச்சி பெங்களூருவில் அக்டோபர் 11 மற்றும் 12 ம் தேதிகளில் நடைபெற உள்ளது. டெக் ஸ்பார்க்சின் இந்த 10வது பதிப்பு, ’அனைவரையும் உள்ளடக்கிய, எதிர்காலத்திற்குத் தயாரான, அறிவு சார்ந்த- இந்தியா 2025 ல் கவனம் செலுத்தும்.
2025ல் இந்தியா எப்படி இருக்கும் என்பதையும், அதை அடைய இன்றைய இந்தியாவின் எந்த அம்சங்களுடன் நாம் முன்னேறிச்செல்வோம் என்பதையும் இந்த மாநாடு ஆய்வு செய்யும்.
அதிக உற்சாகம் மற்றும் துடிப்பு ஆகியவை டெக் ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியை மறக்க முடியாத அனுபவமாக்குகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்ற எவரும் இதையே சொல்வார்கள். எனினும், இந்த ஆண்டு முதல் முறையாக பங்கேற்க இருப்பவர்களுக்காக, யுவர் ஸ்டோரியின் டெக் ஸ்பார்க்ஸ் மாநாட்டின் 10வது பதிப்பில், மறக்க முடியாத அனுபவத்தை பெற நீங்கள் ஏன் பங்கேற்க வேண்டும் என்பதற்கான 10 காரணங்கள் இதோ:
ஸ்டார்ட் அப் சூழல் சூப்பர் ஹீரோக்கள்
மார்வெலின் அனைத்து சூப்பர் ஹீரோக்களும் ஒரே இடத்தில் கற்பனை செய்து பாருங்கள், டெக் ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில், ஸ்டார்ட் அப் சூழலின் முன்னணி மனிதர்களுடன் உரையாடும் வாய்ப்பை நீங்கள் பெறலாம்.
இந்த ஆண்டு பேச்சாளர்கள் பட்டியலில், ஸ்டார்ட் அப் நாயகர்கள், விஜய் சேகர் சர்மா (பேடிஎம் நிறுவனர், சி.இ.ஓ, மற்றும் பாவிஷ் அகர்வால் (ஓலா இணை நிறுவனர், சி.இ.ஓ) ஆகியோர் உள்ளனர்.
மற்ற முன்னணி பேச்சாளர்களாக, முனிஷ் வர்மா (சாப்ட்பேங்க் இன்வெஸ்ட்மண்ட் அட்வைசர்ஸ், நிர்வாக பார்ட்னர், கல்யாண் கிருஷ்ணமூர்த்தி (ஃபிளிப்கார்ட் சி.இ.ஓ), வில்லியம் பிஸெல் (ஃபேபின்ந்தியா தலைவர்), டாப்சி பன்னு (நடிகர், தொழில் முனைவர்), நவீன் திவாரி, (நிறுவனர், சி.இ.ஓ, இன்மொபி), பைஜு ரவீந்திரன் (பைஜூ, நிறுவனர், சி.இ.ஓ), மீத்தா மல்ஹோத்ரா (தி ஹார்டு காபி நிறுவனர்), அஞ்சனா சசீதரன் (செக்கோயா கேபிட்டல் பிரின்சிபல்), வர்ஷா டாக்ரே (குவால்கம் வென்ச்சர்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர்), மனு ஜெயின் (ஜியோமி இந்தியா துணைத்தலைவர், நிர்வாக இயக்குனர், எஸ்.ஈஸ்வரன் (சிங்கப்பூர் தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை பொறுப்பு வகிக்கும் அமைச்சர் ஆகியோர் வர உள்ளனர்.
இது மட்டும் அல்ல. 2019 டெக் ஸ்பார்க்ஸ் மாநாட்டின் முழு பேச்சாளர்கள் பட்டியல் இங்கே உள்ளது.
சிறந்தவர்களிடம் இருந்து பாடம்
இந்தியாவில் தொழில்நுட்பச் சூழலுக்குள் உரையாடல் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான மிகப்பெரிய மேடையாக டெக் ஸ்பார்க்ஸ் அமைகிறது. துறையின் முன்னோடிகள் தங்கள் அனுபங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதைக் கேளுங்கள்.
மேலும், தொழில்நுட்ப உள்ளடக்கியத்தன்மையை கற்றுக்கொண்டு, எதிர்கால தயார் நிலை குறித்து பரந்த உரையாடலில் ஈடுபட்டு, நம் எதிர்காலத்தை எப்படி தொழில்நுட்பம் தீர்மானிக்கும் என்பதை கற்றுக்கொள்ளவும் வாய்ப்பாக அமையும்.
நெட்வர்க் செயுங்கள்
கடந்த ஆண்டுகளில், டெக் ஸ்பார்க்ஸ் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தொடர்புகளை உண்டாக்கி தந்திருக்கிறது. 9 ஆண்டுகளில், 30,000 இதில் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 10,000 பேர் ஸ்டார்ட் அப்பை சேர்ந்தவர்கள்.
மாநாட்டில் 3,000 பேருக்கு மேல் பங்கேற்க உள்ள நிலையில், வலைப்பின்னலுக்கான வாய்ப்புகளுக்கு குறைவில்லை. தொழில்முனைவோர்கள், முதலீட்டாளர்கள், அரசு அதிகாரிகள். உயர் அதிகாரிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்சேர்ந்த சி.இ.ஓக்கள் ஆகியோரை சந்தித்து கருத்துக்களை பரிமாறிக்கொண்டு, வலைப்பின்னலை விரிவாக்கிக் கொள்ளலாம். அது மட்டும் அல்ல, நீங்கள் வழிகாட்டிகள், பங்குதாரர் மற்றும் வாடிக்கையாளர் எல்லோரையும் ஒரே இடத்தில் பார்க்கலாம்.
எல்லோருக்கும் எதாவது ஒன்று நிச்சயம் இருக்கும். எனவே உங்கள் வர்த்தக கார்டை தயாராக வைத்திருக்கவும்.
VC-க்களுடன் விரைவு சந்திப்பு
கடந்த ஆண்டுகளில் டெக் ஸ்பார்க்ஸ் நிறுவனங்கள் ஒரு பில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்ட வழி செய்துள்ளது. உங்களுக்கு பொருத்தமான முன்னணி முதலீட்டாளரைத் தேடி கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பாக இந்த ஆண்டின் ஸ்பீட் டேட் வித் விசி’ஸ் அமையும்.
டெக் ஸ்பார்க்ஸ் இன்வெஸ்டர்- ஸ்பீட் டேட்டிங், முதலீட்டாளர்களிடம் உங்கள் ஐடியாக்களை நேரடியாக விவரிப்பதற்கான மேடையாகும். சரியான பொருத்தத்தை ஏற்படுத்த ஸ்டார்ட் அப்கள் மற்றும் முதலீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எனவே முதலீட்டாளர்களை கண்டறிய டெக் ஸ்பார்கள் 10 வது பதிப்பிற்கு வாருங்கள்!
டெக் 30 காட்சி
ஆண்டுதோறும் யுவர் ஸ்டோரி தேர்வு செய்து ஆதரிக்கும் 30 பிரகாசமான ஸ்டார்ட் அப்களை கொண்டாடுவதற்கான வாய்ப்பாகவும் டெக் ஸ்பார்க்ஸ் அமைகிறது. அவற்றை மிகச்சிறந்தவையாக ஆக்குவது எது என கண்டறியுங்கள், அடுத்த ஆண்டு நீங்களும் மேடையேறலாம்.
கடந்த ஆண்டுகளின் டெக் 30 ஸ்டார்ட் அப்கள் பட்டியல்
இந்திய ஸ்டார்ட் அப் சூழல் அறிக்கை
வளரும் பிரகாசமான தொழில்நுட்பப் புதுமைகள் அடங்கிய, இந்திய ஸ்டார்ட் அப் சூழல் தொடர்பான தீர்மானமான அறிக்கையை டெக் ஸ்பார்க்ஸ் மாநாட்டில் அறிமுகம் செய்ய உள்ளோம். ஸ்டார்ட் அப் சூழல் தொடர்பான தனித்தன்மை வாய்ந்த, அறிக்கையாக இது அமைகிறது.
உருவாக்குவதில் மட்டும் அல்லாமல், நீடித்த வளர்ச்சி பெறவும், தரவுகள் சார்ந்த மேம்பட்ட முடிவுகள் எடுக்கவும் வழி செய்து, எதிர்காலத்திற்கு நம்மை தயாராகி கொள்வதற்கான தொழில்நுட்பம் தொடர்பான புரிதல் மற்றும் போக்குகளை இதன் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.
பயிலறங்குகள்
தொழில்துறை வல்லுனர்கள் தங்கள் அனுபவம், கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் வகையில், டெக் ஸ்பார்க்ஸ் 2019 மாநாட்டை முன்னிட்டு பல பயிலறங்குகளுக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.
“குறைவாக செய்வதன் மூலம் அதிகம் பெறுவது எப்படி?” மற்றும் ‘பிராண்டிங் பிளேபுக் பார் ஸ்டார்ட் அப்ஸ்” உள்ளிட்ட பயிலறங்குகள் நடைபெற உள்ளன.
வேலை வாய்ப்புகள்
அரசு, இன்குபேட்டர்கள், ‘விசி’, ஸ்டார்ட் அப்கள் பங்கேற்க இருப்பதால, வேலைவாய்ப்பு தேடுபவர்கள் பொருத்தமான நிறுவனங்களை சந்திப்பதற்கான நல்ல வாய்ப்பாக இது அமையும்.
உங்களை நோக்கி எந்த வாய்ப்பு வரும் என்று உங்களுக்குத்தெரியாது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உரையாடலை துவக்குவது தான்.
கண்காட்சி
இந்த டெக் ஸ்பார்க்ஸ் மாநாட்டில் 60 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்காட்சி அரங்கு அமைக்க இருப்பதால், இந்தியாவில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து கண்டறியவும், கற்றுக்கொள்ளவும் நிறைய வாய்ப்புள்ளது.
யுவர் ஸ்டோரி குழு
மேலும் யுவர் ஸ்டோரி குழுவையும் சந்திக்கும் வாய்ப்பை பெறலாம். உங்கள் கதைகளை சொல்ல யுவர் ஸ்டோரி ஆசிரியர் குழுவை சந்தியுங்கள் அல்லது டெக் ஸ்பார்க்ஸ் நிகழ்ச்சியில் #tsparks என குறும்பதிவு செய்வதன் மூலம் பரிசுகளை வெல்வதை பற்றி அறிய எங்கள் சமூக ஊடகக் குழுவை சந்தியுங்கள்.
அல்லது ஆர்வத்துடன் வந்து, தொடர்பு கொண்டு, உங்கள் ஊக்கம் தரும் ஸ்டார்ட் அப் கதையை சொல்லுங்கள்.
டெக் ஸ்பார்க்ஸ் 10 வது பதிப்பில் உங்களை பார்க்கலாம். டெக் ஸ்பார்க்ஸ் 2019 பற்றி மேலும் விவரங்களுக்கு. டிக்கெட் பதிவு செய்ய இங்கே.
ஆங்கில கட்டுரையாளர்: தன்வி துபே | தமிழில்: சைபர்சிம்மன்