அமேசான் நிறுவனத்தில் ரூ.1.2 கோடி சம்பளம்: அசத்திய லக்னோ ஐஐஐடி மாணவர்!
லக்னோவில் உள்ள ஐஐஐடி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர் ஒருவருக்கு 1.2 கோடி ரூபாயில் அயர்லாந்தின் டப்ளினில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளராக வேலை கிடைத்துள்ளது.
லக்னோவில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தில் படித்த மாணவர் ஒருவருக்கு 1.2 கோடி ரூபாயில் அயர்லாந்தின் டப்ளினில் உள்ள அமேசான் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளராக வேலை கிடைத்துள்ளது.
கொரோனா காலத்தில் வேலை கிடைப்பது என்பதே மிகவும் கடினமானதாக மாறியது. குறிப்பாக வீட்டிலிருந்தே பணியாளர்களை வேலை பார்க்க அனுமதித்த ஐ.டி. நிறுவனங்கள் பலவும், திடீர் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியதால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்தது.
பல்வேறு நிறுவனங்கள் ஊதியத்தை பாதியாக குறைக்கும் நிலைக்கு ஆளாகின. இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையால் கடந்த 2 ஆண்டுகளாகவே எந்த நிறுவனமும், கல்வி நிலையங்களில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தி மாணவர்களை வேலைக்கு எடுக்கவில்லை.
இந்நிலையில், லக்னோ ஐஐஐடி கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர் ஒருவருக்கு 1.2 கோடி சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளது. சோசியல் மீடியாவில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
ஐஐஐடி-யில் அனைத்து வகையான பொறியியல் படிப்புகளுமே நடத்தப்பட்டு வரும் நிலையில், ஐஐஐஐடி கல்வி நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி மட்டுமே கற்பிக்கப்படுகிறது.
இதேபோல், லக்னோவில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் அண்ட் டெக்னாலஜி (IIIT)-யில் பிடெக் இறுதியாண்டு படிக்கும் மாணவர் அபிஜித் திவேதி-க்கு 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் அமேசான் நிறுவனம் தனது அயர்லாந்து நாட்டின் டப்லின் அலுவலகத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் பணியைக் கொடுத்துள்ளது.
தனது வருடாந்தர பேக்கேஜ் மூலமாக முந்தைய அனைத்து வேலை வாய்ப்பு சாதனைகளையும் பிரயாக்ராஜ் முறியடித்துள்ளார்.
"நேர்காணலுக்கு என்னை தயார்படுத்த பல வீடியோக்களை நான் பார்த்தேன். மென் திறன்கள் மிகவும் முக்கியம், எனவே பொறியியல் பட்டதாரிகள் தங்களுக்கு தொழில்நுட்ப அறிவு மட்டுமே தேவை என்று நினைக்க வேண்டாம். தொடர்பு திறன் மற்றும் உடல் மொழி ஆகியவை சமமாக முக்கியம்,” எனக்கூறுகிறார்.
அபிஜீத் வேலை வாய்ப்பு தேடும் மற்ற பட்டதாரிகளுக்கான சில குறிப்புகளையும் பகிர்ந்து கொண்டார்.
“ஒரு நல்ல வேலை கிடைக்க சில விஷயங்களில் வேலை செய்ய வேண்டும். வேலை வாய்ப்புகளைப் பற்றி தெரிந்துகொள்ள மூத்தவர்களுடன் தொடர்பில் இருப்பது மற்றும் நேர்காணல்களில் வெற்றிபெற அவர்களிடமிருந்து உதவிக்குறிப்புகளைப் பெறுவது போன்ற இணைப்புகளை உருவாக்குங்கள்,” என்று அவர் கூறினார்.
புதிய வேலை வாய்ப்புகளுடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படும் பிரபலமான வேலைவாய்ப்பு இணையதளங்களில் சுயவிவரங்களை உருவாக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஐஐஐடி-லக்னோவைப் பொறுத்தவரை, இது ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்துள்ளது. 1.2 கோடி சம்பளத்துடன் அபிஜீத் அமேசான் நிறுவன பணியாளர்களாக நியமன ஆணை பெற்றுது மட்டுமல்ல, நிறுவனம் அதன் மாணவர்களுக்கு 100% வேலை வாய்ப்பைப் பெறுவதில் வெற்றி பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில் 61 மாணவர்களுக்கு வேலை கிடைத்துள்ளது, நான்கு பேர் உயர் படிப்பு படிக்க சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஆண்டு சராசரி ஊதிய தொகுப்பு ஆண்டுக்கு ரூ.26 லட்சமாக இருந்தது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் இது அதிகமானதாக உள்ளது.
ஐஐஐடி-லக்னோ இயக்குனர் டாக்டர் அருண் மோகன் ஷெர்ரியின் கூறுகையில்,
“கடந்த ஆண்டு வரை அதிகபட்ச சம்பளம் ரூ.40 லட்சமாக இருந்தது. இப்போதும் நாம் சரியான பாதையில் செல்கிறோம்,” என்பதை இது காட்டுகிறது எனத் தெரிவித்தார்.
ஐஐஐடி லக்னோ கல்லூரியில் பிடெக் இறுதியாண்டு படித்த அபிஜித் திவேதி 1.2 கோடி ரூபாய் சம்பளத்தில் அமேசான் நிறுவனம் தனது அயர்லாந்து நாட்டின் டப்ளின் அலுவலகத்தில் சாப்ட்வேர் டெவலப்மென்ட் இன்ஜினியர் பணியை கொடுத்துள்ளது, இதற்காக பலரும் அபிஜீத்தை வாழ்த்தி வருகின்றனர்.
தொகுப்பு: கனிமொழி